Published:Updated:

வைஷ்ணவி சென்றார்... கஸ்தூரி வந்தார்?

கரு.முத்துபடங்கள் : கே.குணசீலன்

வைஷ்ணவி சென்றார்... கஸ்தூரி வந்தார்?

கரு.முத்துபடங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

ழை ஓய்ந்தாலும் தூவானம் விடவில்லை. அவ்வளவு பரவசப் பரபரப்பில் இருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரி. கடந்த வாரப் பரபரப்பு... தனது உதவியாளர் வைஷ்ணவி திருமண நிச்சயதார்த்தத்துக்கு நேரில் சென்று வாழ்த்திவிட்டு, மேடையிலேயே சீதனமாக ஐந்து லட்ச ரூபாய் கரன்சிகளை அவர் அடுக்கியது. நித்தியானந்தா விலகலுக் குக்கூடக் கலங்காத ஆதீனம், வைஷ்ணவி திருமண விஷயத்தில் ஆடிப்போனார். 'எனக்குப் பதிலாக என் தங்கை கஸ்தூரி மடத்தின் நிர்வா கத்தைக் கவனித்துக்கொள்வார்!’ என்ற வைஷ்ணவி யின் ஆறுதலுக்குப் பிறகே சாந்தமானாராம் சந்நிதானம். இந்த அளவுக்கு ஆதீனத்தின் ஆசிகளைப் பெற என்ன தவம் செய்திருக்கிறார் வைஷ்ணவி? மடத்தின் நிர்வாகத்தில் இனி கஸ்தூரியின் பங்கு என்ன?  

 தங்கள் மடத்துக் கோயிலான கச்சனம் கைச்சினேஸ்வரர் ஆலயத்துக்கு  கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அடிக்கடி கச்சனம் வந்த மதுரை ஆதீனத்தை, அங்கே ஆலயப் பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்ட கமலா என்ற பெண்ணின் பக்தி ஈர்த்திருக்கிறது. படிப்பை முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கும் தன் மூத்த மகளுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று கமலா கேட்க, தனக்கு உதவியாளராக நியமித்து மதுரைக்கே அழைத்துச் சென்றுவிட்டார் ஆதீனம். அறியாப் பெண்ணாக மடத்துக்குள் நுழைந்து, பிறகு தனது திறமை யால் ஒட்டுமொத்த மடத்தின் நிர்வாகத் தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்தான் வைஷ்ணவி. திருமணம் நிச்சயமாகி இருப்பதால், மீடியா வெளிச்சம் விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் வைஷ்ணவி. அவரது தங்கை கஸ்தூரியிடம் பேசினேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைஷ்ணவி சென்றார்... கஸ்தூரி வந்தார்?

''இனிமே வைஷ்ணவி மதுரை மடத்துக்குப் போவாங்களா?''

''மடத்தின் வளர்ச்சிக்கு அவங்க இன்னும் நிறைய வேலை பார்க்க வேண்டியிருக்கு. அதனால போய்த்தான் ஆகணும். ஆனா, அதை எங்க மாப்பிள்ளைதான் (வைஷ்ணவி யின் கணவர்) முடிவு பண்ணணும். அவர் போகலாம்னு சொன்னா, அக்கா போவாங்க. இல்லைன்னா, போக மாட்டாங்க!''

''ஒருவேளை அக்காவைப் போக வேண்டாம்னு மாப்பிள்ளை சொல்லிட்டா என்ன ஆகும்?''

''அக்கா மாமியார் வீட்ல குடித்தனம் நடத்திக்கிட்டே, மடத்து வேலைகளையும் பார்ப்பாங்க. அவசியப்பட்டா, மடத்துக்குப் போயும் பார்ப்பாங்க. அவங்களால எதையும் சமாளிக்க முடியும்.''

''நிச்சயதார்த்தத்துல வைஷ்ணவிக்கு ஆதீனம் ஐந்து லட்ச ரூபாய் சீதனம் தந்தாரே... அது மட்டும்தானா... இல்லை நகைகளும் கொடுத்தாரா?''

''நாங்க அந்தப் பணத்தையே வேண்டாம்னு சொல்லிட்டோம். இதுல நகைகள்லாம் எதுக்கு? எங்க வீட்டு மூத்த பொண்ணுக்கு நாங்க கொஞ்சமாச்சும் நகைங்க சேர்த்துவெச்சிருக்க மாட்டோமா? அதுலயும் மாப்பிள்ளை வீட்ல நகை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டாங்க.''

''மடத்தின் நிர்வாகப் பணிகளில் இனி வைஷ்ணவிக்குப் பதிலா கஸ்தூரியா?''

வைஷ்ணவி சென்றார்... கஸ்தூரி வந்தார்?

''இப்பவே மடத்து வேலைகளைப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அங்கே போய்த் தங்கி வேலை பார்க்கிறதுபத்தி இன்னும் முடிவு பண்ணலை. ஏன்னா, நான் இப்பதான் எம்.சி.ஏ. ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கேன். எனக்கு விதவிதமா டிரெஸ் பண்ணிக்கப் பிடிக்கும். அப்புறம் நான் ஆசையா வளர்க்கிற ரெண்டு வேட்டை நாய்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. இதுபோக படிப்பு முடியணும். இதெல்லாம் யோசிச்சுதான் முடிவெடுக்கணும்.''

'' 'வைஷ்ணவிக்குப் பதிலா நீ வந்துடு’னு உங்களை ஆதீனம் கூப்பிட்டாரா?''

''இல்லை. சந்நிதானம் அப்படிக் கூப்பிடலை... கூப்பிடவும் மாட்டார்!''

கஸ்தூரியிடம் பேசியதில் இருந்து ஒன்றுமட்டும் புரிகிறது... பயந்து ஒதுங்கும் வைஷ்ண விக்கு நேர் எதிர் குணம்கொண்டவராக இருக்கிறார் கஸ்தூரி. எதுவாக இருந்தாலும் புலிப் பாய்ச்சல்தான். அதனால், மதுரை ஆதீன மடம் இனி இன்னும் ஜோராகக் களை கட்டும் என்பதை தமிழ்நாட்டு மகாஜனங்க ளுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism