Published:Updated:

எதுவும் சாத்தியம்!

க.அருண்குமார்படம் : எஸ்.சிவபாலன்

எதுவும் சாத்தியம்!

க.அருண்குமார்படம் : எஸ்.சிவபாலன்

Published:Updated:
##~##

ன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் ராஜ்குமார். இவரது வாழ்க்கை நமக்கு எல்லாம் குளுக்கோஸ். பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் ஆசிரியப் பணி, கணினி, விளையாட்டு எனப் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்துவருகிறார். உலகில் எதுவும் சாத்தியம் என்பது இவரது தாரக மந்திரம்.

 ''திருவாரூர் மாவட்டம், தெற்கு வாட்டாறு கிராமம் என் சொந்த ஊர். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது கிட்டப்பார்வைக் குறைபாட்டினால் கண்களில் நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளைச் செய்தார்கள். கடைசியில் பார்வை பறிபோனதுதான் மிச்சம். விரக்தியில் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கிடந்த என்னை விடாமல் ஊக்கப்படுத்தினார், என் தாத்தா சிவசாமி. என்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தார். பள்ளியில் படிப்பு மட்டுமின்றி பார்வையற்றோருக்காக நடத்தப்படும் ஓட்டப்பந்தயம், நீச்சல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்துகொண்டு பெரும்பாலும் மாநில அளவில் முதல் இடம் பிடித்தேன். தேசிய அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்திலும் முதல் இடம் பிடித்தேன். தேசிய அளவில் நடந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதுவும் சாத்தியம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். நிறைவு செய்தேன். தேசிய பார்வையற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன். ஏனெனில், ஆசிரியப் பணி என் கனவு. அதனால், டி.ஆர்.பி. தேர்வு எழுதி தேர்வு பெற்றேன். 2006-ம் ஆண்டு உள்ளிக் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் கிடைத்தது. ஆசிரியர் பணி என் கனவு என்றால், பணியில் காட்டும் ஈடுபாடு என் உயிர். என் பாடத்தில் ஒரு மாணவன் தோல்வியுற்றாலும் அவனைவிட அதிகம் கலங்குவது நான்தான். அதனால், இதுவரை நல்ல தேர்ச்சி சதவிகிதத்தையே கொடுத்துவருகிறேன்'' என்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி 2012 வரை இவரது பாடப்பிரிவான சமூக அறிவியலில் இவர் பெற்றுத் தந்த தேர்ச்சி விகிதம் 96 முதல் 100 சதவிகிதம் வரை!