Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.

 னக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகள்பற்றியும் ஜென் வாழ்க்கை முறைபற்றியும் உங்களிடம் பகிர ஆசை. ஹைக்கூ கவிதைகள் என்பது நமக்கு அற்புதங்களை வாரி வழங்கும் படிமம். எனக்கு வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக்கொடுத்தது ஜென் வாழ்க்கை முறை. அதை உங்களுக்கும் சொல்லித்தருகிறேன். கேளுங்கள்!

இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனின் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆசையா? ஆசைகள் அதிகம் இல்லாத கரிசல்காட்டுக் கிராமத்துப் பெண் அவள்.

அவளுக்குப் பிடித்த கிடை ஆட்டுக்காரி, ராக்காச்சி, வனப்பேச்சி, கன்னிமார்... இவர்களையும் அடையாளம் காட்டுகிறேன்... வாருங்கள். எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்த முத்துராக்கு வையும் கல் உடைக்கும் கச்சம்மாவையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையையும் கட்டாயம் செம்மைப்படுத்தும். அன்போடு சொல்கிறேன்... கேளுங்கள்!

எத்தனையோ உறவுகள் இருந்தாலும், ஏதாவது ஓர் உறவுதான் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். எனக்கு என் அப்பா அப்படி. இப்போது அவர் இல்லாவிட்டாலும் அவருடனே வாழ் கிறேன். அப்பா - மகள் அன்பு உரையாடலைக் கேட்க ஆசையா? கொஞ்சம் காதைக் கொடுங்கள்!

ஆண் என்றால் வலுவேற்றப்பட்ட உடலும், பெண் என்றால், மெலிந்த இடையும் உடையும்தான் அழகை நிர்ணயிக்கின்றன எனவும் நினைத்தவள் நான். ஆனால், உண்மையில் உலக அழகி யார் என்று எனக்கு உணர்த்திய ஒரு நிகழ்வை உங்களுக்கும் உணர்த்துகிறேன்... வாருங்கள்!

நான் நினைப்பதை எல்லாம் எழுதிக் கொட்டுகிறேன். ஆனால், எது கவிதை? கவிதைக்கான இலக்கணம் என்ன? இவற்றை எனக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறேன். வாருங்கள்!

நான் சென்னை வந்த புதிதில், மக்கள் வெயிலைப் பார்த்துச் சிலாகிப்பதும் டிகிரி கணக்கெடுத்து நொந்துகொள்வதும் எனக்கு விநோதமாக இருந்தது. ஏனெனில், வெயில் எங்கள் வீட்டு மனிதர்களுள் ஒன்று. வெயிலை உண்டும் உடுத்தியும் உணர்ந்தும் வெயிலோடு நாங்கள் வாழ்வதை விளக்குகிறேன். அனல்காயுங்கள்!

15.11.12 முதல் 21.11.12 வரை 044- 66808034 என்ற எண்ணில் என்னை அழையுங் கள்.... அழகுத் தமிழில் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்
தமிழச்சி தங்கபாண்டியன்