Published:Updated:

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.

நான் உங்க கோபிநாத்... சின்ன இடைவேளைக்குப் பிறகு உங்களை 'இன்று... ஒன்று... நன்று!’ மூலம் திரும்பச் சந்திக்கிறதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

நாம வாழ்க்கையை எப்படி வாழ்றோம் தெரியுமா? ஒருத்தரோட குறைகளை மட்டுமே கவனிச்சு, அதைக் குத்தம் சொல்வதிலேயே கவனம் செலுத்தி, வாழ்க்கையின் ரசனையான நிமிஷங்களைத் தவறவிட்டுர்றோம். ஆனால், அது இல்லை வாழ்க்கை. நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களோடது மட்டுமில்லாம, நம்மளோட நிறைகளையும் கண்டறிந்து அதை மேலும் மேலும் மெருகேத்திக்கிறதுலதான் வெற்றிக்கான சூத்திரம் அடங்கியிருக்கு. அதைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குச் சொல்றேன்...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று.. ஒன்று... நன்று!

இப்போதைய சூழலில் அறிவுத் திருட்டு பரவலாகிவிட்டது. எதிரில் இருப்பவர்களை நம்பவைக்க என்னமும் பேசலாம் என்ற நிலை இருக்கிறது. தகவல் தொடர்பில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதைப் பத்தி நான் பேசுறதுல உங்களுக்கு உபயோகமா இருக்கிறதை எடுத்துக்கங்களேன்...

இளைஞர்கள் பலருக்கு இப்போதைய பிரச்னை, சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்துறதுங்கிறதுதான். உலகத்தோட பார்வைக்கு உடனடியாக நம் கருத்துகளை முன்வைக்க நமக்குக் கிடைச்ச வரப்பிரசாதம்தான் சமூக வலைதளங்கள். ஆனா, அவற்றை ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தாம அவற்றின் நோக்கத்தையே சிதைக்கிறோமோனு தோணுது. அந்தப் பழக்கத்தை எப்படி ஆக்கபூர்வமா மாத்திக்கலாம்... கொஞ்சம் பகிர்ந்துக்கிறேன்.

பயணம் தொடங்கி சாப்பாடு வரை இன்று எல்லாவற்றிலும் வேகம். ஆனா, இந்த அதீத வேகம் அவசியமா? 1980-களில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமான 'ஸ்லோ மூவ்மென்ட்’ தெரியுமா? வாழ்க்கையில் வேகத்தைவிட எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதைச் சொல்கிறேன்... கேளுங்கள்.

இன்று நாம பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நம்மிடம் திணிக்கப் பட்டவையே. தேவைக்கு வாங்கியது போய் பகட்டுக்கு வாங்கி வாங்கிக் குவிக்கிறோம். அதன் விளைவுகள் என்ன... அவற்றை எப்படித் தவிர்க்கலாம்? என் அனுபவத்தில் இருந்து சொல்றேன்...

வாழ்க்கை எதனைச் சார்ந்து இருக்க வேண்டும்? எனக்கு மிகவும் பிடிச்ச, அடிக்கடி நான் பகிர்ந்துகொள்ளும் வாசகம் ஒண்ணு இருக்கு... முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட சமூகச் சூழலில் நம் வாழ்க்கையைப் பற்றி அதிகம் சிந்திக்க அந்த வாசகம் உதவும். அதுவும் சொல்றேன்... அதுக்கு மேலயும் சொல்றேன்...

29.11.12-ல் இருந்து 5.12.12 வரை 044- 66808034 என்ற எண்ணில் என்னை அழையுங்கள். பாசமும் நேசமும் பரிமாறுகிறேன்...

அன்புடன்,
கோபிநாத்