Published:Updated:

பூங்காற்று திரும்புமா!

ஷாஜி

 ##~##
''வா
சு பேசறேன்ப்பா... எங்கே இருக்கே? ஃப்ரீயா இருக்கும்போது இந்தப் பக்கம் வாப்பா!'' இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் வாசு அண்ணா எனக்கு போன் பண்ணினார். ''அவசியம் வந்து சந்திக்கிறேண்ணே!'' என்றேன். நான் திரும்பி வந்த நாளில் வாசு அண்ணா யாருக்குமே தெரியாத அந்த ஊருக்கு நிரந்தரமாகப் போய்விட்டார். அவரை நான் இனி எங்கு சென்று சந்திப்பது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில மாதங்கள் முன் விகடன் வெளியிட்ட மலேசியா வாசுதேவனின் நேர்காணலில் பல வருடங்களாக யாருமே பொருட்படுத்தாத நிலையில், உடல் நலக்குறைவுடனும் மன வருத்தங்களுடனும் தான் வாழ்ந்து வருவ தைப்பற்றி அவர் தெரிவித்திருந்தார். தனக்கு முதன்முதலாக ஒரு ஆல்பத்துக்கு இசைஅமைக்க வாய்ப்பு வாங்கித் தந்தவர் மலேசியா வாசுதேவன்தான் என்றும், தான் அவருக்கு உதவ முன்வருவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். பின்னர், பல தமிழ், ஆங்கில இதழ்கள் அவரைப் பேட்டி கண்டு அவரைப்பற்றியான குறிப்புகள் வெளியிட்டன. புறக்கணிப்பின் பல ஆண்டுகளுக்குப் பின் நடந்த இவ் விஷயங்கள், அவரை மிகவும் சந்தோஷப் படுத்தின என்றே நினைக்கிறேன்.  

பூங்காற்று திரும்புமா!

மூளையில் ஏற்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். சொல்லும்படியாக சினிமா துறையினரிடம் இருந்து ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவில்லை. நலம் விசாரிக்கக்கூட எவரும் முன் வரவில்லை. மலேசியா வாசு தேவன் என்ற உச்ச நட்சத்திரப் பாடகர்மறக்கப் பட்ட ஒருவராக ஆகிவிட்டார்.

இன்று அவர் இறந்த செய்தி கேட்டவுடன் போட்டி போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய இசை மேதைகள், பலப்பல பாடல்களில் அவரது குரலுக்கு வாயசைத்த திரை நட்சத்திரங்கள் போன்ற அனைவருமே கடந்த 20 ஆண்டுகளாக அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தவர்கள்தான். எப்போதாவது நிகழும் ஒரு தொலைபேசி அழைப்பையோ, ஒரு சந்திப்பையோ தவிர, இவர்களிடம் இருந்து எதையுமே அவர் எதிர்பார்த்தது இல்லை.

திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாசாரத்தில் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர் மலேசியா வாசுதேவன். ஆனால், உயிருடன் இருக்கும்போது நாம் அவரைக் கொண்டாடவே இல்லை!