Published:Updated:

அனுஷுக்கு இனி ஆபத்து இல்லை!

எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : வி.ராஜேஷ்

அனுஷுக்கு இனி ஆபத்து இல்லை!

எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : வி.ராஜேஷ்

Published:Updated:
அனுஷுக்கு இனி ஆபத்து இல்லை!

ருமபுரி மாவட்டம், மொம்மிடி அருகே இருக்கிறது கொண்டகரஹள்ளி ஊராட்சி. இந்தப் பகுதி யைச் சேர்ந்த ஏழைத் தம்பதியான சண்முகம்-ரீனாவின் முதல் குழந்தை அனுஷ். இவன், முடக்குவாதங்களில் ஒன்றான 'ஜுவனைல் இடியோபதிக் ஆர்த்தரைட்டிஸ் சிஸ்டமிக்’ என்ற பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு வந்தான்.

அனுஷுக்கு இனி ஆபத்து இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

17,000 விலையுள்ள 30 ஊசிகளைப் போட்டால்தான் அனுஷைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கடுமையான சிரமங்களுக்கு நடுவே 12 ஊசிகளைப் போட்டுமுடித்த இந்தத் தம்பதி, அதற்கு மேல் வழி தெரியாமல் தவித்து நின்றனர். இந்தத் தகவலை 3-10-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 'அனுஷ் சிரிப்பானா?’ என்ற தலைப்பில், கட்டுரையாக்கி இருந்தோம். அதைப் படித்த நம் வாசகர்கள் பலர், சிறுவன் அனுஷின் மருத்துவச் செலவுக்குப் பண உதவி செய்தனர். அனுஷ் பெற்றோருக்கு

அனுஷுக்கு இனி ஆபத்து இல்லை!

3 லட்சத்துக்கும் அதிகமாக உதவித் தொகை கிடைத்துள்ளது. இதைக்கொண்டு அனுஷ§க்கான சிகிச்சையைத் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர் அவனது பெற்றோர். கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக்கொள்வதால், அனுஷ் வேகமாகத் தேறிவருகிறான்.  தங்கள் குழந்தைக்காக உதவிய அனை வருக்கும் அனுஷின் பெற்றோர் விகடன் மூலமாக நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறார்கள். விகடனும் நன்றி தெரிவிக்கிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism