Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• 'அயிட்டம் சாங் கிளப்’பில் அசத்தல் புது வரவு அஞ்சலி. சினிமாவின் கேரியர் உச்சத்தில் இருக்கும்போதே சூர்யா நடிக்கும் படம் என்ற ஒரே காரணத்துக்காக 'சிங்கம்-2’-வில் ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுத்திருக் கிறார். ஓர் அழகி அதிரடிக்கிறாள்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'வந்தே மாதரம்’ போன்றதொரு ஆல்பத்தின் பணிகளில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பிஸி. 'மா துஜே சலாம்’ எனும் அந்த ஆல்பத்துக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டு இருப்பவர், ''அனைத்து ரசிகர்களையும் இந்த ஆல்பம் நிச்சயம் கவரும்'' என்கிறார் பூரிப்பாக. முதலில் இந்தியிலும் பின்னர் தமிழிலும் வெளியாகுமாம் 'மா துஜே சலாம்’. ரஹ்மான் துஜே சலாம்!

இன்பாக்ஸ்

• 'என்றென்றும் புன்னகை’ படத்தில் நடிக்கிறார் ஆன்ட்ரியா. மாடல் அழகி கதாபாத்திரமாம். இதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா? மாடல் என்றால், டி.வி., ஃபேஷன் ஷோ மாடல் அல்ல; ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடலாம். ஆம்... அதேதான். நிர்வாண போஸ் கொடுக்கும் மாடலாம். அந்தக் காட்சியில் துணிச்சலாக நடித்திருக்கிறாராம். 'அப்படியா?’ என்று கேட்டால், 'படம் பார்த்துட்டுச் சொல்லுங்க!’ என்கிறார் ஆன்ட்ரியா. என்றென்றும் துணிச்சல்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

8 கோடி பட்ஜெட்டில் உருவாகி

இன்பாக்ஸ்

140 கோடி அள்ளிய இந்திப் படம் 'கஹானி’ தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. படம் முழுக்கக் கர்ப்பிணியாக வித்யா பாலன் நடித்திருந்த இந்தப் படத்தின் ரீ மேக் வெர்ஷனில் நடிக்க இருப்பவர் அனுஷ்கா. தெலுங்கின் ஸ்டார் இயக்குநர் சேகர் கம்யூலா இயக்கும் இந்தப் படத்துக்காகக் கர்ப்பிணி களின் நடை, உடை, பாவனைகளை 'ஸ்டடி’ செய்து கொண்டு இருக்கிறார் அனுஷ். கோயிங் ஸ்டடி!

• இரண்டாம் உலகப் போரின் அதிர்வுகள் இன்றும் ஜப்பானில் எதிரொலிக்கின்றன. கடந்த வருட சுனாமிச் சீரழிவுகளை அகற்றும்போது, செண்டாய் நகரின் விமான நிலையத்தில் ஒரு குண்டைக் கண்டெடுத்து இருக்கிறார்கள். சுமார் 250 கிலோ எடை. இந்தக் குண்டைச் செயலிழக்கச் செய்த பின்தான் பெருமூச்சுவிட்டது மீட்புக் குழு. சுனாமியால் ஒரு நல்லது!

இன்பாக்ஸ்

• கடும் எதிர்ப்புக்கு இடையிலேயும் பாகிஸ்தானில் லாகூர் ஷத்மான் சவுக் ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படுவது உறுதியாகிவிட்டது. ''லாகூர் சிறையில்தான் பகத் சிங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்கு இங்குதான் பெருமை செய்ய வேண்டும்'' என்று லாகூர் மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட, எழுந்த எதிர்ப்புகள் அடங்கிவிட்டன. ஆச்சர்யம்!

இன்பாக்ஸ்

• ஓர் இந்திய சகோதரியின் அகால மரணம், அயர்லாந்தின் மருத்துவச் சட்டங்களில் மாற்றங்களை உருவாக்க இருக்கிறது. அயர்லாந்தில் வசித்த இந்திய மருத்துவரான சவீதா, நாலு மாதக் கர்ப்பிணியாக இருந் திருக்கிறார். குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதுபோன்ற உணர்வு ஏற்பட, மருத்துவ மனைக்குச் சென்று கருவைக் கலைக்குமாறு கோரியிருக்கிறார்கள். அந்த நாட்டுச் சட்டப்படி தாய்க்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந் தால் மட்டுமே கருவைக் கலைப்பார்களாம். இதனால், சவீதாவின் கருவைக் கலைக்க மறுத்துள்ளனர். ஒருகட்டத்தில் வயிற்றுக்குள் ஏற்பட்ட தொற்று சவீதாவின் உயிரையே பறித்துவிட்டது. சவீதாவின் கணவர் போராட்டக் களத்தில் இறங்கி இருக்கிறார். சவீதாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

இன்பாக்ஸ்

• இன்னொரு டிராவிட் கிடைத்துவிட்டார் என உற்சாகத்தில் திளைக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் டிராவிட் பாணியில் நிலைத்து நின்று இரட்டைச் சதம் விளாசிய புஜாராதான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். ஆனால், எப்போதோ இந்தப் பெயரைத் தட்டியிருக்க வேண்டும் புஜாரா. 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் அடித்த 72 ரன்களால்தான் வெற்றி இலக்கான 207-ஐ எட்டியது இந்தியா. ஆனால், அதன் பிறகும் அணியில் இடம் இல்லாமல் தவித்த புஜாரா, சீனியர்களின் ஓய்வுக்குப் பிறகே கடந்த நியூஸிலாந்து தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாடிய ஆறாவது போட்டியிலேயே இரட்டைச் சதம், இரண்டாவது முறையாக 150 ரன்கள் தாண்டியது என இப்போது டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா. சாதனைகளை அடுக்குங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism