Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##

•  இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானவுடன் ஒபாமா மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் மியான்மருக்கு. அங்கு சென்றுள்ள முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமை பெற்ற ஒபாமா, யாங்கூன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சிறப்புமிக்க உரை வரலாற்றில் இடம் பிடிப்பதற்கு முன்னரே, அப்போது மேடையில் அமர்ந்தவாக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தூங்கியது பரபர செய்தியாகிவிட்டது. தொடர் அலுவல் மற்றும் பயணக் களைப்பு காரணமாக அவர் தூங்கியதாகப் பின்னர் தெரிவித்தார்கள். மக்கள் பணியாற்றிய களைப்பு இருக்காதே பின்னே!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• சல்மான் கான் வீட்டில் இருந்து அதிகாலையில் ரகசியமாக வெளியே வந்ததாகக் கசிந்த செய்திகளால் பிரியங்கா சோப்ரா செம அப்செட். ''தொடர்ந்து என்னைப் பற்றி வரும் தப்புத் தப்புத் தகவல்கள் என்னைக் காயப்படுத்துகின்றன. சல்மானின் சகோதரி அர்பிதா, எனக்கு நெருங்கிய தோழி. சல்மான் கான் வீட்டில் இருந்து வெளியே வந்தால், சல்மானைச் சந்தித்துவிட்டுத்தான் வருகிறேன் என்று அர்த்தம் இல்லை. சல்மான் என் நண்பர். அவ்வளவுதான்!'' என்று கொந்தளித்திருக்கிறார். ஃப்ரீயா விடுங்க பிரியா!

• கேட்டி ஹோம்ஸிடம் இருந்து விவாகரத்து பெற்றதால், தனது மகள் சூரியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம் டாம் க்ரூஸ். இதனால், தான் நடித்துக்கொண்டு இருக்கும் 'ஆல் யூ நீட் இஸ் கில்’ படத்தின் வேலைகளில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக்கொண்டவர், ''இப்படி 50 வயதுக்கு மேல் அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கும் நிலை யாருக்கும் வர வேண்டாம்!'' என்கிறார் உணர்ச்சிப் பெருக்கோடு. ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்!

இன்பாக்ஸ்

• அக்கா ஷாலினியாவது ஒருசில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அறிமுகமான வேகத்தில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டார் தங்கை ஷாம்லி. சிங்கப்பூர் லாசல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்த ஃபேஷன் டிசைனிங் படிப்பு தந்த நம்பிக்கை, அனுபவம் ப்ளஸ் அக்காவின் அனுமதியோடு சென்னையில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் திறக்க இருக்கிறார். ஷாம்லி ஸ்கெட்ச் போட்ட ஆடைகளோடு, பிரபல டிசைனர்களின் ஆடைகளையும் இங்கே விற்பனைக்கு வைக்க இருக்கிறாராம். மாமா அஜித்தான் ஷோ ஸ்டாப்பர்!

இன்பாக்ஸ்

• ஜாக்கி ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி... ''எனக்கு 58 வயதாகிறது. இன்னமும் கை, கால்களைத் தூக்கிச் சுழற்றி ஆக்ஷன் படங்களில் நடிப்பது சிரமமாக இருக்கிறது. அதுவும் போக, உலகம் முழுக்க அடிதடி, வன்முறை என்று பெருகி வருகிறது. ஏன் தேவையில்லாமல் சினிமாவிலும் அதைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இனி, மாறுபட்ட கதாபாத்திரங்களில் மட்டும் நல்ல நடிகனாகத் தொடர்ந்து நடிக்க ஆசை!'' என்று கூறி இருக்கிறார் ஜாக்கி. காமெடியில கலக்கு தலைவா!

இன்பாக்ஸ்

• இங்கிலாந்துக்கு அடுத்த அரச வாரிசு தயார். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறாராம். இதை அவரது தோழி ஜெசிகா உறுதி செய்திருக்கிறார். விரைவிலேயே இளவரசி தாயாகிற செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுமாம். ராஜா வீட்டுப் பாப்பா!

• வித்யா பாலனுக்கும் யு டி.வி-யின் சித்தார்த் ராய் கபூருக்கும் டிசம்பர் 14-ம் தேதி திருமணம். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான வித்யாபாலன் - பஞ்சாபியான சித்தார்த்துக்கு இரண்டு முறைப்படியும் திருமணம் நடக்க இருக்கிறதாம். ஜெனிலியா -ரித்தேஷ், கரீனா-சயீஃப் அலிகான் திருமணங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பாலிவுட்டின் மூன்றாவது மிக முக்கிய ஸ்டார் திருமணம் இது. தமிழ் பேச்சுலர் ஸ்டார்ஸ்லாம் என்னப்பா பண்றீங்க?

• 'திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பது சரியா?’ என்று கேட்டதற்கு பளிச் பதில் சொல்லியிருக்கிறார் கரீனா கபூர். ''சயீஃப் அலிகானைத் திருமணம் செய்வதற்கு முன்பே அவருடன் ஐந்தரை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். பல ஹீரோயின்கள் தங்கள் பாய் ஃப்ரெண்டை மறைக்கிறார்கள். ஆனால், நான் ரொம்ப ஓப்பன் டைப். எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ, அப்படி வாழ்கிறேன். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதுதான் திருமணம் செய்துகொண்டேன். அழகாகவும், இளமையாகவும், திறமையுடனும் இருந்தால் சினிமா நம்மை இழக்க விரும்பாது!'' இது... இது... இதுதான் கரீனா!

இன்பாக்ஸ்

• அமலா பால், ஹன்சிகா என்று தாவித் திரிந்த 'சொட்டவாளக்குட்டி’ ஹீரோயின் வாய்ப்பு இப்போது சமந்தா மடியில். 'கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றி நடக்கும் காமெடி கலந்த காதல் கதையில் நடிப்பதன் மூலம் தமிழர்கள் தன்னை இன்னும் நெருக்கமாக உணர்வார்கள்’ என்று பூரிக்கிறாராம் சமந்தா. சமத்துப் புள்ள!

• யூ டியூபில் அதிகம் பேர் பார்த்த வீடியோ என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது கங்னம் ஸ்டைல் டான்ஸ் வீடியோ. கடந்த ஜூலையில் அப்லோட் செய்யப்பட்ட கங்னம் வீடியோவின் ஹிட்ஸ் அநேகமாக, கிறிஸ்து மஸுக்குள் 100 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கிறார்கள். இது கங்னம் ஸ்டைல்!

• போனமாதம்தான் தன் மகள் முன்னின்று நடத்திவைக்க கரீனாவைக் கரம் பிடித்தார் சயீஃப். இப்போது சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார்களாம் அவர் தத்தெடுத்து வளர்த்து வரும் இரு மகள்களும். 13 வயதாகும் மூத்த மகள் ரெனீதான் அம்மாவை அதிகம் வற்புறுத்துகிறாராம். மகள் ஆசைக்கு ஓ.கே. சொல்லிய தோடு, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் இருக்கும் என்று அறிவித்துவிட்டார் சுஷ்மிதா. அம்மாவுக்கு டும் டும் டும்!

இன்பாக்ஸ்

• திருச்சியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ராம் அரவிந்த் ஸ்லோவேனியாவில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளான். இதற்கு முன் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் வெள்ளி, ஆசிய அளவிலான  போட்டியில் தங்கம் தட்டியவன் ராம். கங்கிராட்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism