Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு மருத்துவர் ருத்ரனின் அன்பு வணக்கங்கள்...

காதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய அடிப்படையான, ஓர் இயல்பான உணர்ச்சி. ஆனா, இன்றைய காலகட்டத்தில் காதலைக்கூட அரசியல் ஆக்குவதற்குச் சில கட்சிகள் முயலும்போது, நம்மில் சிலரே காதலை ஒரு பிரச்னையாகப் பார்க்கிறோம். உண்மையா காதல்னா என்ன?  

அறிவியல் மூலமா காதலைப் பத்தி நிறைய விஷயங்களைக் கண்டுபிடிச்சு ஸ்டடி பண்ணியிருக்காங்க. அதன்படி காதல் அடிப்படையான மூன்று விஷயங்களைக்கொண்டது. அவை என்னென்ன? இன்றைய இளைஞர்களுக்குக் காதல் மீது நிறைய சந்தேகங்கள், குழப்பங்கள்... காதலைத் தெளிவா கண்டுபிடிக்க ஒரு சின்ன டெஸ்ட் இருக்கு... ட்ரை பண்றீங்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று... ஒன்று... நன்று!

கடவுள்னா என்ன, எல்லாரும் கடவுள் உண்டுனு சொல்றோம், இல்லைனு சொல்றோம். ஆனா, கடவுளைப் பத்திப் பேசாமலோ, நினைக்காமலோ, வாழ்க்கை நடக்கிறது இல்லை. கடவுள்னா என்ன? தெளிவாப் பேசுவோம். அதைவெச்சுப் பணம் சம்பாதிக்கிற ஒரு கூட்டம் இருக்கு. சாமியார்னு சொல்ற ஒருத்தனும் இங்கே யோக்கியன் கிடையாது, அதைப் பத்தியும் சொல்றேன்.

அடுத்து வெற்றி. நம் எல்லோருக்கும் பிடிச்ச வார்த்தை, எல்லாருக்கும் வேண்டிய வார்த்தை, எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. முதல்ல, வெற்றின்னா என்ன? உங்களோட வெற்றியின் இலக்கு எப்படி இருக்கணும்?

இப்போதைய நிலைமையில சின்னப் பசங்க வரைக்கும் மது அருந்துவது நம்ம சமூக அங்கீகாரமா ஆயிடுச்சு. வாழ்க்கையில எல்லாருக்கும் ஏதோ ஒரு விதமான போதை தேவைப்படும். ஆனா, போதையில இருந்தா அவன் நல்லா உத்வேகத்தோட இருப்பான். கவிதை எழுதுவான், சந்தோஷமா இருப்பான், ரிலாக்ஸா இருப்பான்னு நம்மை நாமே ஏமாத்திக்கிற பொய்களும் அதிகரிச்சுடுச்சு... அது முட்டாள்தனம். அது ஏன், எப்படி, எதனால அப்படித் தோணுதுனு சொல்றேன்.

3.1.13-ல் இருந்து 9.1.13 வரை 044 - 66802911 என்ற எண்ணில் அழையுங்கள்... அன்போடும் அக்கறையோடும் பல விஷயங்களைச் சொல்கிறேன்!

உங்கள்,
மருத்துவர் ருத்ரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism