Published:Updated:

தங்கப் பதக்க சிங்கங்கள்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்கள் வென்று இருக்கிறது இந்தியா. (14 தங்கம், 17 வெள்ளி, 33 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 64 பதக்கங்கள்!)   தங்கப் பதக்க சிங்கங்கள் பற்றிய செய்திகள் மட்டும் இங்கே ஓரிரு வரிகளில்...

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• டென்னிஸில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றவர் சோம் தேவ் தேவ்வர்மன். '' 'உன் ஆட்டத்தைப் பார்க்கும்போது எல்லாம் ஹார்ட் அட்டாக் வந்துவிடும்போல இருக்கு’ என்றார் என் அம்மா. அவருக்காகவே நான் நன்றாக விளையாடினேன்!'' என்று சிரிக்கிறார் சோம்தேவ்.

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• தடை ஓட்டத்தில் தனிநபர் தங்கம் வென்ற அஸ்வினி அக்குஞ்சி, தங்கம் வென்ற தொடர் ஓட்ட அணியிலும் ஓர் உறுப்பினர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதில் மாடுகளைத் துரத்திக்கொண்டு கரடுமுரடான காட்டுப் பாதையில் ஓடுவாராம். அதனாலே, பள்ளிக் காலங்களில் நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் இவர் வென்று இருக்கிறார். தற்போது இந்திய ரயில்வே ஊழியை அஸ்வினி!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• ''எனது உயரம் 5 அடிதான். ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் நான்தான் உயரம் குறைவு. ஆனால், உலகின் நம்பர் 1 தடை ஓட்ட வீரர் ஜாக்சனும் எனது உயரம்தான். ஆகவே, சாதிப்பதற்கு உயரம் தடை இல்லை!''- இப்படிச் சொன்னவர், தடகளத்தில் தனி நபர் தங்கம் பெற்ற ஜோசப் ஆப்ரஹாம்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• 10,000 மீட்டர் ஓட்டத்தில் வென்ற ப்ரீஜா ஸ்ரீதரன், வெற்றிக்குப் பிறகு, தன் தாய்க்கும் சகோதரனுக்கும் நன்றி சொல்லி உருகினார். இவரது இள வயதிலேயே தந்தை இறந்துவிட, தாய் வீட்டு வேலை செய்ய, சகோதரன் தச்சராகப் பணிபுரிந்து, ப்ரீஜாவின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• 3,000 மீட்டர் தடை ஓட்டத்தின் பதக்க மங்கை சுதா சிங். 'நெக் அண்ட் நெக்’ முறையில் சீனாவின் யுவான் ஜின்னை வெள்ளிப் பதக்கத்துக்குத் தள்ளினார் இவர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 4 நொடிகள். ''இறுதி நொடிகளில் அந்தச் சீனப் பெண் பயங்கர டஃப் கொடுத்துவிட்டாள். நான் ஜெயிப்பேன் என்று நினைக்கவே இல்லை''- மூச்சு இரைப்புக்கு இடையே சுதாவின் மகிழ்ச்சி வார்த்தைகள் இவை!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• இந்த முறை கபடியில் ஆண்கள் அணி, பெண்கள் அணி இரண்டுமே தங்கத்தைச் சுருட்டி இருக்கின்றன. ஆரம்பம் முதலே அதிரடியாகப் பட்டையக் கிளப்பி வெற்றிக் கோட்டை எட்டியது ஆண்கள் கபடி அணி. ஆனால், பெண்கள் அணியினர் அரை இறுதியில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரானைத் தோற்கடித்தது செம த்ரில் விளையாட்டு!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• 'மிடில் வெயிட்’ குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்றவர் விஜேந்தர் சிங். இவரின் தந்தை பஸ் டிரைவர். தன் மகனின் பயிற்சி செலவுகளுக்காக ஓவர் டைம் ஆக இவர் பஸ் ஓட்டுவார். 'கிரிக்கெட்டுக்குப் பின்னால் மக்கள் செல்வதைப் பார்த்தால், எனக்கு ரத்தம் கொதிக்கிறது’ எனும் விஜேந்தர், தற்போது ஹரியானா மாநிலக் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• குத்துச் சண்டை 'லைட் வெய்ட்’ பிரிவில் தங்கம் வென்றவர் விகாஷ் யாதவ். குத்துச் சண்டை 'ரிங்’கை இவர் 64 கட்டங்களாக மனதில் பிரித்து விளையாடுவாராம். ஆம், இவர் நல்ல செஸ் ப்ளேயரும்கூட. இவர் தற்போது ஹரியானா மாநில மின்சார வாரியத்தில் டைப்பிஸ்ட் ஆகப் பணியாற்றி வருகி றார்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• பங்கஜ் அத்வானி... ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து ஓர் உலக சாம்பியன். ஆசியாட்டில் தங்கப் பதக்கத்தைப் பாக்கெட் செய்திருக்கிறார் பங்கஜ். கர்நாடக மாநிலத்தில் இருந்து கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே வீரர். தற்போது எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் சுட்டிருக்கிறார் ரஞ்சன் சோதி. இவர் காமன்வெல்த் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். அர்ஜுனா விருது பெற்றிருக்கும் இவர், தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்!

தங்கப் பதக்க சிங்கங்கள்!

• ரோவிங் விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்றவர் பஜ்ரங்லால் தக்கார். இவர், தற்போது ராஜபுத்திர ரைஃபிள் படையில் சுபேதாராகப் பணியாற்றி வருகிறார். 2006 தோஹாவில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு இப்போது இன்னும் காஸ்ட்லி பதக்கம் கிட்டியிருக்கிறது!

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு