Published:Updated:

ஹேய்... குட்பை நண்பா!

இர.ப்ரீத்தி, படம் : ச.இரா.ஸ்ரீதர்

ஃபீலிங்ஸ், டீலிங்ஸ் என்று கல்லூரி கேம்பஸ் முழுக்க 'ஃபேர்வெல் ஜுரம்’ பிடித்திருக்கும் நேரம் இது! 'ஹேய்... குட் பை நண்பா!’ என்று ராகம் மாற்றி, அந்த ராகத்துக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த அனுபவம் கேட்டேன் சில 'சின்னப் புள்ளி’களிடம்   (அட... சின்னத் திரைப் பிரபலங்கள்ங்க!)  

ஹேய்... குட்பை நண்பா!

'நம்ம வீட்டுக் கல்யாணம்’ ஷில்பா: ''நான் ரொம்பவே மிஸ் பண்றது என் ஸ்கூல் வாழ்க்கைதான். சான்ஸே இல்ல. அவ்வளவு கலர்ஃபுல் நாட்கள். ப்ளஸ் டூ-வின் கடைசி நாள். ஒரு டேபிள்ல பேர் எழுதி தனித் தனி க்ரீட்டிங் கார்டு வெச்சிருந்தாங்க. ஒவ்வொருத்தரா போய் கார்டு எடுத்துக்கணும். காதல், கடவுள், எதிர்காலம்னு நமக்கே நமக்குன்னு ஏதாவது மெசேஜ் எழுதி இருக்கும். எனக்கு என்ன வந்திருக்குமோன்னு ரொம்ப ஆவலா திறந்து பார்த்தா, 'அன்பு நிறைந்தவளே...’ன்னு ஆரம்பிச்சது ஆசீர்வாதம். அந்த வரிகள் என்னை அப்படியே உருக்கிருச்சு. இப்பவும் அந்த கார்டு என்கிட்ட பத்திரமா இருக்கு!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹேய்... குட்பை நண்பா!

'ஆதித்யா’ ஆதவன்: ''ஸ்கூல் ஃபேர்வெல் சமயம், 'நாம எல்லாரும் ஒரே காலேஜ்லதான்டா சேரணும்’னு சொல்லிச் சொல்லியே அட்டாக் பண்ணுவாங்க. அதனால், அப்போ 'பிரிவு’ங்ற ஃபீலிங்க்ஸே இருக்காது. ஆனா, எஸ்.ஆர்.எம்-ல இன்ஜினீயரிங் படிச்சப்ப, 'பிரியப் போறோமேடா மச்சான்’னு சொல்லிச் சொல்லியே கடைசி வருஷம் முழுக்க ஆட்டம் போட்டோம். அதனால், ஃபேர்வெல் அன்னிக்கு எல்லோரும் ஃபீலிங்ஸ் பேச, நாங்க மட்டும் எங்க லெக்சரர்ஸை டான்ஸ் ஆடச் சொல்லிக் கலாய்ச்சிட்டோம். இப்போ காலேஜ் போனாலும்கூட எங்க குரங்கு சேட்டையைச் சொல்லிச் சொல்லி சிரிப்பாங்க புரொஃபசர்ஸ்!''

ஹேய்... குட்பை நண்பா!

'அன்பு வாழ்த்துக்கள்’ திவ்யா: ''படிக்கிறப்பவே நான் 'வணக்கம் வணக்கம்’னு டி.வி பக்கம் தலை காட்ட ஆரம்பிச்சதுனால, காலேஜ் ஃபேர்வெல் நடந்துட்டு இருக்கும்போதே, 'புரொகிராம் இருக்கு’ன்னு எஸ்கேப் ஆனவள் நான். இன்ஜினீயரிங் கடைசி வருஷத்துல, எங்க செட் எல்லாரும் கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரே கம்பெனியில் செலெக்ட் ஆனதால், பிரிவுத் துயரை ஜஸ்ட் லைக் தட் கடந்து வந்துட்டோம். ஆனா, ஃபேர்வெல் பார்ட்டியில் நான் தப்பிச்சு வந்ததைக் காரணமா சொல்லிச் சொல்லியே இப்போ வரை 'ட்ரீட்’ங்ற பேர்ல என்னைக் கொள்ளையடிச்சுட்டு இருக்காங்க சில பைரேட்ஸ் ஆஃப் தி அடையார்!''

ஹேய்... குட்பை நண்பா!

'வாழ்த்தலாம் வாங்க’ ஸ்ரீதேவி: ''நான் எஸ்.ஐ.இ.டி. காலேஜ்ல படிச்சுட்டு இருக்கிறப்பவே சன் மியூஸிக்ல சேர்ந்துட்டேன். காலேஜ் கடைசி நாள் ஜூனியர்ஸ்லாம் ஒண்ணா சேர்ந்து, எங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி வெச்சாங்க. ஃபீலிங்ஸ் உரைகள் முடிஞ்சதும் ஃபேஷன் பரேட். 'டி.வி பார்ட்டியாச்சே... நமக்குத் தனி மரியாதை இருக்கும்’னு தைரியமா மேடை ஏறி பூனை, யானை நடைலாம் போட்டேன். 'மிஸ் நடை, உடை, சிரிப்பு... அது இதுன்னு யார் யாருக்கோ என்னென்னவோ பட்டம் கொடுத்தாங்க. ஆனா, கடைசி வரை என் பேரை மரியாதை நிமித்தம்கூடச் சொல்லவே இல்லை. 'அசிங்கப்பட்டுவிட்டாள் ஸ்ரீதேவி’ன்னு கண்ல தண்ணி கட்டி டுச்சு. திடீர்னு, 'லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்’னு பில்ட்-அப்லாம் கொடுத்து, 'மிஸ் எஸ்.ஐ.இ.டி. பட்டம் ஜெயிச்சது நம்ம ஸ்ரீதேவி’ன்னு சொன்னாங்க பாருங்க... நான் சிரிச்சுட்டே அழுதது அப்பதான். அப்புறம் ஜூனியர்ஸுக்கு நான் பார்ட்டி கொடுத்தது தனிக் கதை!''

ஹேய்... குட்பை நண்பா!

'ஈரோடு’ மகேஷ்: ''காலேஜ்ல கிட்டத்தட்ட ஒரு டியூப்லைட் கணக்காத்தான் நான் திரிஞ்சுட்டு இருந்தேன். கூடப் படிச்ச பசங்க, பொண்ணுங்கள்லயே நிறையப் பேரை எனக்குத் தெரியாது. ஃபேர்வெல் பார்ட்டி சமயம் ஒரு பொண்ணு என்கிட்ட வந்து, 'நாம பிரியப்போறோம் மகேஷ். உங்க ஞாபகமா ஏதாவது எனக்குக் கொடு’ன்னு கேட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியாம, 'நைஸ் டு மீட் யூ! நீங்க எந்த கிளாஸ்? நான் உங்களை இதுவரை பார்த்ததே இல்லை’ன்னு சொன்னேன். செம கடுப்பாகி, 'நீ உருப்படவே மாட்ட டா’ன்னு திட்டிட்டுப் போயிட்டா. பொண்ணு கரெக்டாதான் சொல்லி இருக்கா!''

ஹேய்... குட்பை நண்பா!
ஹேய்... குட்பை நண்பா!

'ஸ்டார்ஸ் உங்களுடன்’ வினோ: ''ஃபேர்வெல் பார்ட்டி அப்போ முகத்தில் கவலையைக் கொண்டுவரவே நாங்க ரொம்ப மெனக்கெட்டோம். குரூப் போட்டோ எடுத்தப்போ கூட... ம்ஹூம்... சோகமே வரலையே! சிரிச்சுட்டே இருந்தோம். 'முஸ்தஃபா முஸ்தஃபா... மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட் ஷிப்பா’ன்னு கடைசி வரை சிரிப்ஸ் சிப்ஸ்தான். ஆனா, இப்போ எப்போ அந்த நாளை நினைச்சாலும் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்க்கும். இப்பவும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கூட அடிக்கடி 'கெட் டு கெதர்’ நடத்துற சூழல்தான். ரொம்ப ஹாப்பி!''