Published:Updated:

''வீடியோ பார்த்தார்கள்... வெளுத்துக் கட்டினார்கள்!''

சக்தே இந்தியாசார்லஸ்

 ##~##
து ஒரு காலம்... இந்திய அணியினர், பயிற்சிக்கான எவ்விதத் தொழில்நுட்ப யுக்திகளும் இல்லாமல், மனம் போன போக்கில் விளையாடித் திரிந்த காலகட்டம். அப்போது 'டீம் இந்தியா’ - இந்திய கிரிக்கெட் அணியின் வீடியோ அனலிஸ்ட்டாகப் புகுந்தார்  ராமகிருஷ்ணன் என்கிற ராம்கி. நம் அணியினர், எதிர் அணியினரின் ப்ளஸ், மைனஸ் திறமைகளை வீடியோக்களாகத் தொகுத்து, அதற்கேற்ப இந்திய வீரர்களுக்குப் பயிற்சி அளித்தவர் ராம்கி. தற்போது 'பெர்ஃபாமென்ஸ் அனலிஸ்ட்’ என்று ராம்கியை அழைக்கிறார்கள். ராம்கி இப்போது, cricketmentor.tv என்னும் தளம் மூலம் ஆன் லைனில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறார். இந்திய அணியினரின் நெருங்கிய நண்பரான ராம்கியுடன் உலகக் கோப்பை குறித்து கதைத்ததில் இருந்து...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''வீடியோ பார்த்தார்கள்... வெளுத்துக் கட்டினார்கள்!''

''இந்திய அணிக்குள் நீங்கள் நுழைந்தது எப்படி?''

''அடிப்படையில் நான் ஒரு கிரிக்கெட் பிளேயர். 2000-ம் ஆண்டு முதல் பல்வேறு கிரிக்கெட் பிளேயர்களின் வீடியோக்களைத் தொகுக்க ஆரம்பித்து, 'ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்’ என்கிற நிறுவனத்தைத் துவங்கினேன். கிட்டத்தட்ட 6,000 உலக கிரிக்கெட் பிளேயர்களின் (முன்னாள், இந்நாள்) வீடியோக்களின் தொகுப்பு என் வசம் இருந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன், எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷன் ஆகிய இடங்களில் வீடியோ அனலிஸ்ட்டாக இருந்தேன். 2003-ம் வருடம் இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட்டை சந்தித்தேன். என் வொர்க்கிங் ஸ்டைலால் கவரப்பட்ட ஜான், இந்திய அணியின் வீடியோ அனலிஸ்ட்டாக என்னை நியமித்தார்!''  

''வீடியோ அனலைஸிங் மூலம் பிளேயர்களின் திறமையை எவ்வாறு தரமேற்றுவீர்கள்?''

''2003-ம் ஆண்டு வரை எதிர் அணி பிளேயர்களைப்பற்றிய எந்த டாக்குமென்ட்டும் இந்திய அணியினரிடம் கிடையாது. சச்சின், கும்ப்ளே, டிராவிட் போன்ற சீனியர் வீரர்கள் தங்கள் அனுபவத்தில் எதிர் அணியினரின் ப்ளஸ், மைனஸ்களைத் தெரிந்துவைத்திருப்பார்கள். மற்றபடி, பயிற்சி அளிப்பதற்கு என்று எந்த முறையான நடைமுறைகளும் அப்போது கிடையாது. சரியாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு முன்பாக நான் அணியில் இணைந்தேன். ஆஸ்திரேலிய அணியினரின் பேட்டிங் டெக்னிக், பந்து வீசும் முறை, விக்கெட்டுகளை வீழ்த்தும் வியூகம் என்று அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து, அதை இந்திய அணியினருக்குக் காட்டினேன். அப்போது, குழந்தைக்குப் புவ்வா ஊட்டுவதுபோல இந்திய அணியினரை வீடியோ பார்க்கவைப்பது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. மூன்று நிமிடங்கள்கூட வீடியோ பார்க்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் லேப்டாப் வாங்கிக் கொடுத்து, கம்ப்யூட்டரைப் பழக்கினோம். அதிலும் ஆரம்பத்தில் சினிமா பாடல்களைத்தான் கேட்டார்கள். பிறகு, வீடியோ கேம்ஸ், இன்டர்நெட், இ-மெயில் எனப் பழகினார்கள். அப்புறம்தான் வீடியோக்களையும் பார்க்க ஆரம்பித்தார்கள். வீடியோ போரடிக்காமல் இருக்க, சினிமா பாடல்களைப் பின்னணி இசையுடன் எடிட் செய்து காட்டுவேன். ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் சமன் செய்தது. அது எங்கள் அணுகுமுறைக்குக் கிடைத்த முதல் வெற்றி. தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடரை வென்றது. வீடியோ அனலிஸ்ட்டின் தேவை எல்லோருக்கும் புரிந்தது!''

''வீடியோ பார்த்தார்கள்... வெளுத்துக் கட்டினார்கள்!''

''2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2007-ம் ஆண்டு முதல் சுற்றிலேயே வெளியேறக் காரணம் என்ன?''

''2007 உலகக் கோப்பைக்கு க்ரெய்க் சேப்பல்தான் அணியின் பயிற்சியாளர். அணிக்குள் ஓர் அசாதாரணமான சூழ்நிலை நிலவிய நேரம் அது. க்ரேய்க் சேப்பல்... ஒரு ஜாம்பவான்தான். ஆனால், ஒரு பயிற்சியாளராக அவரால் அனைத்து வீரர்களுடனும் சகஜமாகப் பழக முடியவில்லை. எப்போதுமே ஒரு 'அத்தாரிட்டேரியன் அப்ரோச்’ அவரிடம் இருந்தது. இந்தியா அந்தப் போட்டித் தொடரில் சொதப்பியதற்கு அதுதான் காரணம். ஆனால், இந்த முறை ரொம்பவே ஃப்ரெண்ட்லியான பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் இருக்கிறார். அதிசயங்கள் சாத்தியப்படலாம்!''

''இந்திய அணியினருடனான உங்கள் மறக்க முடியாத அனுபவங்கள்?''

''2004 பாகிஸ்தான் டூருக்கு முன் சேவாக் சரியான ஃபார்மில் இல்லை. 'என்ன தப்பு? நான் எதை சரி செய்யணும்?’ என வந்து கேட்டார். அவர் ஃபார்மில் இருந்தபோது விளையாடியதையும் சொதப்பலாக ஆடியதையும் காட்டி வித்தியாசங்களை விளக்கினேன். தன் தவறுகளைப் புரிந்துகொண்டவர், நெட் பிராக்டீஸில் ஃபுட் வொர்க்கில் கவனம் செலுத்தினார். அடுத்து விளையாடிய முல்தான் டெஸ்ட்டில் அவர் குவித்த ரன்கள் 309. அந்த ட்ரிபிள் செஞ்சுரியை எனக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது சேவாக்கின் பெருந்தன்மை!

சச்சின் டெண்டுல்கர் டென்னிஸ் எல்போ பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த நேரம். நெட் பிராக்டீஸில் அவருக்கு பந்து வீசிக்கொண்டு இருந்தேன். 'ராம்கி, என்னிடம் என்ன தப்பு? ஏன் இப்போ நான் ரொம்ப சொதப்புறேன்? என் இயல்பான ஸ்டைல் என்ன ஆச்சு?’ எனக் கேட்டார். கிரிக்கெட் உலகமே மதிக்கும் பிதாமகனிடம், 'உங்க பேட்டிங் ஸ்டைல் ரொம்ப டிஃபென்சிவ் ஆகிருச்சு. அவுட் ஆகாமத் தப்பிப்பதில் மட்டுமே உங்க கவனம் இருக்கு’ என நான் எப்படிச் சொல்ல முடியும்? தயங்கி நின்றேன். ஆனால், விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார். அப்புறம் அவரோட 'பெஸ்ட், வொர்ஸ்ட்’ வீடியோக்களை ப்ளே பண்ணிக் காட்டினேன். 'நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை. நான் அப்பவே திருத்திட்டு இருப்பேன்ல’ என்றார். 'பேட்டிங்குக்கே நீங்க அத்தாரிட்டி. நான் எப்படி உங்க பேட்டிங் ஸ்டைல் தப்புன்னு சொல்ல முடியும்?’ என்றதும், 'இல்லை ராம்கி. நானும் ஒரு சாதாரண பிளேயர்தான். நான் என்ன தப்பு செஞ்சாலும்,  உடனே சொல்லுங்க... ப்ளீஸ்!’ என்றார். அதுதான் சச்சின்!''

''கங்குலி - டோனி... இருவர் கேப்டன்ஷிப்பிலும் என்ன வித்தியாசம்?''

''கங்குலி சிறந்த தலைவர். எல்லா பிளேயர்களுக்காகவும் அவர் போராடுவார். அதனால், அணியினர் மத்தியில் அவர் மேல் பெரிய மரியாதை உண்டு. யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் போன்ற இளம் திறமைசாலிகளை அணிக்குள் கொண்டுவந்தவர் அவர். ஒரு கேப்டனாக கங்குலி ஜெயிக்க முக்கியக் காரணம், அப்போ துணை கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட். கங்குலி என்ன சொல்கிறாரோ... அதை அப்படியே கடைசி பிளேயர் வரை தெளிவாக பாஸ் பண்ணி, ஒருங்கிணைப்பதில் அவர் கில்லி. டோனி

''வீடியோ பார்த்தார்கள்... வெளுத்துக் கட்டினார்கள்!''

மிஸ்டர் கூல். எப்பவும் அடக்கமா, அமைதியா இருப்பார். எல்லா பிளேயர்களுக்கும் டோனி இப்போ க்ளோஸ் ஃப்ரெண்ட்!''

''இந்திய அணி கோப்பை ஜெயிக்குமா?''

''இந்த டீம் இந்தியா மிகவும் ஒற்றுமையான அணி. பேட்டிங்கில் செம ஸ்ட்ராங்க். இந்த அணி ஜெயிக்கலைன்னா, வேற எந்த டீம் ஜெயிக்கும்னு எனக்குத் தெரியலை. இந்தியா நிச்சயம் கோப்பை ஜெயிக்கும்!''