Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதை ரஜினிகாந்த்துக்கு வழங்கியது என்.டி-டி.வி.  'அரசியலுக்கு வருவீர்களா?’ என்கிற அதே கேள்வி. 'இப்போது எதுவும் பதில் சொல்ல முடியாது’ என்று அதே பதில். விழாவில் ரஜினிக்கு விருது வழங்கிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும், மகத்தான வெற்றி பெறுவார்’ என்று சொல்ல, ரஜினி முகத்தில் பளிச் ரியாக்ஷன். உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  எகிப்தில் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகு, தர்மஸ்தலாவில் திபெத்தியர்களைச் சந்தித்தார் தலாய் லாமா. ''எகிப்துதான் நமக்கு முன்னோடி. நமது விடுதலைக்கும் அதுதான் வழி. சீனாவுக்கு எதிரான திபெத்தியர்களின் போராட்டம் விரைவில் ஆரம்பமாகும். அனைவரும் தயாராகுங்கள்'' என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் தலாய் லாமா. போராட்டமே வாழ்க்கை!

இன்பாக்ஸ்

•  மின்னலாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரீமா சென்னுக்குக் கல்யாணம்ப்பா. நீண்ட கால நண்பரான மும்பைத் தொழிலதிபர் ஷிவ்வை மணக்கிறார் ரீமா. மறக்க முடியாத தொப்புள்!

இன்பாக்ஸ்

• இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது டாக் ஷோவை நிறைவு செய்கிறார் ஓப்ரா வின்ஃப்ரே. 25 ஆண்டுகள் தொடர்ந்து நடந்துவந்த இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், பாப் பாடகர் ரிக்கி மார்ட்டின், கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களையும் அழைக்க இருக்கிறாராம் வின்ஃப்ரே. முடிவல்ல... ஆரம்பம்!

இன்பாக்ஸ்

•  2011-ம் ஆண்டின் கோடம்பாக்க ஹாட் கேக் அனுஷ்காதான். சிம்புவுடன் 'வானம்’, அஜீத்துடன் 'பில்லா 2’, விக்ரமுடன் 'பிதா’, ரஜினியின் 'ராணா’, கமல்ஹாசனின் 'தலைவன் இருக்கின்றான்’ என இந்த வருடம் அனுஷ்காவின் டைரி ஃபுல். தலைவி ஜொலிக்கிறாள்!

இன்பாக்ஸ்

•  இந்த வருட கலைமாமணி விருது விழாவின்போது முதல்வர் ரொம்பவே அப்செட். ஆர்யா, அனுஷ்கா, தமன்னா என விருது வாங்கிய கோடம்பாக்க நட்சத்திரங்கள் பலரும், பாதி நிகழ்ச்சியிலேயே அரங்கைவிட்டு வெளியேற... குஷ்புவிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் முதல்வர். சபை நாகரிகம் தெரிஞ்சுக்கோங்கப்பா!

இன்பாக்ஸ்

• மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் பப்ளி பப்பாளி ப்ரீத்தி ஜிந்தா. மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் 'ஒயிட்’ என்கிற படமாம். ஒரு பெண் 20 வயது முதல் 60 வரை கடந்து செல்லும் இன்ப துன்பங்கள்தான் கதையாம். 20 வயது பெண் கேரக்டருக்காக ஜிம்மே கதி எனக் கிடக்கிறார் ப்ரீத்தி. ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தாக்குத்தா!

இன்பாக்ஸ்

• உலகம் முழுக்க ரசிகர்களைக்கொண்டு இருக்கும்        முன்னாள் ஹாலிவுட் கனவுக் கன்னி எலிசபெத் டெய்லர் 1973-ம் ஆண்டு இரானுக்குச் சுற்றுப்பயணம் சென்று இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள், இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கின்றன. படங்களுடன் சேர்த்து எலிசபெத் டெய்லரின் இரான் காதலரான ஸாஹிதியினுடனான காதல் கடிதங்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. விற்பன்னர்!

இன்பாக்ஸ்

• விஜயகாந்த் எங்கெங்கு செல்கிறார், யார் யாரை சந்திக்கிறார் என நோட் செய்கிறது உளவுத் துறை. அவர்களுக்கு டிமிக்கி கொடுப்பதற்காகவே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கார்களை மாற்றி மாற்றிப் பயணம் செய்கிறார் விஜயகாந்த். காலையில் வீட்டில் இருந்து ஆடி காரில் ஏறும் விஜயகாந்த், பிறகு அம்பாசடர், சஃபாரி, எண்டேவர், பென்ஸ் என கார்களை மாற்ற ஆரம்பிக்க, தலையைப் பிய்த்துக்கொள்கிறது உளவுத் துறை. கன்னத்துல மச்சம் ஒட்டிக்கங்க கேப்டன்!

• சல்மான் கானுக்கு மீன்கள் என்றால் ரொம்ப இஷ்டம். தன் வீட்டில் 20 அடி நீளக் கண்ணாடித் தொட்டியில் கலர் மீன்கள் வளர்க்கிறார். 'மீன்கள் நீந்துவதைப் பார்த்தால், மனம் அப்படியே ரிலாக்ஸ் ஆகி விடுகிறது’ என்கிறார் பாலிவுட்டின் பேட் பாய். சல் மீன் கான்!

•  இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம்ஸ் - கேட் மிடில்ட்டன் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மைக்கேல் ஜாக்சனை வைத்து அதிக போட்டோ ஷூட் செய்த  ஹுகோ பெர்னாட், இந்த விழாவின் புகைப்படக்காரர். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மனைவி விக்டோரியா பெக்காம், மணமகளின் திருமண ஆடைகளை வடிவமைக்கிறார். கறிச் சோறு போடுவீங்களா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

•  சிறையில் இருந்து திரும்பி இருக்கும் லிண்ட்ஸே லோஹனுக்கு மீண்டும் காதல். பாடலாசிரியரும், டி.ஜேவுமான சமந்தா ரான்சன்தான் லேட்டஸ்ட் பாய் ஃப்ரெண்ட். கடந்த வாரம் டிவிட்டரில் 'என் அருகில்தான் லிண்ட்ஸே லோஹன் தூங்கிக்கொண்டு இருக்கிறார். இப்போது எழுப்பவா... அப்புறம் எழுப்பவா?’ என்று ரான்சன் டிவிட்டரில் தட்டிய மெசேஜ்தான் இந்த ரகசியக் காதலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இதை எல்லாமா ட்வீட் பண்ணுவீங்க?