Published:Updated:

எட்டெட்டு!

விகடன் டீம்

படித்த புத்தகம், ரா.கி.ரங்கராஜன், எழுத்தாளர்.

எட்டெட்டு!

'' 'Never hit a jellyfish with a spade’ என்ற புத்தகம். Guy Browning என்பவர் எழுதிய ஹாஸ்யக் கட்டுரைகளின் தொகுப்பு இது. அண்டை வீட்டுக்காரருடன் சிநேகமாக இருப்பது எப்படி, உடைந்த பொம்மையை ஒட்டவைப்பது எப்படி, எந்த ரிஸப்ஷனுக்கேனும் ஊருக்கு முன்னால் போய்விட்டால் அசடு வழியாமல் இருப்பது எப்படி - இதுபோல எந்தச் சாதாரண மனிதனுக்கும் ஏற்படக் கூடிய சாதாரணக் குழப்பங்களை வேடிக்கையாக விவரிக்கும் கட்டுரைகள். ஆனந்த விகடனின் ஆரம்ப நாட்களில் 'என்னைக் கேளுங்கோன்னா’ என்ற தலைப்பில் நாடோடி எழுதிய கட்டுரைகள் ஞாபகம் வந்து என் மனம் கனத்தது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாங்கிய பொருள், மிருதுளா, பண்பலைத் தொகுப்பாளர்

எட்டெட்டு!

னக்கு டெடி பியர்னா அவ்வளவு இஷ்டம். காதலர் தினத்தின்போது எனக்கு பிடித்த பொருள் ஒண்ணு வாங்கணும்னு ஆசைப்பட்டேன். இந்த லவ்வர்ஸ் டே அன்னைக்கு சென்னை அசோக் பில்லர்கிட்ட இருந்த பெரிய ஷாப்பிங் மால்ல ஒரு டெடி பியர் பார்த்தேன். ரொம்ப பெரிசா டெடிபியர் கையில ரெட் கலர் ஆர்ட்டின் வைச்சுக்கிட்டு இருந்தது. விலையைப் பார்க்காம உடனே வாங்கிட்டேன். இப்போ தினமும் என் பெட் பார்ட்னர் அதுதான்!

கேட்ட இசை, சாருலதா மணி, பாடகி

எட்டெட்டு!

.ஆர்.ரஹ்மான் சாரின் இசையில் வெளியான '127 ஹவர்ஸ்’ படத்தின் சவுண்ட் டிராக் கேட்டேன். படத்தின் நாயகன் மலை இடுக்கில் மாட்டிய தன் கையை எடுக்க முயன்று தோற்று, இனி அவ்வளவுதான் என தன்னம்பிக்கை இழந்த நிலையில்... பின்னணியில் ஒரு செமி கிளாசிகல் நோட் இசை மயிலிறகால் வருடுவதைப்போல் கடந்து செல்லும். 'தர்பாரி கானடா’ ராகத்தில் அமைந்த அந்த புல்லாங்குழலில் இசை அவ்வளவு நேர்த்தி. அதேபோல படத் தொடக்கத்தில் சைக்கிளை மலை உச்சிக்கு நாயகன் வெறிகொண்டு ஓட்டிச் சொல்லும்போது எலெக்ட்ரிக் கிடார் மூலம் ஒலிக்கும் அந்த ராக் இசையும் மிரட்டல்!

சென்ற இடம், அர்ச்சனா, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

எட்டெட்டு!

''வேலை விஷயமா சிங்கப்பூர் போயிருந்தேன். அங்கே சென்டோஸா தீவுதான் ஸ்டார் அட்ராக்ஷன். ரொம்ப அழகான, அருமையான இடம் அது. ஷாப்பிங், தீம் பார்க், ஜூன்னு அத்தனையும் உள்ளம் கொள்ளை கொள்ளும் இடங்கள். அதில் என்னை மிகவும் கவர்ந்தது, 'வாட்டர் டேங்க் லைட்னிங் ஷோ’. பெரிய அரங்கத்தின் நடுவே தண்ணீர் பிம்பங்கள் மாதிரி இடி இடிக்கும். ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்துட்டு இருந்தேன். ஆனா, ஒரே ஒரு கவலை... அந்த ஷோவை நடுவில் இருந்து பார்த்தால் இன்னும் பிரமிப்பா இருக்குமாம். நான் கடைசியா போனதால ஒரு ஓரத்தில்தான் அமர்ந்து பார்த்தேன். மறுபடியும் அங்கே போனா நிச்சயமா சென்டர்ல துண்டு போட்டு இடம் பிடிக்கணும்!''

பாதித்த சம்பவம், ரவிக்குமார் எம்.எல்.ஏ.

எட்டெட்டு!

மீபத்தில் 106 தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் பிடித்துக் கொண்டுபோய் சிங்கள போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம். தமிழர்களுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கி ஒரு மோதலை எற்படுத்த வேண்டும் என்ற இலங்கை அரசின் சதித் திட்டம் வெற்றி பெறுகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. 1983-ம் ஆண்டு முதல் இப்போது வரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் ஈழப் பிரச்னைக்காக கொல்லப்பட்ட மாவீரர்கள்தான்!

கலந்து கொண்ட நிகழ்ச்சி ரவி, கூடுதல் கமிஷனர், சென்னை போக்குவரத்து போலீஸ்.

எட்டெட்டு!

''ஜனவரி மாதம் லண்டனில் நடந்த பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் 97 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக்கும் பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சி அது. 97 பேரை 9 குழுக்களாகப் பிரித்து ஒரு பிரச்னையைக் கொடுத்துவிடுவார்கள். அந்தப் பிரச்னை பற்றி நாங்கள் எங்கள் குழுவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். பின்பு அந்த 97 பேரையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து இந்தியக் காவல் துறையின் பிரச்னைகளைப் பற்றிச் சொல்லச் சொல்வார்கள். அதை வைத்துக்கொண்டே நம் நாட்டின் காவல்துறை பற்றி அனைத்துத் தகவல்களையும்  கிரகித்துக்கொள்வார்கள். பலே புத்திசாலிகள்!''

சந்தித்த நபர், ஸ்ரீகாந்த், நடிகர்

எட்டெட்டு!

'த்ரி இடியட்ஸ்’ தமிழ் ரீ-மேக்கில் ஷங்கர் சார் டைரக்ஷனில் நடித்து வருகிறேன். அவரை படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பது புதிய அனுபவமாக இருந்தது. அவ்வளவு இயல்பாகக் காட்சிகளை ஒரு தேர்ந்த நடிகரைப் போல நடித்துக் காட்டுகிறார். நகைச்சுவைக் காட்சிகளை திரையில் பார்த்து ரசிப்பதுபோல், படப்பிடிப்பு தளத்திலேயே 'சூப்பர்... சூப்பர்’ என்ற ரசித்துச் சிரிக்கிறார். இவ்வளவு வெற்றிகளைப் பார்த்தவர் இன்னும் அதே இயல்போடு இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!

பார்த்த படம், பிரசாந்த், நடிகர்

எட்டெட்டு!

'The King's Speech’ என்ற ஆங்கிலப் படம். திக்குவாய் பிரச்னையால் அவதிப்படும் இங்கிலாந்தின் இளவரசர், அந்த பிரச்னையில் இருந்து மீண்டால்தான் நாட்டின் ராஜா ஆக முடியும். இந்த நிலையில் அவர் ஒரு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுகிறார். இளவரசரின் பிரச்னை தீர்ந்ததா, அவர் அந்நாட்டு அரசன் ஆனாரா என்பதுதான் கதை. இளவரசர், இளவரசி, மருத்துவர் என மூன்றே மூன்று கேரக்டர்களைக்கொண்டு அவ்வளவு நேர்த்தியாக படத்தை செதுக்கி இருக்கிறார்கள். பாஃப்தா விருது வென்ற இந்தப் படம் தற்போது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது!