Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

 3 மணி நேர ஜுகல்பந்தி நிகழ்ச்சியை மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொண்டார்கள். முதல் ஒரு மணி நேரம் சுதா ரகுநாதனின் கர்னாடக இசை. 10 நிமிட இடைவேளைக்குப் பின்னர், காட்சியும் கதாபாத்திரங்களும் மாறிவிட, 60 நிமிடங்களுக்கு மேல் கொல்கத்தாவைச் சேர்ந்த கௌஷிகி சக்ரபர்த்தியின் இந்துஸ்தானி சங்கீதம். மீண்டும் ஒருமுறை திரை இறங்கி ஏறியபோது, மேடையில் சுதாவும், கௌஷியும் சமபந்தி. அது கர்னாடகமும் இந்துஸ்தானியும் சங்கமித்த கலகல, விறுவிறு க்ளைமாக்ஸ்! 'மனபேந்த்ர ஸ்மரனே’ என்கிற அமைப்பு, நாரதகான சபா அரங்கில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு ‘Raag Roop Aur Rang’ (RRAR) என்று இந்தி சினிமா மாதிரி பெயர் வைத்திருந்தார்கள். இரு பாடகிகளும் அன்று காலைதான் சந்தித்து மாலை நிகழ்வுக்குத் திட்டமிட்டுக்கொண்டார்களாம். நிகழ்ச்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தால், அரசியல் ஜுகல்பந்தி ஒன்றும் அரங்கேறி இருக்குமே!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

 ஏற்கெனவே வறட்சி, நஷ்ட வியாபாரம் என்று நொந்துகிடக்கும் விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோலப் பேசி இருக்கிறார் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்

இன்பாக்ஸ்

பவார். நாடு முழுவதும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ''நாம் ஏற்கெனவே பி.டி. ரகப் பருத்தியைப் பயிரிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். அதனால், மரபணு மாற்றப்பட்ட மற்ற பயிர்களை ஏன் மறுக்க வேண்டும்? அவற்றைப் புறக்கணிப்பது அதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் உரிமையைப் பறிப்பது போன்றதாகும். எனவே, பி.டி. ரகப் பயிர்களை அனுமதிக்க நான் ஆதரவு தெரிவிக்கிறேன்'' என்று அவர் கூறியிருப்பது, இயற்கை வேளாண் விஞ்ஞானிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 23-ம் புலிகேசியே பரவாயில்லைங்க!

இன்பாக்ஸ்

 எங்கே சென்றாலும் தன்னைச் சுற்றும் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு ரொம்ப்...பவே வித்தியாசமாகப் பதில் அளித்துள்ளார் சல்மான்கான். ''எனக்குத் திருமணம் பற்றி எந்த ஐடியாவுமே இல்லை. ஆனால், குழந்தைகள் வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்!'' என்கிறார் இந்த 47 வயது பேச்சிலர். பேரன், பேத்தி எடுக்குற வயசு வந்துரப் போகுது பாஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 'மதராசபட்டினம்’ விஜய் இயக்கும் 'தலைவா’ படத்தில் விஜயின் வில்லன்... விஜய் யேசுதாஸ்! விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டதுமே, என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் கேட்டுக்கொள்ளாமல் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் விஜய் யேசுதாஸ். இப்போது பார்ட்டி ஜிம்மிலேயே தவமாக இருக்கிறாராம்.  விஜய் vs  விஜய் by  விஜய்!

இன்பாக்ஸ்

 சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் அங்குள்ள இந்தியர்களில் 8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாம். ஆண்டுக்கு 12 லட்சத்துக்கும் கீழ் வருமானம் உள்ளவர்களே அமெரிக்காவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினர். இந்தியாவுல அவங்கள்லாம் 'ஏ’ கிளாஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ஹாலிவுட் ஸ்டார் ஒருவர் இந்திய ஹோட்டலில் சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட்டது குறும்படமாகிப் பரபரப்புகிறது. 'ஆல் யூ நீட் இஸ் கில்’ படப்பிடிப்பில் இருந்த டாம் க்ரூஸ், அருகில் இருக்கும் இந்திய உணவகம் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்று சிக்கன் டிக்கா மசாலாவை ருசித்துள்ளார். சாப்பிட்ட பின் வந்த பில்லுக்கு டாம் தனது அமெரிக்க கிரெடிட் கார்டை நீட்ட, ஹோட்டல் நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நண்பர் அந்த பில்லை செட்டில் செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஒரு குறும்படமாக உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே டாம் க்ரூஸ் போன்ற முகமூடி அணிந்து நடித்துள்ளனர். குறும்புப் படமா இருக்கே?!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 நடிகரின் மகன் நடிகர் ஆவார். அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆவார். மைக்கேல் ஜாக்சனின் மகன்? நிருபர் ஆகியிருக்கிறார். மைக்கேல் ஜாக்சனுக்கும் அவரது இரண்டாவது மனைவி டெப்பி ரோவிக்கும் பிறந்தவர் பிரின்ஸ். இப்போது 16 வயதாகும் பிரின்ஸ், நியூயார்க்கின் 'என்டர்டெய்ன்மென்ட் டு நைட்’ சேனலின் சிறப்பு நிருபராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பிரபலங்களைப் பேட்டியெடுக்கும் பொறுப்பு. ''என் தந்தையின் செல்வாக்கால்தான், இந்த வேலை எனக்குக் கிடைத்துள்ளது. அப்பாவுக்கு நன்றி!'' என்கிறார் பிரின்ஸ். மைக் ஆசீர்வதிப்பார்!

இன்பாக்ஸ்

 ஓர் உயிரினத்தால் அதிகபட்சம் எத்தனை நாட்கள் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும்? 1,500 நாட்கள். அதாவது, நான்கு வருடங்கள் தொடர்ந்து உயிர் வாழ்ந்துவருகிறது ஒரு ஜீவன். ஜப்பானின் கடல்வாழ் உயிரினக் காப்பகத்தில் உள்ள ஐசோபோட் என்ற கடல் வாழ் உயிரினம்தான் அது. கடந்த 2007-ம் வருடம் மெக்சிகோ கடல் பகுதியில் அகப்பட்ட ஐசோபோட், இந்தக் காப்பகத்துக்கு வந்த அன்று மேக்கரல் என்னும் மீனை ஐந்தே நிமிடங்களில் தின்று தீர்த்தது. ஆனால், அதன் பிறகு இதுவரை எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்துவருகிறது ஐசோபாட். சாதாரணமாக, நாள் ஒன்றுக்குத் தனது எடைக்கு நிகரான உணவை உட்கொள்ளும் வழக்கமுள்ள ஐசோபோட் நான்கு ஆண்டுகளாகச் சாப்பிடாமல் இருப்பதும், இன்றும் உயிரோடு இருப்பதும் ஆச்சர்யம் என்கிறார்கள் காப்பக ஊழியர்கள். திரும்பக் கொண்டுபோய் கடல்ல விடுங்கப்பா!

இன்பாக்ஸ்

 டோலிவுட் ஸ்டார் மகேஷ்பாபு தன் ஏழு வயது மகன் கவுதம் கிருஷ்ணாவை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். இப்போதே கவுதமை நடிப்பு, நடனப் பயிற்சிகளில் முழுமூச்சாக இறக்கிவிட்டார் மகேஷ். அட, இதையும் நம்ம விஜய் காப்பி அடிப்பாரே!