Published:Updated:

ஒவ்வொரு குத்தும் ஒரு டன் வெயிட்டுடா!

கே.கே.மகேஷ்படங்கள் : பா.காளிமுத்து

ஒவ்வொரு குத்தும் ஒரு டன் வெயிட்டுடா!

கே.கே.மகேஷ்படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
##~##

பெரிய திமில், ஒட்டிய சைஸ் ஜீரோ வயிறு, கனத்து வளைந்திருக்கும் கொம்புகள், நறுக்கப்பட்ட காதுகள், வெடுக் வெடுக் நடைபோடும் கம்பீரக் கால்கள், உருவிவிட்ட இரும்பு மாதிரி உடம்பு. மொத்தத்தில், அணைகட்டி வைத்த காட்டாறுபோல் இருக்கிறது சின்ன அப்பு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி இருக்கும் கருப்புக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைதான் மிஸ்டர் சின்ன அப்பு.

 சின்ன அப்புவைப் பராமரிக்கும் சுப்ரமணியைத் தவிர, யாரும் அதன் அருகில் செல்வது இல்லை. ஊறவைத்து அரைக்கப்பட்ட பச்சரிசி மற்றும் தானியங்களைத் தின்னக் கொடுத்துவிட்டு, கயிற்றை அவிழ்க்கிறார் சுப்ரமணி. கண்களை உருட்டிப் பயமுறுத்தியபடியே, 'ஊஸ்... ஊஸ்...’ என்று ஒரு மாதிரியாக மூச்சுவிடுகிறது அப்பு. சிமென்ட் தரையைவிட்டு விலகி மண்ணில் கால் பட்டதுமே, முன்னங்கால்களால் மாறி மாறி மண்ணைக் கிளறி, பிராந்தியம் முழுக்கத் தூசி பரப்புகிறது. சிறு குன்றுபோல் குவிக்கப்பட்ட மண்ணருகே கொண்டுசெல்லப்பட்டதும், கட்டளைக்குக் காத்திராமல் மண்டி போட்டு மானாவாரியாகக் குத்துகிறான் சின்ன அப்பு. ஒவ்வொரு குத்தும் ஒரு டன் வெயிட் இருக்கும். முப்பது நாற்பது குத்துக் குத்திய பிறகு ஒரு நிமிடம் நிறுத்தி, கண்களைத் தட்டி முழிக்கிறது. விழிகளுக்குள் புகுந்திருந்த மண் உதிர்கிறது. ஒருமாதிரியாகச் செருமி மூக்கில் நுழைந்த மண்ணையும் வெளியேற்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு குத்தும் ஒரு டன் வெயிட்டுடா!

ஜல்லிக்கட்டுக்குக் காளையைப் பழக்கும் வித்தை சொல்லத் தொடங்கினார் சுப்ரமணி. 'ஆயிரம், ரெண்டாயிரம் மாடுகளை வெச்சிருக்கிறவங்க கிடையில, நல்ல குட்டியா பார்ப்போம். அதோட தாய் யாரு? அதுமேல விழுந்த காளை எதுனு மாட்டுக்காரனை இனம் காட்டச் சொல்லுவோம். குட்டியும் பிடிச்சு, அதோட வம்சமும் பிடிச்சுப்போச்சுன்னாத்தான் வாங்குவோம். குட்டியை நல்லாத் தீனி போட்டு, காயடிக்காம வளர்த்தாலே ஜல்லிக்கட்டுக் காளை கணக்கா திமுதிமுனு வந்துடும். ஆனா, பயிற்சி கொடுக்கலைன்னா, கூட்டத்தைப் பார்த்து மிரளும். அதனால, கன்னுக்குட்டியா இருக்கச்சயே 'முட்டு... முட்டு... முட்டு’னு சொல்லிப் பழக்குவோம்.

பயிற்சி கொடுத்த மாட்டை ஒரே இடத்துலதான் கட்டுவோம். இடத்தை மாத்திட்டாலே காவார (காலால் மண்ணைக் கிளற) ஆரம்பிச்சிடும். அப்படிப் பயிற்சி கொடுத்த மாடுதான், ஆயிரம் பேர் சுத்தி நின்னாலும் பயப்படாம, காவாரி, கொம்பால தரையைக் குத்திக் காட்டும். ஒரு பய பக்கத்துல வர மாட்டான்.

சின்ன அப்புவை அது ஆறு பல்லுக் கன்னுக்குட்டியா இருக்கப்ப வாங்குனோம். இன்னைக்கு அதுக்கு எட்டு வயசு. அதுக்குள்ள நாலஞ்சு ஜல்லிக்கட்டைப் பார்த்துருச்சு. இதுவரைக்கும் ஒரு பயகூட அப்புவை அணைய முடியலியே!'' என்று பூரிக்கும் ஜல்லி ஜாக்கி சுப்ரமணி, மேலும் தொடர்கிறார்...

'பொதுவா, மிருகங்களுக்கு இயற்கையாவே நீந்தத் தெரியும். தண்ணிக்குள்ள தள்ளிவிட்டா, வேகமா நீந்தித் தரைக்கு வரணும்கிற அளவுக்குத்தான் நீந்துங்க. ஆனா, பயிற்சி கொடுத்த காளை மட்டும் களைப்புத் தட்டுற வரை சுத்திச் சுத்தி வரும்.  

முன்னாடிலாம், தெரு நாயைப் பிடிச்சி மஞ்ச கலரு சாக்குப் பைக்குள்ள போட்டுக் கட்டிருவாங்களாம். அது தவ்வித் தவ்விக் குதிக்கும்போது, மாட்டைப் பார்த்து குத்துடா குத்துனு சொல்லிப் பழக்குவாங்க. ஆனா, இப்பலாம் அந்த மாதிரி யாரும் பயிற்சி கொடுக்கிறது இல்லை. மாட்டுக்கும், பிடிகாரங்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்தணும்கிறதுல எல்லாரும் கவனமா இருக்காங்க. ஏன்னா, 'நிபந்தனைகளுக்கு உட்பட்டு’ ஒரு சடங்கு சாங்கியத்துக்குத்தான் இப்பல்லாம் ஜல்லிக்கட்டு நடக்குது!'' என்று சுப்ரமணி சொல்ல, 'ஊஸ்... ஊஸ்...’ என்று அதை ஆமோதிப்பதுபோலச் சீறுகிறான் அப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism