Published:Updated:

பூங்கா நகரம் சென்னை!

பூங்கா நகரம் சென்னை!

பிரீமியம் ஸ்டோரி
##~##
'இ
னி என் அடையாளம்!’ என்று சென்னை பெருமிதப்பட்டுக் கொள்ளும்... செம்மொழிப் பூங்கா! உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் அமைந்திருந்த 8 ஏக்கர் நிலத்தில்
பூங்கா நகரம் சென்னை!
8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கி இருக்கிறது தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை. செம்மொழிப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய சன் மியூஸிக் தொகுப்பாளினிகள் ஸ்ரீப்ரதா, சக்தி, சூர்யா, அர்ச்சனா, சமந்தாவுடன் சேர்ந்துகொண்டோம். பூங்காவை அமைத்த க்ரீன் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சரவணன், பூங்காவைச் சுற்றிக் காண்பிக்க, தொடங்கியது நந்தவன உலா!
பூங்கா நகரம் சென்னை!
பூங்கா நகரம் சென்னை!

செடி கொடிகள் நிரம்பியிருந்த பூங்கா வாயிலே பசேல் ஆச்சர்யம் அளித்தது. ''இது பசுமைச் சுவர். மும்பையில் முகேஷ் அம்பானியின் புதிய வீட்டில் இந்த மாதிரி பசுமைச் சுவர் உள்ளது. இதில் 35 அரிய வகை தாவர இனங்களில் மொத்தம் 7 ஆயிரம் செடி கள் நடப்பட்டு உள்ளன. மண் அடைக்கப் பட்ட 700 தட்டுகளில் செடிகள் செங்குத்தாகச் சொருகப்பட்டு கீழ் நோக்கி வளர்க்கப் படுகிறது. செடிகள் வாடாமல் இருப்ப தற்காக உள்ளேயே நீர்ப்பாசன வசதி செய்திருக்கிறோம். இந்தச் சுவரின் முகப்பில் உள்ள 'செம்மொழிப் பூங்கா’ என்ற பெயர்ப் பலகை முதல்வர் கலைஞரின் கையெழுத்தை வைத்து உருவாக்கப்பட்டது!'' என்று அறிமுகம் கொடுத்தார் சரவணன்.  

பெரிய வலை அமைப்புக்கு உள்ளே வளர்க்கப்படும் தாவரங்களைப் பார்த்ததும், 'இது என்ன?’ என்று கேட்டார் சூர்யா. ''பட்டர்ஃப்ளை கார்டன். நிறையப் பட்டாம்பூச்சிகளை இந்த வலைக்குள் நிரப்பப் போகிறோம். அதற்காக இந்த வலைக்குள் மகரந்தப் பூக்கள் உள்ள தாவரங் களை மட்டும் வளர்த்து வருகிறோம்'' என்றார் சரவணன். ''ஸாரி பாஸ்... எங்களை எல்லாம் வலைக்குள்ளே அடக்க முடியாது!'' என்று சமந்தா கெத்து காட்ட, 'ஹோ...’ என்று கைதட்டுகிறார்கள் மற்றவர்கள்.    

பூங்கா நகரம் சென்னை!

''இங்கே எத்தனை தோட்டங்கள் இருக்கு?'' சக்தியின் கேள்வி. ''மூலிகைத் தோட்டம், மூங்கில் தோட்டம், போன்சாய் தோட்டம், வெளிநாட்டுத் தாவரங்கள் உள்ள எக்ஸாட்டிக் தோட்டம் என மொத்தம் 22 வகையான தோட்டங்கள் உள்ளன. சீனா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும்... பூனா, மும்பை, பெங்களூரு போன்ற இந்திய நகரங்களில் இருந்தும் 400 வகையான இனங்களில் ஆயிரக்கணக்கான செடிகள் நட்டு உள்ளோம்!'' என்றார் சரவணன்.

பூங்கா நகரம் சென்னை!

முரட்டு வேர்களுடன் குட்டையும் நெட்டையுமாக வரிசையாக போன்சாய் மரங்களைப் பார்த்ததும் அருகில் சென்று அமர்ந்து போஸ் கொடுத்தார்கள். ''இவற்றில் பல மரங்கள் 50 வருடம் பழமையான 'ஃபைக்கஸ் மைக்ரோ கார்ப்பா’ எனப்படும் சீன மர வகை. இந்த மரங்கள் வளர வளர, அதோட கிளைகளை வெட்டிவிட்டுட்டே இருக்கணும். அதனால், வேர்கள் இறுகி பார்க்கவே அழகா இருக்கும்!'' என்பது சரவணின் விளக்கம்.  

அங்கே கீழே கிடந்த ஒரு பூவை எடுத்து காதில் சொருகிக்கொண்ட ஸ்ரீப்ரதா, ''கடவுள் படைச்சதிலேயே ரெண்டு உருப்படியான விஷயம், ஒண்ணு பொண்ணு... இன்னொண்ணு பூ!'' என்று பஞ்ச்சர் டயலாக் விட, ''எந்ந்ந்ந்திரி!'' என்று கலாய்த்த சமந்தா, ''ஆஃப்டர் தி ப்ரேக்... நாங்க அடிக்கடி வருவோம்!'' என்று சொல்ல, தலையாட்டி ஆமோதிக்கின்றன ரிமோட் கிளிகள் சிரிப்போடு!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு