அன்புக்குரிய வாசகப் பெருமக்களே,

85 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு பிப்ரவரி மாதத்தில்தான் ஆனந்த விகடனின் உதயம் நிகழ்ந்தது!

வெள்ளையரின் ஆட்சியில் கட்டுண்டு, இந்தியத் திருநாடே சுதந்திர வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருந்த அந்தத் தருணத்தில், விகடன் தனக்கு என ஒரு தனிப் பார்வையோடு தமிழ் வாசகர்கள் மத்தியில் நடை போட ஆரம்பித்தான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்ததுடன், கசப்பான பல உண்மைகளையும் நையாண்டியான நடையில் வெளிப்படுத்தி, மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தான்.

தீர்க்க தரிசனம் என்பது சிலருக்கே வாய்க்கும். மிக மிகச் சிலரால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். அந்த மிகச் சிலரில் ஒருவரான நம் ஸ்தாபகர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களை இங்கே நெகிழும் நினைவுகளோடு நாங்கள் நினைவுகூர்கிறோம்.

கடந்த 85 ஆண்டு காலத்தில், படிப்படியாகப் பல வளர்ச்சிகளைக் கண்டு, புதிய பரிமாணங்களை எட்டி, இன்று விகடன் குழுமம் ஓர் ஆல விருட்சமாகப் பரந்து விரிந்து நிற்பதற்குக் காரணம், அன்று விதைக்கப்பட்ட விதையின் வீரியம்தான். 'வாசகர்களே நமது எஜமானர்கள்' என்பதை மூச்சுக்கு மூச்சு கொண்டிருந்த அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ஆனந்த விகடனில் செய்த முதலீடுதான், அவரது தீர்க்கதரிசனத்தின் முதல்படி.

மாத இதழாக வெளியாகத் துவங்கிய ஆனந்த விகடன்... மாதம் இருமுறை ஆகி, மாதம் மூன்றாக வடிவெடுத்து... அடுத்த சில வருடங்களில் வார இதழாக விகடன் வரத் துவங்கியதும்கூட வாசகர்களின் ஏகோபித்த விருப்பத்துக்கு இணங்கத்தான். வண்ண வண்ணப் படங்களையும், நெஞ்சை அள்ளும் வடிவமைப்பு நேர்த்தியையும் நீங்கள் முழுமையாக ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, இரண்டரை வருடங்களுக்கு முன் அளவிலும் தன்னைப் பெரிதாக்கிக்கொண்டு விசுவரூபம் எடுத்தான் விகடன்!

சுவையான எழுத்து... தரமான வாசகர்கள்... வளமான விளம்பரங்கள்... இவை மூன்றும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஒரு பத்திரிகை கற்பக விருட்சமாக தழைத்தோங்கி நிற்கும் என்பது அமரர் எஸ்.எஸ்.வாசன் எங்களுக்கு வகுத்தளித்த பாதை. அந்தப் பாதையில் இதோ... அடுத்ததொரு மைல்கல்!

எத்தனைதான் பரந்து விரிந்து வளர்ந்தாலும், ஒரு விருட்சம் தன் வேரை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வது இல்லை. தமிழ் மண்ணின் எல்லாத் திசைகளிலும் தன் வேரோடு சேர்த்து விழுதுகளையும் பரவச் செய்ய வேண்டும் என்பது விகடனின் நெடுநாள் கனவு. அந்தக் கனவுதான் இந்த சிலிர்ப்பான தருணத்தில் மெய்ப்பட்டு இருக்கிறது.

ஆம், வாசகர்களே... மண் வாசனை பொங்கும் உங்கள் ஊர்ச் செய்திகளிலும் இனி தனிக் கவனம் செலுத்த வருகிறான் விகடன். தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் அரங்கேறும் கலகலப்பான சம்பவங்களையும், சாதனைகளையும், விழாக்களையும், வித்தியாசமான மனிதர்களையும் வண்ணமயமாக 'கவர்' செய்யப் போகிறான்.

உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த ரசனைக்குமான அடையாளமாக நம் ஆனந்த விகடன் தன்னை மெருகேற்றிக்கொண்டே வரும் வேளையில், வாசகர்களாகிய உங்களுக்கு இன்னும் நெருக்கமாக உங்கள் நகரத்தின்... உங்கள் பேட்டையின்... ஏன், உங்கள் வீட்டின் தனிப்பட்ட ரசனையையும் தேடலையும் பூர்த்திசெய்யும் முயற்சியின் துவக்கமாகவே இந்த இதழ் முதல் மலர்கிறது 'என் விகடன்’ இணைப்பு!

முதலில் கோவை மண்டலத்தில் அடியெடுத்து வைக்கும் 'என் விகடன்’ அடுத்தடுத்த வாரங்களில் திருச்சி, மதுரை, புதுவை மற்றும் சென்னை ஆகிய மண்டலங்களிலும் தன் கம்பீர அணிவகுப்பைத் தொடங்கும்... தொடரும்! 'என் விகட’னின் அட்டையில் தொடங்கி அங்குலத்துக்கு அங்குலம் நட்சத்திர நாயகர்களாக வலம் வரப்போவது வாசகர்களாகிய நீங்கள்தான். ஒவ்வொரு மண்டலத்துக்குமான இணைப்புகளில் அந்தந்த மண்டலத்தில் அரங்கேறும் கலகலப்பான சம்பவங்களும் சாதனைகளும் விழாக்களும் வித்தியாசமான மனிதர்களுமே கொண்டாடப்படுவதைக் காணலாம்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நேரடியாகப் பயன்தரக்கூடிய வேறு பல ஆச்சர்யங்களையும் 'என் விகடன்’ அடுத்தடுத்து சுமந்து வரும். அதற்கு ஒரு சின்ன சாம்பிள்தான் - கோவைக்கான 'என் விகட’னில் இடம் பெற்றிருக்கும் சிறப்புச் சலுகைக் கூப்பன்கள். எல்லா மண்டல இணைப்பு களிலும் பிரத்யேகமான இந்த சலுகைக் கூப்பன்கள் இடம் பெறும். மற்றவை, இப்போதைக்கு ஸ்வீட் சஸ்பென்ஸாக இருக்கட்டுமே!

இதோ, கோவை மண்டலத்தில் இந்த இதழோடு சேர்ந்து பதிகிறது 'என் விகடன்' விழுது. மற்ற மண்டலத்துக்காரர்கள் அன்போடு காத்திருங்கள், அடுத்தடுத்த இதழ்களுக்கு!

ஆனந்த விகடன் எப்போதும் உங்கள் பக்கத்தில்... இனி, நீங்கள் விகடன் பக்கங்களில்!

உங்கள் ஆதரவை என்றும் நாடும்,

பா.சீனிவாசன்,
நிர்வாக இயக்குநர்,
விகடன் குழுமம்.