Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் புத்தகங்கள், கரையான்கள் இல்லாத 'இ நூலகம்’ அமைத்திருக்கிறார் நெல்சன் உல்ஃப் என்பவர். இவருக்கு நூலகம் ஆரம்பிப்பது நெடுநாள் கனவு. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, உலகின் முதல் எலெக்ட்ரானிக் லைப்ரரி அமைத்துவிட்டார் உல்ஃப். இ புத்தகங்களை மட்டுமே வாசிக்கும் வகையில் லேப்டாப், டேப்லட் ஆகியவை மட்டுமே இந்த நூலகத்தில் இருக்கும். இனி வருங்காலத்தில், நம் சந்ததிகள் அப்படித்தான் வாசிக்கும்!

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• சினிமா பிரபலங்களின் இலக்கிய தாகம் இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. 'சேரன் நூலகம்’ என்று பதிப்பகம் துவங்கியிருக்கும் இயக்குநர் சேரன், இனவாத இலங்கை அரசை அம்பலப்படுத்தும் 'போரும் வலியும்’ என்ற நூலைத் தன் முதல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.இயக்குநர் வெற்றிமாறன் 'அதிர்வு’ என்று பதிப்பகம் துவக்கி, மங்கோலியர்களின் வரலாற்றைச் சொல்லும் 'ஓநாய் குலச் சின்னம்’ புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். நல்ல விஷயம்!

• உங்களுக்கு ஒரு பார்சல் வருகிறது. திறந்து பார்க்கிறீர்கள். உள்ளே ஒரு மனிதத் தலை இருந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவின் இல்லினாய்ஸ் விமான நிலைய அதிகாரிகள் அப்படி ஒரு பார்சல் பெட்டியைப் பரிசோதித்தபோது, அதில் மொத்தம் 18 மனிதத் தலைகள் இருந்தன. அதிர்ந்துபோய் விசாரணை செய்தால், அவை இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டவையாம். பீதி நிறைந்த கண்களுடன் பார்சலுக்கு பேக்கப் சொல்லியிருக்கிறார்கள் அதிகாரிகள். நல்லாக் கௌப்புறாய்ங்கடா பீதியை!

இன்பாக்ஸ்

• தமிழில் 'கில்லி’யடித்த, ஒரிஜினல் 'ஒக்கடு’வின் இயக்குநர் குணசேகர் இயக்கும் 'ருத்ரம்மா தேவி’ கதையைக் கேட்டதுமே உருகிவிட்டாராம் அனுஷ்கா. 'இந்தப் படத்துல ருத்ரம்மா தேவியா நடிச்சிட்டே உங்ககிட்ட உதவி இயக்குநராகவும் வேலை பார்க்கிறேன்!’ என்று சம்மதம் பெற்றுவிட்டார்.நீ கலக்கு கண்ணு!

இன்பாக்ஸ்

• ஆர்யாவிடம், 'கல்யாணம் எப்போ?’ என்று கேட்டால், 'நான் சல்மான் கான் மாதிரி கல்யாணம் பண்ணிக்காம லேயே இருக்கப்போறேன்’ என்பார். சல்மான் வழியை ஆர்யா பின்பற்றுவாரோ இல்லையோ, ஆர்யா பாணி யில் மும்பையில் ஹோட்டல் பிசினஸில் இறங்கிவிட்டார் சல்மான். மும்பை, புனேவில் ஹோட்டல்களைத் திறந்து விட்டு, பின்னர் மருத்துவமனைகள் ஆரம்பிக்கவும் திட்டமாம். அடுத்தது அரசியலா பிரதர்?

• மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சமாளிக்கப் புதிய அஸ்திரத்தை எடுத்துள்ளார்கள் சென்னைப் போக்குவரத்துக் காவலர்கள். ஸ்பாட் ஃபைன், லைசென்ஸ் பறிமுதல் எனப் பல்வேறு உத்திகளைக் கையாண்டும் அடங்காத குடிமகன்களுக்குச் சமீபமாக அதிர்ச்சி அளிக்கிறது போக்குவரத்து போலீஸாரின் அணுகுமுறை. போதை வாசத்தோடு பிடிபடும் வாகன ஓட்டிகளின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து, யாரையேனும் ரேஷன் கார்டை எடுத்து வரச் சொல்கிறார்கள். பெற்றோரோ, வீட்டுக்காரம்மாவோ வந்து, ரேஷன் கார்டைக் காண்பித்து உத்தரவாதம் கொடுத்து மீட்க வேண்டுமாம். மீட்புப் படலம் முடிந்ததும், பல நேரங் களில் ஸ்பாட்டிலேயே குடிமகன்களுக்குத் தர்ம அடி விழுகிறதாம். சத்திய சோதனை!

இன்பாக்ஸ்

• 'எல்.எம்.’ என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் துவங்கியுள்ளார் லதா மங்கேஷ்கர். ''டி.வி. ரியாலிட்டி ஷோக்களில் பாடும் நிறையக் குழந்தைகள் அதீத திறமை சாலிகளாக இருக்கிறார்கள். ஆனால், அந்த ஷோ முடிந்ததும் அவர்கள் என்ன ஆகிறார் கள் என்பதே தெரியாமல் போகிறது. அப்படி மறந்துபோன குழந்தைகளைத் தேடிப் பிடித்து, அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வாங்கித் தர வேண்டும்!'' என்கிறார். தமிழகத் துக்கும் தேவை உங்கள் சேவை!

இன்பாக்ஸ்

• அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகிறார். 'அட... வெள்ளை மாளிகையிலும் அண்ணன் - தம்பி பாலிடிக்ஸா?’ என்று ஆச்சர்யப்படாதீர்கள். மாலிக் ஒபாமா அரசிய லில் ஈடுபடவிருப்பது கென்யாவில். கென்யாவில் வசிக்கும் மாலிக், அங்கு ஒரு மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு கென்யப் பிரதமரின் தம்பியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ''எனது ரோல் மாடல் என் அண்ணன் பாரக் ஒபாமாதான். அவரது சாதனை கள்தான் என்னை ஊக்குவித்து தேர்தலில் போட்டியிட உத்வேகம் அளித்துள்ளன. ஆனால், தேர்தல் தொடர்பாக அண்ணனிடம் எந்த ஒரு உதவியும் நான் கேட்க மாட்டேன்!'' என்கிறார் மாலிக். குட் பிரதர்ஸ்!

• மிக அதிக வயதில் இமய மலை யில் ஏறி சாதனை படைத்த இந்தியப் பெண் பிரேம்லதா அகர்வால், இப்போது அன்டார்டிகாவின் வின்சன் சிகரத்தின் உச்சியிலும் கால் பதித்துவிட்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பிரேம்லதாவின் வயது 49. உலகின் மிக உயர்ந்த ஏழு சிகரங்களில் ஆறு சிகரங்களை 'கால்’பற்றிவிட்டார் பிரேம்லதா. ஏழாவது சிகரத்திலும் வெற்றிக் கொடி கட்டுங்க!

இன்பாக்ஸ்

• ''இந்தியப் பெற்றோர்கள், விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளை ஊக்குவிப்பதே இல்லை. விளையாட்டில் பிள்ளைகள் செய்யும் சாதனைகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்த என்னாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன்!'' என்று அறிவித்திருக்கிறார் ஷாரூக் கான். ஹாக்கிக்கு பிராண்ட் அம்பாசிடரா ஆக்குங்க ஆபீஸர்ஸ்!

இன்பாக்ஸ்

• அஜித்துடன் நடித்த 'பில்லா’ படத்தில் பிகினியில் கலக்கியிருப்பார் நயன்தாரா. அதே பிகினி தாண்டவம் இப்போது அஜித்துடன் நடித்துவரும் படத்திலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு, எண்ட் கார்டு போட்டுவிட்டார் நயன். ''இனி, நோ பிகினி. என் குடும்பத்தினரின் கருத்துக்களுக்கும் நான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்!'' என்கிறார் நயன். ஓ.கே. ஓ.கே!