Published:Updated:

தெய்வ மகன்!

சமஸ்படம் : கே.ராஜசேகரன்

தெய்வ மகன்!

சமஸ்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் மனம் உறைந்த அவர்களுடைய பெற்றோருக்கும் தன்னுடைய இசையால் புது நம்பிக்கை கொடுத்திருக்கிறான் 15 வயது முகுந்த். தன்னுடைய 'தெய்வீகத்தின் ஆரம்பம்’ (டிவைன் அன்ஃப்ளக்ட்) இசைத் தொகுப்பின் மூலம்.

 உலகெங்கும் ஆயிரத்தில் இரு குழந்தைகள் ஆட்டிஸம் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். அமெரிக்காவில் 88-ல் ஒரு குழந்தைக்கு; தென் கொரியாவில் 38-ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. வளர்ந்த நாடுகள் இப்போது ஆட்டிஸம் குறை பாடு உடையவர்களுக்குத் தாங்கள் பொறுப் பேற்கும் வகையில், அவர்களுக்கு ஏற்ற சின்னச் சின்ன வேலைவாய்ப்புகள், சலுகைகள், உதவிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவிலோ எத்தனை பேர் ஆட்டிஸம் குறைபாடு உடையவர் கள் என்ற தரவுகளே இதுவரை இல்லை. அவர்களுக்கான வாழ்க்கையை எப்படி உருவாக்கித் தருவது என்ற கேள்விக்கும் இங்கு பதில் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெய்வ மகன்!

ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வாழ்நாள் சவால்... அந்தக் குழந்தைகளைப் பராமரிப்பது. சரளமாகப் பேச வராத, தொடர்ந்து எதையும் கவனிக்க முடியாத, பதற்றம் மிக்க இவர்களைச் சாந்தப் படுத்த இசை ஒரு மகத்தான வழி என்று சொல் கிறார்கள் மருத்துவர்கள். 15 பஜனைகள் அடங்கிய தன்னுடைய இசைத் தொகுப்பின் மூலம், ஆசிரியை லட்சுமி மோகன், லோட்டஸ் அறக்கட்ட¬ளை உதவியுடன் அதை நிரூபித்து இருக்கிறான் முகுந்த். ஆட்டிஸம் குறைபாடு உள்ள ஒருவரிடம் இருந்து இப்படியரு இசைத் தொகுப்பு வருவது இந்திய அளவில் இதுவே முதல் முறை.

''தன்னையே வெளியே இருந்து பார்க்கக் கூடிய இயல்புடையவங்க இந்தக் குழந்தைங்க. தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போதுகூட என் மகன், 'முகுந்துக்கு ஏன் இப்படி நடக்குது’னுதான் கேட்பான். அப்படிப்பட்ட முகுந்துக்கு ரெண்டு விஷயங்கள் சந்தோஷம். ஒண்ணு இசை; இன்னொண்ணு இயற்கை. அவனைச் சாந்தப்படுத்த பாட்டு கத்துக்க அனுப்பினோம். இன்னைக்கு அவனோட பாட்டு எல்லோரையும் சாந்தப்படுத்துது'' என்கிறார் முகுந்தின் தாய் ஷாலினி பிரேம்சந்திரன்.

முகுந்திடம் என்னால் எதையும் பேசிப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவனுடைய இசைத் தொகுப்பைக் கேட்டபோது, புதிய நம்பிக்கையை அது விதைத்தது. அந்த நம்பிக்கை நம் ஒவ்வொருவராலும் கொண்டாடப்பட வேண்டியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism