Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  2012-ல் கேத்ரீனா கைஃப் நடித்த 'ஏக் தா டைகர்’, 'ஜப் தக் ஹை ஜான்’ ஆகிய படங்கள் அவருக்கு ஹிட் ஹீரோயின் அந்தஸ்தைத் தக்கவைக்க, கிடுகிடுவெனச் சம்பளத்தை ஏற்றிவிட்டார். ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் நான்கு விருது வழங்கும் விழாக்களில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு இருப்பவர், அதற்கெனப் பெறவிருப்பது 10 கோடி ரூபாயாம். அடடா மழைடா... பண மழைடா!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•   சினிமாவை ரீ மேக் செய்வார்கள்... ஒரு ஹிட் பாடலின் நடனத்தை? செய்கிறார் பிரபுதேவா! 'எனிபடி கேன் டான்ஸ்’ படத்தில் தனக்குப் பளீர் அங்கீகாரம் கொடுத்த 'முக்காலா முக்காபுலா’ பாடலின் நடனத்தை ரீ மேக் செய்து ஆடியிருக்கிறார் பிரபு. முக்காபுலா சீஸன் 2.

•   வெங்கட் பிரபுவின் பெரியப்பா மகள் வாசுகி பாஸ்கர், பரபரப்பான ஃபேஷன் டிசைனர். 'மங்காத்தா’ படத்தில் வாசுகியின் மேற்பார்வையில்தான் அஜித்துக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக் வைத்தார்களாம். அது ஹிட் அடிக்கவே, இப்போது தான் இயக்கும் 'பிரியாணி’ படத்தில் கார்த்திக்கின் லுக்கையும் வாசுகியிடமே ஒப்படைத்துவிட்டாராம் வெங்கட். இப்போ சில்லி அண்ட் மசாலா லுக்கா?

• அமீர் கானின் மகள் இரா, மெள்ள மெள்ளப் புகழ் வெளிச்சத்துக்கு வருகிறார். அமீர் கானின்முதல் மனைவி ரீனாவுக்குப் பிறந்த இரா, அம்மா-அப்பாவின் அழகான சாயலில் இருக்கிறார். சமீபமாக, சினிமா விழாக்கள், பார்ட்டிகளில் இரா கலகலப்பாகக் கலந்து கொள்வதால், தங்கள் படங்களில் நடிக்கவைக்கலாமா என்று யோசிக்கிறார்கள் பாலிவுட்டின் பிக்ஷாட் இயக்குநர் கள். அப்பாவுக்கு மகளா ஒரு படத்துல நடிங்க!  

இன்பாக்ஸ்

•   இடது முழங்கால் காயம் காரணமாக யு.எஸ். ஓப்பன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடால், கடந்த வாரம் அபுதாபி ஓப்பன் போட்டிக்கு வந்தார். 'இது என் உடல் தகுதி குறித்த பரிசோதனை ஆட்டம்தான். அடுத்த இரண்டு மாதங் களில் போட்டிகளில் என்ன முடிவு வந்தாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். என் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம்!’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். படலை!

•   கர்நாடகாவில் நடந்த 'சுவர்ண விதான சௌதா’ அலுவலகத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. விழாவுக்கென அரசாங்க சர்க்யூட் ஹவுஸைப் புதுப்பித்த வகையில், ஒரு கோடியே 98 லட்ச ரூபாய் செலவாம். 37 லட்சங் கள் பிரணாப் தங்கிய அறையை அலங்கரிக்கச் செலவானதாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்தத் தகவல், சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறையில், பிரணாப் தங்கி இளைப்பாறியது, ஒரு மணி நேரம் மட்டுமே. என்ன கொடுமை பிரணாப்ஜி இது?

இன்பாக்ஸ்

• பாலிவுட் கனவுகள் படபடக்கின்றன நயன்தாராவிடம். தெலுங்கில் நயன் நடித்த 'ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படத்தை இந்தியில் டப் செய்திருக்கிறார்கள். ப்ரீமியர் ஷோ முடிந்த பிறகு, பாலிவுட் பிரபலங்களிடம் இருந்து வந்த வாழ்த்து நயன்தாராவைச் சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இந்தியில் வெளியாகும் 'ஸ்ரீராமராஜ்ஜியம்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தால், இந்தி சினிமாவில் நேரடியாக நடிக்கத் திட்டமாம். எட்டுத் திக்கும் கொடி கட்டும் நயன்!

இன்பாக்ஸ்
##~##

•   என்ன ஆச்சு பிரியங்கா சோப்ராவுக்கு? ''சினிமாவில் கருத்து சொன்னால், மக்களுக்குப் பிடிப்பது இல்லை. பொழுதுபோக்கத்தான் சினிமாவுக்குப் பலர் வருகிறார்கள். ஆகவே, மெசேஜ் சொல்லும் படங்களை மக்கள் அவ்வளவாக ரசிப்பது இல்லை!'' என்று குபீர் கருத்துச் சொல்லி இருக்கிறார். 'பர்ஃபி’ படத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தாலும் விருது, வசூல் பட்டியல்களில் முக்கியத்துவம் கிடைக்காததால் அப்செட். விடுங்க, 'ஃபேஷன் பார்ட் 2’ பண்ணலாமே பி.சி!  

• 'வாழ்க்கை உனக்கு எலுமிச்சம் பழங்களை மட்டுமே அளித்தால், எலுமிச்சைச் சாறு செய்து குடி’ என்ற பிரபல ஆங்கிலப் பழமொழிக்குக் கச்சித உதாரணம்: அமெரிக்கா வின் 27 வயது இளைஞன் பிரன்டன் சிக்கோட்ஸ்கி. இந்த வயதிலேயே பிரன்டனின் தலைமுடி எல்லாம் கொட்டி முழு வழுக்கையாகிவிட்டது. ஆனால், வழுக்கையை மறைக்கத் தொப்பி அணிந்துகொள்ளாமல், அந்தக் காலி இடத்தில் நிறுவனங்களின் விளம்பரங்களை டாட்டூவாகக் குத்திக்கொண்டு, பைசா சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார் பிரன்டன். அந்த டாட்டூ விளம்பரத்தோடு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் 6 மணி நேரம் நடந்து திரிய 320 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கிறார். உள்ளூர் விளம்பரங்கள் குவியத் துவங்க, இப்போது ஆள் பிடித்து மொட்டை அடித்து விளம்பரம் பதித்துக் கொண்டு இருக்கிறார் பிரன்டன். சூப்பரப்பு!

• அமெரிக்காவின் உயரிய தொழில்நுட்ப விருதான 'நேஷனல் மெடல் ஆஃப் டெக்னாலஜி அண்ட் இன்னோ வேஷன்’ பதக்கம் வென்றிருக்கிறார் இந்திய-அமெரிக்கரான ரங்கஸ்வாமி ஸ்ரீனிவாசன். 1981-ம் ஆண்டு ரங்கஸ்வாமி  கண்டுபிடித்த அல்ட்ராவயலட் எக்சைமர் லேசர், விழித்திரையின் பார்வைக் கோளாறை அருகில் உள்ள செல்களுக்குப் பாதிப்பு இல்லாமல் சரிசெய்வதில் உதவியது. இதற்காகக் கௌரவப்படுத்தப்பட்டு இருக்கும் ரங்கஸ்வாமி, ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிபவர். வி.ஆர்.எஸ். வாங்கிட்டு இந்தியா வாங்க சார்!

• ''

இன்பாக்ஸ்

என் மூத்த பெண் அடம்பிடித்துக் கேட்டாளே என்று மொபைல் வாங்கித் தந்துவிட்டேன். அவள் மொபைல் போனை நான் சோதனையிட்டது இல்லை. அவளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்களிடம் மொபைலில் பேசுகிறாள் என்பதும் தெரியும். நான் அவளை நம்புகிறேன். காரணம், அவளுக்குப் பெரிதாகப் பொய் சொல்லத் தெரியாது'' என ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுத்திருக்கிறார் ஒபாமா. அப்பன் கவலை சாமி!

•   ஒசாமா பின்லேடனிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி களை இப்போது கண்டுபிடித்திருக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம். விதிமுறைகளை மீறி 14 அடி உயரச் சுற்றுச் சுவருடன் மூன்று மாடிக் கட்டடத்தை எழுப்பிக்கொள்ள வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஒசாமா கொடுத்த லஞ்சம் 50 ஆயிரம் ரூபாய். இதை ஒசாமாவின் டைரி குறிப்பில் இருந்து தெரிந்துகொண்ட பாகிஸ்தான் காவல் துறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைது செய்திருக் கிறது. 'லஞ்சம் வாங்கியது உண்மை. ஆனால், அது ஒசாமாவின் வீடுனு தெரியாது!’ என்பது அந்த லஞ்சப் பேர்வழிகளின் பதில். ஒசாமா பின்லேடனா இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை ஆகுது!

இன்பாக்ஸ்

•   ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் 'நாச் பாலியே’ டான்ஸ் ஷோவில் நடனமாடி இருக்கிறார்கள் சானியா மிர்சாவும் அவரது கணவர் சோயிப் மாலிக்கும். 'காலைல அஞ்சரை மணிக்கே எந்திரிச்சு பிராக்டீஸ். 11 மணி நேரம் நிகழ்ச்சி நடந்துச்சு!’ என சானியா சந்தோஷத்தில் ட்வீட்ட, 'இந்த அக்கறையை டென்னிஸ் பயிற்சியில் காட்டும்மா’ என எதிர் ட்வீட்டுகள் விழுந்திருக்கின்றன. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism