. ஒ.ரு கோட்டில்... சிறு வளைவில்... அசாத்தியங்களை உருவாக்கக்கூடியவை, டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள்!.
தமிழ் ஓவிய வரலாற்றின் கிளிஷேக்களை உடைத்து, நவீன ஓவிய உலகில் ஒரு புதுப் பாய்ச்சலை நிகழ்த்திய மருதுவின் புத்தம் புதிய முயற்சி இது. வீரம் செறிந்த தமிழ் மன்னர்களின் ஓவியங்களை, புத்தம் புதிய கோணத்தில் வரைந்திருக்கிறார் மருது. 'வாளோர் ஏந்திய அமலை’ (வெற்றி அறிவிக்கப்படும் முன்பாக நடத்தப்படும் கூத்து) என்ற தலைப்பில் 'தடாகம்’ வெளியீடாக விரைவில் புத்தக மாக வெளிவரவிருக்கும் இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றிலும், தமிழ் வீரம் காலத்தைக் கடந்து உறைந்திருக்கிறது. இந்த மன்னர்கள், மக்களில் ஒருவராகவே இருக்கின்றனர்.

''மதுரையில் சிறிய வயதில் இருந்து நான் சித்திரைத் திருவிழாவைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். எனக்கு எப்போது கள்ளழகரைப் பார்த்தாலும் அந்தப் பூச்சுகள், மாலைகள் எல்லாம் ஒரு நொடியில் மறைந்து, வில்லும் அம்பும் ஏந்தி கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஒரு வீரன்தான் கண்ணுக்குத் தெரிவான். மத அடையாளங்கள் கடந்த ஆக அடிப்படையான ஒரு தமிழ் வீரனின் அடையாளங்கள் அவை!'' - அழகாகப் பேசத் தொடங்குகிறார் மருது.

''இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு பண்டைய வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவே இல்லை. வெள்ளைக்காரர்கள் ஆட்சி புரிந்த 200 வருட காலனி வரலாற்றின் தொடக்கத்தில், பார்சி வியாபாரிகள் வெள்ளையர்களை மகிழ்விக்க நாடகங்கள் நடத்தினார்கள். அதுவரை சுமார் 200 ஆண்டு காலமாக வெள்ளையர்கள் சேகரித்த ஆவணங்களின் மூலமாகவே அந்த பார்சி நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்த நாடகங்களில் ஈர்க்கப்பட்ட ஓவியர் ரவிவர்மா, அதில் பயன்படுத்தப்பட்ட உடைகள் போன்றவற்றை வாங்கி, மாடல்களுக்கு அணிவித்து ஓவியங்கள் வரைந்தார். பிறகு, இந்தியத் திரையுலகின் முதல் இயக்குநரான தாதா சாகேப் பால்கே சினிமா எடுக்க வந்தபோது, ரவிவர்மாவின் ஓவியங்களையும் முக்கியமான ரெஃபரென்ஸாக எடுத்துக்கொண்டு, 'ஹரிச்சந்திரா’வை எடுத்தார். அப்போது அரசர் கால சினிமாக்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன என்பதால், இது சுமார் 30 வருடங்களுக்குத் திரும்பத் திரும்ப நடந்தது. பம்பாயில் சினிமா

கற்றுக்கொண்ட தென்னிந்தியர்கள், கிட்டத்தட்ட அதே மராட்டியத்தன்மைகொண்ட உடைகளை யும் பொருட்களையும் கொண்டுவந்து, தமிழக சினிமா பாத்திரங்களை உருவகப்படுத்தினார்கள். அதன் பிறகு, அதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. கடைசி வரை என்.டி.ராமராவ் கழற்றி வைத்த கிரீடத்தை நாமும் விடவில்லை.

அந்தக் கால தமிழ் மன்னர்களின் உண்மையான தோற்றம் எந்த ஓவியத்திலும் சினிமாவிலும் முழுமையாகப் பதிவாகவில்லை. வீரபாண்டி யக் கட்டபொம்மன் உள்பட அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட அலங்கார உருவங்கள் தான். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது, இரண்டு பக்கமும் சோபாவைப் போட்டு மந்திரிகள் அமர்ந்துஇருப்பது, பெண்கள் பின்புறம் நின்று சாமரம் வீசுவது எல்லாமே மிகை அலங்காரம்தான். உண்மையில் தமிழ் மன்னர்கள், வெற்று உடம்புடன் குறைந்த ஆபரணங்களுடன்தான் இருந்திருக்க முடியும்.

இந்த அலங்காரத்தன்மை கவிதையில் மட்டுமல்ல... நம் ஊர் சிற்பம், ஓவியம் உள்ளிட்ட கலைகளிலும் உண்டு. நமது கலை வெளிப் பாடுகளின் தோற்றத்தில்... இலக்கணத்தன்மையுடன் யதார்த்தமும் இணையும் போதுதான் நாயக்கர் காலச் சிற்பங்களில் தொந்தியே வருகிறது. அதற்கு முன்பு ஆண்களுக்குத் தொந்தி இல்லையா என்ன?! இருந்தது. ஆனால், வெளிப்படுத்தப்படவில்லை. பிற்பாடு, சினிமா எடுக்க வந்தவர்கள், இந்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தியபோது, இதே அலங்காரத்தன்மை சினிமாவுக்குள்ளும் வந்தது. விளைவு, மக்கள் மனங்களில் அரண்மனை, அரசன், ராணி, மந்திரி எல்லோரையும்பற்றி ஒரு மிகைச் சித்திரம் தோன்றிவிட்டது. இவற்றின் காரணமாக ராஜராஜ சோழன் பற்றியும், கட்டபொம்மன் பற்றியும் சொல்லும்போதே மக்களின் மனம், ஏற்கெனவே பழக்கப்படுத்தப்பட்ட பிம்பங்களை நினைத்துக்கொள்கிறது. முதலில் இதை உடைக்க வேண்டும். தமிழின் வீரம்மிக்க மன்னர்களுக்கு எனத் தனித்துவமான தோற்றமும், கம்பீரமும் இருந்திருக்கிறது. அதை உருவகப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்.

10 வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்த ஈழத்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த யோசனை வந்தது. அப்போது ஆரம்பித்து, தொடர்ந்து தமிழ் மன்னர்களை வரையத் தொடங்கினேன். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஏற்கெனவே கற்பிக்கப்பட்ட சாயல்கள் இல்லாத, அசல் தமிழ் மன்னர்களின் அடையாளங்களைத் தேடும் பயணம். இந்த முயற்சி, பண்டைய தமிழக மக்களையும், தமிழக வாழ்வையும், தமிழ் மன்னர்களையும் தரிசிக்க வேண்டும் என்ற என் ஆசையின் செயல் வடிவம். இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் இம்மாதிரியான உண்மையைத் தேடும் முயற்சிகள் நிறைய நடக்க வேண்டும்!''