Published:Updated:

குதிரை எனும் ஆல்டர் ஈகோ!

பாரதி தம்பி

குதிரை எனும் ஆல்டர் ஈகோ!

பாரதி தம்பி

Published:Updated:
##~##

வியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கோடுகளுக்கு நீங்கள் ரசிகரா? ஆம் எனில், மருதுவின் குதிரை ஓவியங்களை அத்தனை எளிதில் உங்களால் கடந்து வர முடியாது. கம்பீரமும், வீரமும், திமிரும், ஆளுமைத்திறனும் மிகுந்த மருதுவின் குதிரைகள் தனித்துவம் மிக்கவை. காற்றைக் கிழித்து சீறிப் பறக்கும் குதிரையின் பாய்ச்சலை மருதுவின் ஓவியங்களில் மட்டுமே உணர முடியும்.

 ''மதுரை, கோரிப்பாளையத்தில் எங்க வீட்டைவிட்டு வெளியில் வந்தா ஜட்கா வண்டிக்காக விதவித மான குதிரைகள் நிற்கும். அதையே மணிக்கணக்கா வேடிக்கை பார்ப் பேன். இன்னொரு பக்கம் டெரகோட்டா குதிரை செய்வாங்க. செஞ்சு முடிக்கிற வரைக்கும் அங்கேயே நிற்பேன். எங்க அப்பா முதன்முதலில் எனக்கு கார்ட்டூன் புத்தகம் வாங்கித் தந்தார். அதில் இருந்த குதிரைகள் எனக்கு வேறொரு அனுபவம் தந்துச்சு. அந்தக் குதிரை ஓவியங்களை எல்லாம் வெட்டி வெட்டி ஒட்டிவெச்சுக்குவேன்!'' - பிரத்யேக ரசனையைப் பகிர்ந்துகொள்ளும் போது, அப்படி லயித்துப் பேசுகிறார் மருது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குதிரை எனும் ஆல்டர் ஈகோ!

''அதேபோல், மதுரையில் இருந்த நாயக்கர் காலச் சிற்பங்கள் குதிரையோட இன்னொரு பரிமாணத்தை எனக்கு

குதிரை எனும் ஆல்டர் ஈகோ!

அறிமுகப்படுத்தியது. சென்னை ஓவியக் கல்லூரியில் படிச்சப்போ, சாயங்காலம் மூணு மணி ஆச்சுன்னா, பக்கத்துல இருக்கும் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போவேன் அங்கேதான் குதிரைப்படை போலீஸ் இருக்காங்க. அந்தக் குதிரைகள் எல்லாம் லாயத்தில் கட்டி இருக்கும். அங்கேயே உட்கார்ந்து குதிரைகளை விதவிதமா வரைவேன்.

கௌபாய் படம், வரலாற்று சினிமாக் கள்... எதுவா இருந்தாலும் குதிரையை 360 டிகிரியிலும் ரசிக்கிறதுதான் எனக் குப் பிடிச்ச பொழுதுபோக்கு. றெக்கை உள்ள குதிரை, கொம்பு உள்ள குதிரைனு விதவிதமா முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஓவியத்துடன்... சிற்பத் திலும் குதிரைகளை நான் விடலை; குதிரையும் என்னை விடலை. பிறகு, ஒரு அனிமேட்டரா மாறினப்போ, குதிரையின் ஒவ்வொரு அசைவையும் இன்னும் நெருக்கமா, துல்லியமாக் கவனிச்சேன். கழுத்தைத் திருப்பும்போது முடி புரள்வதும், வேகமா ஓடும்போது கால் துள்ளுவதும்... குதிரையின் ஒவ்வொரு அசைவிலும் வேகம், கம்பீரம். ஒரு கட்டத்தில் 'நாம் ஏன் இந்தக் குதிரை மேல் இவ்வளவு காதலுடன் இருக்கிறோம்’னு யோசிச்சுப் பார்த்தப்போ, எனக்கு புரிஞ்சது என்னன்னா, குதிரை என்னோட ஆல்டர் ஈகோ. நான் வேற... குதிரை வேற இல்லை... நான்தான் குதிரை!'' என்கிற மருது, வீரம் செறிந்த தமிழ் மன்னர்களின் ஓவியங்களைக் கடந்த வருடம் 'வாளோர் ஆடும் அமலை’ என்ற பெயரில் ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்தார். அதில் ஒரு மன்னர் கூடக் குதிரையில் போகவில்லை.

குதிரை எனும் ஆல்டர் ஈகோ!
குதிரை எனும் ஆல்டர் ஈகோ!

''அது திட்டமிட்டு வரைஞ்சதுதான். நம் மன்னர்களின் தோற்றம் மனதில் பதியணும். அதுக்காகத்தான் குதிரையைத் தவிர்த்தேன். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான என் குதிரை ஓவியங்களைத் தொகுக்கும் வேலை கள் நடந்துட்டு இருக்கு. அடுத்த வருஷத்துக் குள் அது ஒரு நூலா வரும். தனிப்பட்ட வகை யில் எனக்கு ஒரு ஆதங்கம் இருக்கு. இந்த தமிழ் நிலத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர் கள் மூன்று பேரும் கம்பீரமா குதிரையில் போகணும். அப்படி ஒரு சிலை சென்னையில் அல்லது மதுரையில் இருக்கணும். இதற்கான முன்முயற்சியை அரசு எடுத்தால், நானே முன் நின்று செய்துதரத் தயாரா இருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism