Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• மீண்டும் அமெரிக்க அதிபரான ஒபாமாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. ஒபாமா கொண்டாட்டத்தில் இருக்க, தோற்ற ரோம்னியோ ''மீண்டும் ஒபாமாவா? மக்களுக்கு செம போர்அடிக் கும்!'' என்று கிண்டல் அடித் திருக்கிறார். ஒபாமா வென்ற தும் முதலில் யாருக்கு நன்றி சொன்னார் தெரியுமா? தனக் காகப் பிரசாரம் செய்த பில் கிளிண்டனுக்குத்தான். ரோம்னி நீங்க வந்தா போர் நடக்குமே!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• சர்வதேச போலீஸ் அமைப்பான 'இன்டர்போல்’ தலைவர் ஆகி இருக்கிறார் 58 வயதான இரும்பு லேடி மிரிலி பாலஸ்டிராசி. பிரான்ஸ் காவல் துறை முன்னாள் ஐ.ஜி-யான இவர், 35 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளுக்கான இன்டர்போலில் துணைத் தலைவராக இருந்தவர். ''எல்லாக் குற்றங்களையும் சமாளிக்க முடியும். ஆனால், சைபர் குற்றங்களை எதிர்கொள்வதுதான் சவாலாக இருக்கிறது. அதற்கான தொழில்நுட்பங்களில் நாம் இன்னும் முன்னேற வேண்டும்'' என்றிருக்கிறார். இங்கேயும் அதே பிரச்னைதான் மேடம்!

• அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 'ஸ்பாட் தி ஸ்டேஷன்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச நாடுகள் இணைந்து உருவாக்கி இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகத்தைச் சுற்றி வருகிறது. நாசா இணையதளத்தில் நம்மைப் பற்றி தகவல்களைப் பதிவுசெய்துவிட்டால், பறக்கும் ஆராய்ச்சி நிலையம் நமது ஏரியாவுக்கு மேல் வருகிற நாளை முன்கூட்டியே சொல்லி தகவல் தட்டிவிடுவார்கள். அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால், மொட்டை மாடிக்கு ஓடுங்க. நாசா பற பற!

இன்பாக்ஸ்

• சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்’ இந்தியில் மெகா பட்ஜெட்டில் 'ராங்ரெஜ்’ என்ற பெயரில் தயாராகிறது. பிரியதர்ஷனோடு 17 வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கூடவே கை கோத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில். இந்த மூவர் கூட்டணி ஏற்கெனவே 'காலா பானி’ (சிறைச்சாலை) படத்தில் இணைந்து பல தேசிய விருதுகளைக் குவித்தது. டி.வி. காம்பியர் பக்னானிதான் ஹீரோ. ஹீரோயின் நம் ஊர் ப்ரியா ஆனந்த். கலக்குங்க!

இன்பாக்ஸ்

• பெண் கல்விக்குக் குரல் கொடுத்ததற்காக தாலிபன்களால் சுடப்பட்ட பள்ளி மாணவி மலாலாவைக் கௌரவிக்கும் விதமாக நவம்பர் 10-ம் தேதியை 'மலாலா தினம்’ என அறிவித்திருக்கிறது ஐ.நா. சபை. இதற்காக உலகம் முழுக்க 32 மில்லியன் குழந்தைகளின் வாழ்த்துகள் மலாலாவுக்குக் குவிந்திருக்கிறது. ''பள்ளி செல்லாத குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 61 மில்லியன் என்கிறது ஐ.நா. சபையின் அறிக்கை. அந்த எண்ணிக்கை முற்றிலும் குறைய வேண்டும் என்று மலாலா என்னிடம் கோரிக்கை வைத்தாள். அவள் குழந்தைகளின் உரிமைக்கான அடையாளம் ஆகி விட்டாள்'' என்று பெருமிதமாகச் சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் கார்ட்டன் பிரௌன். பாச மலர்!

இன்பாக்ஸ்

• முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக் குமாரின் மகள் தீபா. மாதவன் - தீபா திருமணம் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் கடந்த வாரம் நடந்தது. மாதவன் எம்.பி.ஏ-வும் தீபா இதழியலும் படித்தவர்கள். தனது முதல் கவிதைத் தொகுதியில் 'அத்தையை அடுத்த பிறவியில் தாயாகப் பெற வேண்டும்!’ என்று உருகி இருந்தார் தீபா. ஆனால், அவரின் திருமணத்தில் அத்தையைக் காணவில்லை. அடுத்த கவிதைத் தொகுதியில் என்ன எழுதுவீங்க தீபா?

• சௌரவ் கங்குலியோடு இருந்த லடாயைப் படாரென உடைத்திருக்கிறார் ஷாரூக் கான். ஒரு விழாவில் 'சௌரவ்தான் என் ஹீரோ. உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர் அவர். அவருக்கு நேரம் கிடைத்தால் அவருடன் இணைந்து ஈடன் கார்டன் மைதானத்தில் அமர்ந்து கொல்கத்தா அணியின் சிறந்த மேட்ச்சுகளைப் பார்க்க ஆசைப்படுகிறேன்!'' என்று ஷாரூக் புகழ்ந்து ஷாக் கொடுக்க, கொல்கத்தாவே ஆச்சர்யமாகப் பார்க் கிறது. விளையாட்டுல இதெல்லாம் சாதாரணமப்பா!

• ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த ரிக்ஷாக்காரர் பப்லு. கடந்த மாதம் பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார் அவரது மனைவி. தன் வறுமையைப் போக்க, குழந்தை தாமினியைத் தன் உடலோடு சேர்த்துத் துணியால் கட்டிக்கொண்டு ரிக்ஷா ஓட்டினார். தாய்ப்பால் கிடைக்காததால் தாமினியின் உடல் நிலை மோசமானது. பிறந்த குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு பப்லு ரிக்ஷா ஓட்டுவது பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது. பலரும் பணம் கொடுக்க, இதுவரை 18 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. அவளுக்கு இலவசக் கல்வி அளிக்கப் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. பப்லு இப்போது தாமினி பெயரில் ஓர் அறக்கட்டளையைத் துவக்கியுள்ளார். மனிதம் மரிக்காது!

இன்பாக்ஸ்

• கடந்த வாரம் சர்ப்ரைஸ் விசிட்டாக டோனி அவரது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்திருந் தார். பிரஸ்மீட்டில் ''நடக்கப்போகும் இந்தியா - இங்கிலாந்து மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துவிட்டது. இங்கிலாந்து மண்ணில் அவர்களிடம் தோற்றதற்கு, பதிலுக்குப் பதிலாக இங்கு தோற்கப்போகிறார் களாமே?'' என்று ஒருவர் ஏடாகூடமாகக் கேட்க, டென்ஷனாகிவிட்டார் டோனி. ''கஷ்டப்பட்டு விளை யாடும் இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வார்த்தைகள் இவை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் டோனி. அவரது லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல் செம கூல். கேப்டன்னாலே ஆளாளுக்குக் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுறாங்கப்பா.

இன்பாக்ஸ்

• எதைச் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பது நடிகைகளுக்குத் தெரியாததா என்ன? கங்கணா ரணாவத், கிக் சிக் உடைகளை அணிந்துதான் வெளியே வருகிறார். சென்ற வாரம் ஒரு ஃபேஷன் ஷோவில் கங்கணா ரணாவத் கிட்டத்தட்ட டாப்லெஸ் லெவலுக்கு ஒரு டிரெஸ் அணிந்து வர, அத்தனை கண்களும் அவர் மீதே. விசிட்டிங் கார்டை வீசிட்டீங்க பாப்பா!

• 82 வாரங்கள் தூர்தர்ஷனில் வெளியான கவிஞர் வாலியின் நேர்காணலைத் தொகுத்து 'வாலிப வாலி’ என்கிற நூலை தன்னுடைய வாலி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார் கவிஞர் நெல்லை ஜெயந்தா. வரும் 23-ம் தேதி நாரத கான சபாவில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவின் ஹைலைட், வாரிசுகளின் சங்கமம்தான். பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, கொத்தமங்கலம் சுப்பு, தஞ்சை ராமையாதாஸ், மருத காசி, கா.மு.ஷெரீஃப், சுரதா, கு.மா.பா., பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் வாரிசுகள், விழாவில் வாலிக்குச் சிறப்பு செய்ய இருக்கிறார்கள். எழுத்துக்கு மரியாதை!

• தமிழில் 'துப்பாக்கி’ ஷூட்டிங் முடித்த கையோடு, ரவி தேஜாவோடு 'சார் வஸ்தாரா?’ தெலுங்குப் படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்தார் காஜல் அகர்வால். இதற்கு நடுவே 'மாற்றான்’ புரமோ, இப்போது 'துப்பாக்கி’ புரமோ என சென்னையில் பொண்ணுக்கு பிஸி ஷெட்யூல் இருப்பதால், அடிக்கடி ஷூட்டிங்கில் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான ரவிதேஜா, 'நீ அடுத்து அங்கே 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஷூட்ல இருக்கும்போது, இந்தப் படத்தோட புரமோவுக்கு உன்னைக் கூப்பிட்டுக் கடுப்பேத்துறேன் பாரு!'' என்று பொங்க, பம்மிவிட்டார் காஜல். டைட் குளோசப்ல ஸாரி கேட்ருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism