Published:Updated:

"நான்தான் பிங்க் எம்,ஜி.ஆர்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : ஆ.வின்சென்ட் பால்

"நான்தான் பிங்க் எம்,ஜி.ஆர்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : ஆ.வின்சென்ட் பால்

Published:Updated:
##~##

"இப்பதான் பிரியாவோட காதல் கனிஞ்சு ஒரு கெமிஸ்ட்ரி உண்டாகி இருக்கு. ஏடாகூடக் கேள்விகள் கேட்டுக் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடாதீங்க சார்...'' என்றவாறே தயாரானார் சிவா.

 ''உங்களைப் பத்தி கிசுகிசு எதுவுமே வர மாட்டேங்குதே... ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அதை ஏங்க இவ்ளோ சோகமா கேக்கறீங்க? ஒருத்தன் சந்தோஷமா இருந்தா, உலகத்துக்குப் புடிக்காதே? இதோ பாருங்க... ஓப்பனா சொல்லிடறேன்... நீங்க எதிர்பார்க்கிற மாதிரிலாம் என்னைப் பத்தி கிசுகிசு வராது. வந்தாலும் 'சிவா, ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு பில் கொடுக்காமப் போனான்... முறுக்குக் கடைல வடையைத் திருடிட்டு ஓடிப் போனான்’னு டீசன்ட்டா ஏதும் வந்தாத்தான் உண்டு!''

''பாலா படத்துல எல்லாம் எப்ப நடிப்பீங்க?''

''பாலா படமா? ஃபர்ஸ்ட் அதுக்கு முடி வெட்ட ணுமே? முடி வெட்டுனா நான் நல்லா இருப்பேனா? (கண்ணாடியில் பார்க்கிறார்) முடி ஓ.கே. பட், நான் சோகமால்லாம் நடிச்சா நாடு தாங்காது. அதனால, பாலா

"நான்தான் பிங்க் எம்,ஜி.ஆர்!"

சார் உங்க படத்துல ஏதும் பணக்காரப் பிச்சைக்காரன்... பணக்காரப் பரதேசி கேரக்டர் இருந்தா, என்னைக் கூப்பிடுங்க. லஞ்ச்கூட நான் வீட்ல இருந்தே எடுத்துட்டு வந்துடுறேன்!''

''த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா கூடல்லாம் எப்ப ஜோடியா நடிப்பீங்க?''

''இதே கேள்வியை என் சார்புல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்கிட்ட கேளுங்களேன்... உங்களுக்குக் கோயில் கட்டுறேன்!''

'' 'தில்லுமுல்லு’ ரீ மேக்ல  ஒரிஜினல்  'தில்லுமுல்லு’ ஹீரோயின் மாதவியையே  உங்களுக்கு  ஜோடியா  ஃபிக்ஸ் பண்ணா என்ன பண்ணியிருப்பீங்க?''

''ரொம்ப நாள் எனக்கே தில்லுமுல்லு ஹீரோயின் யாருன்னே தெரியாமத்தான் இருந்தேன் பிரதர். அப்புறம் ஒரு நாள் ரொம்ப தயங்கித் தயங்கி... ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர்கிட்ட கேட்டப்ப அவரு 'யாரோ கொல்கத்தாவுல இருந்து இஷா அகர்வாலாம்’னு சொல்லிட்டாரு. நானும் ஏகப்பட்ட கனவுகளோட கூகுள்ல 'இஷா அகர்வால், கொல்கத்தா’னு அடிச்சுத் தேடினா, ஒரு 45 வயசு ஆன்ட்டி பல் செட்டோட சிரிச்சுட்டு இருக்கிற படம்தான் வந்துச்சு. 'அடப்பாவிகளா... ஹீரோயின் யாரா இருந்தாலும் ஓ.கே-ன்னு சொன்னது தப்பா?’னு கொதிச்சுக் கொந்தளிச்சு சண்டை போட்டதுக்கு அப்புறம்தான், அது இஷா தல்வார்னு சொன்னாங்க. கொஞ்சம் அசந்திருந்தா மாதவியைவிட வயசான ஆன்ட்டியை ஹீரோயினா ஆக்கி இருப்பாங்க!''

''கலைஞர் கதை, வசனத்துல நடிக்கச் சொன்னா ஓ.கே-வா?''

''ஏதோ இப்பதான் ஒரு அஞ்சு படம் புக் ஆகியிருக்கு. அது உங்களுக்குப் பொறுக்கலையா?''

''சூப்பர் ஸ்டார், இளைய தளபதி மாதிரி உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்?''

''அதெல்லாம் ஓல்டுங்க... கறுப்பு எம்.ஜி.ஆர்-தான் இப்ப டிரெண்ட். (கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே) பிங்க்? பிங்க் எம்.ஜி.ஆர்னே வெச்சுக்குங்க!''

''நீங்க எப்ப ஆஸ்கர் விருது வாங்குவீங்க?''

''லாஸ்ட் டைம் கூப்பிட்டாங்க... அத்தை வீட்டுல சின்ன ஃபங்ஷன். அங்கே போய் சிறப்பு செஞ்சதால, ஆஸ்கர் விழாவுக்குப் போக முடியலை. அவங்களுக்கு ரொம்பவே வருத்தம். நம்ம அழகு, திறமைக்கு இன்னும் நிறைய விருதுகள் வரும். வெய்ட் ப்ளீஸ்!''

''தமிழ்நாட்டுல உங்க ரசிகர்களோட எண்ணிக்கை என்ன?''

''கடல்ல எத்தனை கிலோ உப்பு இருக்குனு எடை போட்டுப் பார்க்க ஆசைப்படாதீங்க மிஸ்டர்!''

''காக்டெயிலுக்கு ஏன் அந்தப் பேர்?''

''ம்... நாட்டுக்கு ரொம்பத் தேவையான கேள்வி. அதாவது, காக்டெயில்னா சேவலோட வால்... சேவல் வால் எப்படி இருக்கும்? கலர் கலரா... நிறைய கலர்ஸை மிக்ஸ் பண்ணி இருக்கும். அதே மாதிரி கலர் கலரான சரக்குகளை ஒண்ணா சேர்த்து மிக்ஸ் பண்ணி அடிக்கிறதுதான் காக்டெயில்!''

''பார்லிமென்ட் அமைதியா நடக்க ரெண்டு ஐடியா சொல்லுங்க?''

''முக்கியமான கேள்வி இது. நோட் பண்ணிக்க மறந்துடாதீங்க... பார்லிமென்ட்டுக்கு வர்ற எல்லாருக்கும் காலைல வெண்பொங்கல், வடை. முடிஞ்சா கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலும் (ஏன்னா, இது எனக்குப் பிடிச்ச அயிட்டம்). அப்புறம், மத்தியானம் கேன்டீன்ல அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் போடச் சொல்லிடணும்.

"நான்தான் பிங்க் எம்,ஜி.ஆர்!"

அப்படியே பார்லிமென்ட் விளக்கு வெளிச்சம் எல்லாம் டிம் பண்ணி தமிழ்நாடு மாதிரி டார்க் ஆக்கிடுங்க. இதெல்லாம் பண்ணா, அந்த ஏ.ஸி. ஹால் குளிருக்கும் அதுக்கும் ஒரு தூக்கம் வரும் பாருங்க... இந்த ஒரு ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணா போதும். அப்புறம் பாருங்க... பார்லிமென்ட் எவ்வளவு அமைதியா நடக்கும்னு!''

''கோலிவுட்ல கொத்துக் கறி போட்டாச்சு... பாலிவுட், ஹாலிவுட்லலாம் எப்ப?''

''நம்மளால சிக்ஸ்பேக் வெச்சிக்கிட்டு 'க்யாமா க்யா ஹர்தாஹே’னு டயலாக் பேச முடியாது சார். ஹாஸ்பிட்டல் சீனுக்கும் ட்ரா ஜெடி சீனுக்கெல்லாம்கூட சிக்ஸ்பேக்ல வர்றாங்க. இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க நம்ம ராமராஜன் சாரை சிவப்புச் சட்டையோட செண்பகத்தைக் கையில பிடிச்சு அனுப்பிவைக் கணும்!''