பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 'வெண்ணிலா கபடிக் குழு’ ஹீரோ விஷ்ணு, இனி குடும்பஸ்தன். எம்.பி.ஏ., படிப்பின் ஜூனியரான ரஜினிதான் காதல் துணைவி. 'அன்புள்ள ரஜினிகாந்த்’, 'வள்ளி’ படங்களின் இயக்குநர் கே.நட்ராஜின் மகள் ரஜினி. சூப்பர் ஸ்டார் மீதுள்ள அபிமானம் காரணமாகத் தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டியிருக்கிறார் நட்ராஜ். தம்பதிகள் திருமணத்துக்கு முன்னரே ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள். ரஜினி வாழ்த்திய ரஜினி!  

இன்பாக்ஸ்

 உலகின் விலை உயர்ந்த காரான புகாட்டி வெய்ரோன் இந்தியாவுக்கும் வந்துவிட்டது.

இன்பாக்ஸ்

16 கோடி மதிப்பிலான இந்தக் காரை இந்தியாவிலேயே நான்கு பேர்தான் வாங்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன். சென்னை சூப்பர் கார்!

இன்பாக்ஸ்

 விரைவில் அரசியல் கட்சி துவக்கும் எண்ணத்தில் இருப்பதால்தான், அழகிரி மகன் துரை தயாநிதியின் திருமணத்துக்கு விஜய் செல்லவில்லை யாம். அம்மாவின் மனசு கஷ்டப்படும் என்பதால் தான், மதுரைக்குப் போக வேண்டாம் என்று விஜய்க்குச் சொல்லப்பட்டதாம். ஓஹோ!

இன்பாக்ஸ்

கமல்ஹாசனின் அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்’. கமல் ஹாசனே இயக்கி நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், 'தலைவி’யாகத் தேர்ந்துஎடுக்கப்பட்டவர் அனுஷ்கா. சும்மா நச்சுனு இருக்கிறாள்!

இன்பாக்ஸ்

 வீட்டுச் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் ஆங் சான் சூ கி இந்தியா மீது கடும் கண்டனம் தெரிவித்தார். ''மியான்மரின் ராணுவ அரசுடன் வர்த்தக நட்பு பாராட்டும் இந்திய அரசு, காந்தியக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. மியான்மருடன் நேரு, இந்திரா பின்பற்றிய வழிகளை இப்போது இந்தியா கடைப்பிடிப்பது இல்லை!'' என்று குற்றம் சாட்டி இருக்கிறார் சூ கி. ராணுவ அரசுகள் அனைத்தும் இந்திய அரசுக்கு நண்பன்தானே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ரன்பீர் கபூரின் முன்னாள் காதலியான சோனம் கபூர் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். கோக், பகார்டி என நாய்களுக்குப் பெயர்கள். இரண்டுமே ரன்பீர் கபூருக்குப் பிடித்த பானங்களாம். இதெல்லாம் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் வருமா?

 டிசம்பர் மாதம் நார்வேயில் நடக்கவிருக்கும், உலக அமைதிக் கான நோபல் பரிசு வழங்கும் விழாவில்,இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகின் டாப் 9 இசையமைப்பாளர்கள் பங்கேற்று இசை மழை பொழிய இருக்கிறார்களாம். உலகத் தமிழா!

இன்பாக்ஸ்

 'இப்போதைக்குக் கல்யாணம் இல்லை!’ என்று முடிவெடுத்துவிட்ட நயன்தாரா, மீண்டும் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். தெலுங்குப் பட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றனவாம். அப்போ காதல் பயன்தாரா?

இன்பாக்ஸ்

 சென்னையில் இருக்கும்போது, தினமும் வெவ்வேறு பப்களுக்குச் சென்றுவருகிறார் சிம்பு. 'பொழுதுபோக்கச் செல்லவில்லை. நிறையப் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். வித்தியாசமான கேரக்டர்களை ஸ்டடி பண்ண முடிகிறது!’ என்பது பார்ட்டியின் விளக்கம். 'பப்’ளிக்கா நியூஸ் வராத வரையில் சிக்கல் இல்லை!

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு