Published:Updated:

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

இன்று.. ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு,

இறையன்புவின் தோழமையான வணக்கம். இரண்டாம் முறையாக உங்களுடன் பேச வருகிறேன். இப்போது என் தலைப்பு 'தலை’ பற்றியே. 'தலை’ சிறந்தவர்களே தலைசிறந்தவர் களாக முடியும் என்பதால், அலை அலையான தகவல்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். காது கொடுத்துக் கேட்பீர்கள்தானே!

இன்று.. ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகம் முதல் தாடை வரை மூடாமல் இருக்கிற பகுதியே தலை. அங்குதான் நான்கு புலன்களும் அத்தனைப் பொறிகளும் மையமிட்டு இருக்கின்றன. தலை, முடி, விழி, புருவம், செவி, நாசி, உதடு என்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொருள்பற்றி உங்களுடன் பேசவிருக்கிறேன், கேளுங்கள்.

இயற்கை சலித்துச் சலித்து கைதேர்ந்த சிற்பியாய் நம்மைச் செதுக்கிச் செதுக்கி உருவாக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயின. வெளியே நடக்கும் பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்கிறது, ஒவ்வொரு நொடியும்; கண்ணுக்குத் தெரியாத கண்ணாமூச்சியாக; கைகளில் அகப்படாத பட்டாம்பூச்சியாக. அந்தப் பரிணாம வளர்ச்சி நமக்கு அப்பாற்பட்டது. நமக்குள்ளேயே நாம்தான் முன்நின்று பரிணாம வளர்ச்சியை முடுக்கி, நம் பல பரிமாணங்களை வெளிக்கொண்டு வர வேண்டும். நான் முயற்சி செய்வதையே உங்களிடம் முன்மொழிகிறேன்; நான் பயிற்சி செய்வதையே உங்களுக்குப் பரிமாறுகிறேன். உங்கள் காதுகளைக் கொஞ்சம் இரவல் தாருங் கள்; திறக்க வேண்டிய தேவை இல்லாத உறுப்பு கள் அவை.

6.12.12-ல் இருந்து 12.12.12 வரை 044- 66808034 என்ற எண்ணில் என்னை அழையுங்கள். பாசமும் நேசமும் பரிமாறுகிறேன்.

அன்புடன்,
வெ.இறையன்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism