Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் பரபரத்துக்கொண்டு இருந்த அதே சமயம், தாய்லாந்தின் முதல் பெண் பிரதமரான யிங்லக் ஷினவத்ரா மீதும் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு பாய்ந்தது. 'வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ததில் மோசடி செய்துவிட்டார். தனது சகோதரியின் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்’ என்றெல்லாம் குற்றங்கள் சுமத்திக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை 'ஜஸ்ட் லைக் தட்’ காலி செய்துவிட்டார் யிங்லக். 467 வாக்குகளில் 308 ஷினவத்ராவுக்கு ஆதரவாக விழுந்தது. இந்த அழகிய பிரதமருக்கு வயது 45. நமக்கும் இருக்காங்களே!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஆன்ட்ரியா, மம்தா, சந்தியா வரிசையில் பாடகி கம் ஹீரோயின் ஆகிறார் லட்சுமி மேனன். சசிகுமாருடன் 'குட்டிப் புலி’ படத்தில் நடித்துக்கொண்டு இருப்பவரிடம், படத்தின் இசையமைப்பாளர் ரகுநந்தன், தன் அடுத்த  படத்திலேயே பாட வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். ''இசைக் குடும்பத்துல இருந்து வந்துட்டு பாட்டுப் பாடாம இருந்தா எப்படி?'' என்கிறார் லட்சுமி. லட்சுமியே சொல்லியாச்சு... அப்புறம் என்ன?

இன்பாக்ஸ்
##~##

• தமன்னாவின் பல வருட ஆசை சீக்கிரமே நிறைவேறஇருக்கிறது. அஜித்துக்கு விரைவில் ஜோடியாக நடிக்கப் போகிறார். 'தமிழ் இனி வேண்டவே வேண்டாம்!’ என தெலுங்கு 'மழைகளில்’ மட்டுமே நனைந்துகொண்டு இருந்தவரை, தமிழுக்கு மீண்டும் இழுத்து வந்துவிட்டது தல பட வாய்ப்பு. அடடா மழைடா... அடை மழைடா!

• விமானத்தில் பறக்காமல் உலகம் சுற்றுவது சாத்தியமா? 'சாத்தியம்!’ என்று சிரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த கிரஹாம். 1,426 நாட்களில் 201 நாடுகளை ரயில், பேருந்து, டாக்ஸி, சைக்கிள், படகு எனக் கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 2009 புத்தாண்டில் வீட்டை விட்டுக் கிளம்பியவர், 2013 புத்தாண்டுக்கு வீடு திரும்ப இருக்கிறார். பயண அனுபவங்களை வீடியோக்களாக எடுத்துவைத்திருப்பவர், 'அதை ஒரு டாக்குமென்டரி சினிமாவாகச் செய்ய இருக்கிறேன்’ என்கிறார். இப்போதே அந்த டாக்குமென்டரிக்கு பேக்கேஜ் பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டன. மெய்யாலுமே உலகம் சுற்றிய வாலிபன்!

• கர்ப்ப வயிற்றுடன் நடனமாடிய பாப் பாடகி ஷகிரா மீது, 'பாப்பா வயிற்றில் இருக்கும்போது இப்படியெல்லாம் நடனமாடக் கூடாது’ என எதிர்ப்பு அலைகள். ஆனால், அதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் கர்ப்ப வயிற் றின் படத்துடன், 'எங்கள் இருவருக்குமே முதல் குழந்தை என்பதால், பையனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்!’ என ட்வீட்டி இருக்கிறார் ஷகி. 35 வயது ஷகிராவை அம்மா ஆக்கியவர் 25 வயதான கால்பந்து வீரர் ஜெரார்ட். பையன்னா ஃபுட்பால்... பொண் ணுன்னா பாப்!

• நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டது காங்கிரஸ். மத்திய அரசின் உதவித்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துவதுதான் காங்கிரஸின் எலெக்ஷன் ஐடியா. 'ஆதார்’ அட்டையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக அரசின் மானியமும் இப்படி நேரடியாகச் சம்பந்தப்பட்ட வரை வந்தடையும். 'உங்கள் பணம்... உங்கள் கையில்!’ என்று இந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறது காங்கிரஸ். இவ்ளோ நாளா எங்க பணம் உங்க கைல இருந்துச்சே!

இன்பாக்ஸ்

• அஜித், ஆர்யா என்று பரபர ஹீரோக்களுடன் நடித்துவரும் டாப்ஸி... அடுத்து நடிக்க கமிட் ஆகியிருப்பது 'முனி பார்ட் 3’-ல். ராகவா லாரன்ஸே நடித்து, இயக்கும் படத்துக்கு 'கங்கா’ என்று பெயராம். வெள்ளாவி தேவதைக்கு பூச்சாண்டி காட்டப் போறாங்க!

• அமீர் கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கௌரவக் கொலைகளுக்கும் சாதிப் பஞ்சாயத்துக்களுக்கும் எதிராகப் பேசிய அப்துல் ஹக்கீம் என்கிற தொழிலாளியைக் கொலை செய்துவிட்டார்கள். தனது பெற்றோர்தான்கணவ னின் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அப்துலின் மனைவி மாவிஷ். இப்போது காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து மாவிஷ§க்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவும், கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அமீர் கான். கொடுமையடா சாமி!

• அமெரிக்காவில் செயல்படும் தனியார் விண்வெளிப் போக்குவரத்து அமைப்பின் பெயர் ஸ்பேஸ் எக்ஸ். செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப ஆனானப்பட்ட நாசாவே ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துக்கொண்டு இருக்க, 'சீக்கிரமே செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை டூர் கூட்டிச் செல்ல இருக்கிறோம். முதல் ட்ரிப்புக்கு 10 பேர். ஒருவருக்குக் கட்டணம் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள். சீக்கிரமே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் கட்ட முடிவு எடுத்திருக்கிறோம்’ என்று அதிரடியாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு கொடுக்க... மிரண்டுகிடக்கிறது நாசா. 'பூமியில் இருந்து மிக அருகில்... செவ்வாய் கிரகத்தில்...’னு அங்கேயும் போர்டு போட்ருவாய்ங்களோ!

• ஈழப் போரில் காங்கிரஸ் அரசின் மறைமுகப் பங்கை உலகமே அறியும். அதே காங்கிரஸ், இலங்கைத் தமிழர்களை குஜராத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறது. 'பா.ஜ.க. ஆட்சியில் சத்துக் குறைபாட்டினால் குழந்தைகள் இறக்கிறார்கள்’ என்பது குஜராத் காங்கிரஸின் பிரசார ஐடியா. அதற்கு இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர், எலும்பும் தோலுமாகக் குழந்தையை வைத்திருக்கும் படத்தை குஜராத்தில் எடுக்கப்பட்டதைப் போல விளம்பரப்படுத்திவிட்டார்கள். இப்போது விஷயம் கசிந்ததும் கமுக்கமாகிவிட்டது காங்கிரஸ். இவ்ளோ கேவலமா அரசியல் பண்ணித்தான் ஆகணுமா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• ஹீரோயின்கள் என்னென்ன வாங்குவார்கள்? பங்களா, கார், நகைதானே. ஆனால், ஒரு தீவையே விலைக்கு வாங்கியிருக்கிறார் பாலிவுட் நடிகை ஜாக்கு லின் ஃபெர்னாண்டஸ். 'மர்டர் 2’, 'ஹவுஸ்ஃபுல்’ படங் களில் அழகும் இளமையுமாக மயக்கிய ஜாக்குலின், 'எதிர்காலத்தில் அங்கே செட்டில் ஆக உதவும்’என்கிறார். தீவுதான் வீடு என்றால், பிகினிதான் டிரெஸ்ஸா?

• கர்நாடக காங்கிரஸில் சேர்ந்த பிறகு, சினிமாவில் இருந்து விலகி இருந்த திவ்யா ஸ்பந்தனா, ''அரசியல் கற்றுக்கொண்டு இருக்கிறேன். காங்கிரஸுக்குக் கடைசி வரை விசுவாசமாக இருப்பேன். விரைவில் சொந்தமாகப் படங்களைத் தயாரிப்பேன். சினிமா, அரசியல் இரண்டிலும் ஜொலிக்க ஆசை!'' என்கிறார். திவ்யா... திவ்யா!