பிரீமியம் ஸ்டோரி

கேட்ட இசை ஸ்ரீநிவாஸ், பாடகர்.

எட்டெட்டு!

''அற்புதமான கஜல் பாடல்களுக்கு பாகிஸ்தான் பாடகர் மெஹ்தி ஹசன் பிரபலம். உருது மொழியில் மிக ஆழமான இசை அறிவுடன் பாடப்பட்டு இருக்கும் பாடல்களைக் கேட்டு ரசிக்க, நிறைய நிதானம் வேண்டும். முதலில் மொழி தெரியாமல்  கேட்ட நான், இப்போது ஓரளவுக்குப் புரிந்துகொண்டு ரசித்து லயிக்கிறேன். அவரது பாடல்களை நானும் பாடி, அவற்றை 'டைம்லெஸ் கிளாஸிக்ஸ்’ என்று ஓர் ஆல்பமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். சினிமாவில் இதுவரை பாடிய பாடல்கள் தராத மனநிறைவை இது எனக்குத் தந்திருக்கிறது!''

படித்த புத்தகம் லட்சுமணப் பெருமாள், எழுத்தாளர்.

''சதத் ஹசன் மன்ட்டோவின் எழுத்துக்கள் 'மன்ட்டோ படைப்புகள்’ என்ற தலைப்பில் வெளிவந்து இருக்கின்றன. இந்திய பாகிஸ்தான்

எட்டெட்டு!

பிரிவினையைப்பற்றி, முற்றிலும் வித்தியாசப்பட்டுப் பேசும் புத்தகம். பெண்களின் உடல்கள் மீது இந்த இரண்டு தேசங்களும் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அவ்வளவு சீரழிவுகளை இரண்டு நாட்டுப் பெண்களும் சந்தித்து இருக்கிறார்கள். கதைகள், நினைவுகள், விமர்சனம் எனப் பன்முகமாக அந்தப் புத்தகம் விரிகிறது. அதில் 'திற’ என்ற தலைப்பில் உள்ள கதை, எவரையும் அதிரச் செய்யும்!''

சந்தித்த நபர் மித்ரன் ஆர் ஜவஹர், இயக்குநர்.

எட்டெட்டு!

'' 'உத்தமபுத்திரன்’ படம் ரிலீஸான பிறகு, ரஜினி சாரைச் சந்தித்தேன். 'உங்க முந்தின படங்களைவிட 'உத்தமபுத்திரன்’ நல்லா இருந்துச்சு. கலகலன்னு பண்ணியிருக்கீங்க’ன்னு மனம்விட்டுப் பாராட்டினார். என் கையைப் பிடிச்சு அவர் பேசிக்கிட்டே இருக்க, எனக்கு ஒரு வார்த்தைகூடப் பேச வரலை. ரஜினி சார் பக்கத்துல நிக்கிறோம்கிற பிரமிப்பே என்னைக் கட்டிப் போட்டுருச்சு. கடைசி வரைக்கும் எதுவுமே பேசாமல் நன்றி மட்டுமே சொல்லிட்டுத் திரும்பிட்டேன்!''

கலந்துகொண்ட நிகழ்ச்சி கோகுல்நாத், மைமிங் கலைஞர்.

''ஜப்பானில்

எட்டெட்டு!

நடந்த ஒரு டான்ஸ் கிளப் நிகழ்ச்சி. contemporary dance company என்பது அந்த கிளப்பின் பெயர். இரண்டு நாட்டின் நடனங்களையும் பிரபலப்படுத்த நடந்த போட்டி. 'பாலிவுட் நைட் பாங்க்ரா’ என்ற பெயரில் இரண்டு நாட்கள் விழா நடந்தது. நான் ஒருநாள் வழக்கமான நடனம் ஆடினேன். மறு நாள் மைமிங் கலந்து நடனம் ஆடினேன். சூப்பர் டூப்பர் ரெஸ்பான்ஸ். ஜப்பான் நடனக் கலைஞர்களுக்கு நான் டான்ஸ் கற்றுக்கொடுத்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன்!''

பார்த்த படம் அஞ்சலி, நடிகை.

எட்டெட்டு!

''எனக்கு இந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் மீது பெரிய கிரேஸ். அவரோட 'பிளாக்’ படத்தைப் பல தடவை பார்த்திருக்கேன். ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், பன்சாலி இயக்கிய Guzaarish படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். மேஜிக் கலைப் பின்னணியில் ஒரு ரொமான்டிக் டிராமா. இயக்குநருக்காகப் படம் பார்க்கப் போய், கடைசியில் ஹிரித்திக்கின் நடிப்புக்கு ரசிகை ஆகிட்டேன். ஐஸ்வர்யா ராயும் சூப்பர். ஆனாலும், ஹிரித்திக்தான் என் மனசை மெஸ்மரைஸ் பண்ணிட்டார்!''

சென்ற இடம் ஒஃபிலியா, பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

''

எட்டெட்டு!

விருது பெறும் நிகழ்ச்சிக்காக ஹாங்காங்குடன் இணைந்த ஒரு தீவுக்குச் சென்றிருந்தேன். மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பிரிவுகளில் ஒன்று ஹாங்காங். மற்றொன்று மக்காவு. படகு அல்லது ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே அந்தத் தீவை அடைய முடியும். சுற்றுலாதான் அதன் முக்கியப் பொருளாதார ஆதாரம். தவிர, எங்கு பார்த்தாலும் கேசினோ கிளப்கள். அங்கு 'வெனிஷியான்’ என்ற ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். ஃபென்ட்டாஸ்டிக்!''  

வாங்கிய பொருள் சுவி சுரேஷ், பாடகி.

எட்டெட்டு!

'' 'ஐ-போன் 4’ வாங்கியிருக்கேனே! செம ஸ்மார்ட் போன். இப்போ தூங்குறதுக்கு முன்னாடி, தினமும் அதுதான் என் காதுக்குள் இசைக்குது. இருக்கும் இடத்தில் இருந்தே வீடியோ சாட் பண்ணலாம். நம்பர் பட்டனை அழுத்திய விரல் விலகுவதற்குள், திரையில் நம்பர் மினுங்குது. அந்த அளவுக்கு செம ஸ்பீட். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடகர் Jamiroquai . ஐ-போன் வாங்கியதும் அவர் பாடல்கள் எல்லாத்தையும் அப்லோட் பண்ணினதுதான் முதல் வேலை. அப்புறம் நான் பாடின பாடல்களையும் அப்லோட் பண்ணிட்டேன். ஐ லவ் ஐ-போன் 4.''

பாதித்த செய்தி தேவதர்ஷினி, நடிகை.

எட்டெட்டு!

''கோயம்புத்தூரில் கொடூரமாகக் கடத்திக் கொல்லப்பட்ட அந்த இரண்டு குழந்தைகள்பற்றிய செய்திதான், இன்னமும் என்னை அலைக்கழிச்சுட்டே இருக்கு. நம் பிள்ளைகளின் எதிர்காலம் நல்லா இருக்கணும்னுதான் பள்ளிக்கூடம் அனுப்புறோம். நல்லபடியா பள்ளி முடிந்து வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை யில்தான் வேலைக்குப் போகிறோம். ஆனால், இந்த மாதிரி நடந்தால் என்ன செய்வது? அதுவும் சமீப நாட்களாகக் குழந்தை களைக் கடத்துவது அதிகமாக நடக்கிறது. இப்போது எல்லாம் வேலையில் இருக்கும்போது, 'குழந்தைகள் பத்திரமா இருப்பாங் களா?’ என்று பதைபதைப்பாகவே இருக்கிறது!''
 

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு