Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்...

நான் மயில்சாமி அண்ணாதுரை. உங்களிடம் நிறைய அன்பும்  கொஞ்சம் அறிவியலும் பேச ஆசை!

'குக்கிராமத்தில் இருந்து வந்த உங்களால் எப்படி சாதிக்க முடிந்தது’ என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி ஒரு குழந்தை கேட்டது என் மனதில் மறக்க முடியாத பதிவாகிவிட்டது. அந்தக் கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று... ஒன்று... நன்று!

ழந்தையின் கேள்விக்கு நான் அளித்த பதில் சொல்கிறேன்...உங்களுக்குள் ஏதேனும் ஒரு தீபத்தைத் தூண்டுகிறதா என்று பாருங்களேன்.

நாளை என்று எதையும் தள்ளிப்போடாதீர்கள். இன்றைய தினத்திலேயே முழுமையாகச் செய்யுங்கள். சுட்டிக் குழந்தைக்குப் பரிசு தருவதில் தொடங்கி, பெரியவர்களுக்கு நன்றி சொல்வது வரை அனைத்தையும் அழகாகச் செய்யுங்கள் என்பதை மகாபாரதக் கதை மூலம் சொல்கிறேன். கேளுங்கள்.

பறவையைப் போல நம்மால் பறக்க முடியுமா... மீன்களைப் போல நம்மால் நீந்த முடியுமா? இப்படியான கேள்விகள்தான் அறிவியலை ஆக்கப்பூர்வமாக்கின. சரியான கேள்விகள் கேட்டால், சரியான பதில்கள் கிடைக்கும். அது எப்படி சரியான கேள்விகளைக் கேட்பது... சொல்கிறேன்... கேளுங்கள்!

பெருகிவரும் மக்கள்தொகையும் அருகிவரும் எண்ணெய் வளமும் நீர் வளமும் அச்சமூட்டுகின்றன. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பசியோடு இருப்பவனுக்கு மீன் கொடுக்காமல், மீன் பிடிக்கக் கற்றுத் தருவதுதான் பேருதவியாக இருக்கும். அதை எப்படிச் செய்வது?  

'நூறு துடிப்பான இளைஞர்களைக் கொடுங்கள்; நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு இளைஞர் சக்தி மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார் விவேகானந்தர். ஆனால், இன்றைய இளைஞர்கள் எதிர்ப்புகள், தடைகளால் மிக எளிதில் நொறுங்கிப் போய்விடு கிறார்கள். அப்படி அவர்கள் முடங்காமல் இருக்க ஒரு பக்குவம் கற்பிக்கிறேன்... கேளுங்கள்!

விரும்பியதை அடைவதுதான் வெற்றி என்பது பெரும்பான்மையர் கருத்து. கிடைத்ததை விரும்பினால் அதுவும் வெற்றிதான் என்கிறேன் நான். அந்த வித்தியாசத்தையும் விளக்குகிறேன்!  

22.11.12-ல் இருந்து 28.11.12 வரை 044- 66808034 என்ற எண்ணில் என்னை அழையுங்கள். வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்பதற்காக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுகுறித்து இன்னும் நிறையவே பகிரலாம்!

அன்புடன்,
மயில்சாமி அண்ணாதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism