Published:Updated:

அருளாளர் தேவசகாயம்!

க.நாகப்பன்ஓவியம் : பாரதிராஜா

அருளாளர் தேவசகாயம்!

க.நாகப்பன்ஓவியம் : பாரதிராஜா

Published:Updated:
##~##

கோன்னதத் தமிழராக அடையாளம் பெற்றிருக்கிறார் திரு. தேவசகாயம் பிள்ளை!

 புனிதர் அல்ஃபோன்ஸா, அன்னை தெரஸா வரிசையில் உலக கத்தோலிக் கத் திருச்சபையால், அருளாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் தேவசகாயம். திருமண வாழ்வில்இருந்து இறைப் பணிக்குச் சென்று இந்த உயர்நிலையை அடையும் முதல் இந்தியர் - முதல் தமிழர் தேவ சகாயம் பிள்ளை. எல்லா மதத்தினர் இடையேயும் சமத்துவத்துக்காகப் போராடிய தேவசகாயம் பிள்ளை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்  கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இப்போதைய குமரி மாவட்டம், நட்டாலம் கிரா மத்தில் 1712 ஏப்ரல் 23-ம் நாளில் பிறந்த நீலகண்டப் பிள்ளையே பின்னாளில் தேவசகாயம் ஆனார். சம்ஸ்கிருதம், வில் வித்தை, வர்மக் கலைகள், போர்ப் பயிற்சிகள் ஆகியவற்றில் வல்லவராக இருந்தவர், ராஜா மார்த்தாண்ட வர்மனின் போர்ப் படையில் திறனான வீரனாகத் திகழ்ந்தார். திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு

அருளாளர் தேவசகாயம்!

என்னும் ஊரைச் சேர்ந்த பார்கவி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.  

1741-ல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க  பெனடிக்டஸ் டி லெனாய் தலைமையில் வந்த டச்சுப் படைகளை மாட்டு வண்டியில் பனைமரங் களைக் கட்டி பீரங்கி பீதி உண்டாக்கி சரண் அடையவைத்தார் மார்த்தாண்ட வர்மன். அப் போது வர்மனின் படையிலேயே சேர்ந்து படைத் தளபதியாக உயர்ந்த டி லெனாய் நீலகண்டப் பிள்ளைக்கு இனிய நண்பர் ஆனார்.  டிலெனாய் மூலம் பைபிளின் யோபு கதையை அறிந்த நீலகண்டப் பிள்ளை, கிறிஸ்துவ மதத்தின்பால் ஆர்வம்கொண்டார். ஒருகட்டத்தில் கிறிஸ்துவத் தில் ஆழ்ந்து 'தேவசகாயம்’ ஆனார். அவருடைய மனைவியும் ஞானப்பூ என்று பெயருடன் கிறிஸ்துவர் ஆனார். பிறகு பைபிளின் கருத்துகளில் ஆழ்ந்த பற்றுகொண்டு, மூட நம்பிக்கைகளை எதிர்க்கத் துவங்கினார். 'சமூகத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என யாரும் இல்லை. அனைவரும் சமம். ஏழைகளோடு உணவு உண்ணுவதே சரி’ என்பதைச் செல்லும் இடம் எல்லாம் போதித்தார். இதனால் தேவசகாயத்தை எதிரியாகப் பார்த்த மார்த்தாண்ட வர்மன் அரசாங்கம், அவரை மீண்டும் இந்து மதத்துக்கு மாறும்படி எச்சரித்தது. அவர் மறுக்கவே பல பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைத்துத் துன்புறுத்தியது. உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கைகளைப் பின்புறமாக கட்டி, கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவித்து, எருமை மாட்டின் மீது அமர்த்தி ஊர்ஊராக அழைத்துச் சென்றனர், பாம்புகளுக்கு இடையே போட்டனர், குரங்குகளோடு கூண்டில் அடைத்துவைத்தனர், சுண்ணாம்புச் சூளையில் எறிந்தனர், மரத்தில் கட்டி அடித்தனர், தீச்சுவாலையில் கிடத்தி சூடு தாங்காமல் தவிக்கச் செய்தனர். தன் மீதான அனைத்து வன்முறைத் தாக்குதல்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் தேவசகாயம்.

கடும் சித்ரவதைகளுக்குப் பிறகு மார்த்தாண்ட வர்மனின் வீரர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் தேவசகாயத்தின் உடலைத் துளைத்தனர். இறவாப் புன்னகையுடன் மண்ணில் வீழ்ந்தது தேவசகாயத் தின் உடல்.

காற்றாடி மலையில் தேவசகாயம் மரித்தஇடம் இன்று தேவசகாயம் மவுன்ட் என்று அழைக்கப் படுகிறது. தேவசகாயம் உயிர் நீத்தபோது மலை உச்சியில் உள்ள பாறையில் இருந்து ஒரு பெரிய கல் உடைந்து விழுந்து மணியோசையை எழுப்பியது. தேவசகாயத்தின் புனித மரணத்தை உலகுக்கு அறிவித்ததால், அந்த இடம் மணியடிச்சான் பாறை என அழைக்கப்படுகிறது. நிறைவேறாத வேண்டுதலோடு அங்கே வருபவர்கள் கல்லை அடித்து மணியோசை எழுப்பி ஜெபித்துச் செல்கின்றனர்.

1993 முதலே தேவசகாயத்துக்குப் புனிதர் பட்டம் அளிக்கும் முயற்சிகள் தொடர்கிறது. அதன் பலனாக இந்த வருடம் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், தேவசகாயம் 'உறுதியான விசுவாச வாழ்வு’ (Heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிட்டு, புனிதர் பட்ட நடவடிக்கைகளைக் கண் காணிக்கும் பேராயத்தின் ஆவணத்தில் கையப்பம் இட்டிருக்கிறார். அருளாளர் தேவசகாயம் இனி புகழ் மாலை, ஜெபம் அனைத்துக்கும் தகுதி ஆனவர் ஆகிறார். அவருக்கு ஆலயங்கள்அமைக்க லாம். உலகக் கத்தோலிக்கத் திருச்சபையில் இறை உறவில் புனிதர்கள் வரிசையில் தற்போது தேவசகாயம் இணையவிருப்பது அந்த மகோன்னத தமிழருக்கான நற்பேறு!'' என்கிறார் ரெமிஜியஸ்.  

ஆமென்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism