Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##
இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பைக் பிரியரான டோனி  விதவிதமான பைக்குகள் வாங்கிக் குவிப்பார் என்பது நாடறிந்த விஷயம். இப்போது டோனியின் கவனம் விமானத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையிலும் இரண்டு பேர் அமந்து ஓட்டக்கூடிய N531DH என்ற குட்டி விமானத்தை வாங்கியிருக்கிறார் டோனி. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தனியார் விமான கம்பெனியின் தயாரிப்பான இந்தக் குட்டி விமானத் தின் விலை 20 கோடி ரூபாய். இந்தியா கொண்டுவரும்போது அது இன்னும் 40 கோடி ரூபாய் செலவு வைத்துவிடும். ''எவ்வளவு நாள்தான் பைக்கில் பறப்பது? கொஞ்ச நாள் பைலட் வைத்துக்கொண்டு பறப்பேன். ஒரு நாள் நானே தனியாகப் பறப்பேன்!'' என்று சந்தோஷம் பகிர்ந்திருக்கிறார் டோனி. றெக்கை கட்டிப் பறக்குறார் கேப்டன்!

இன்பாக்ஸ்

 வரி கட்டாமல் கார் இறக்குமதி செய்ததாகக் கடந்த வாரம் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தியது சி.பி.ஐ. இந்த வகையில் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் 33 கார்களை வரி கட்டாமல் இறக்குமதி செய்திருப்பதாகச் சொன்ன சி.பி.ஐ., அந்த முழுப் பட்டியலை வெளியிடவில்லை. அந்தப் பட்டியலில் நடிகர் பவர் ஸ்டாரும் அடக்கம் என்பது யாரும் அறியாத செய்தி. இதுபற்றி பவர் மூச்சுவிடவில்லை. ஆனால், சிம்பு தனது ட்விட்டரில், 'கண்ணா டாக்ஸ் கட்ட ஆசையா?’ என எழுதியிருந்தார். அப்போது யாருக்கும் விஷயம் புரியவில்லை. இப்போதுதான் புரிகிறது. அண்ணா... ரெய்டில் சிக்க ஆசையா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ஒபாமாவின் ஆடை வடிவமைப்பாளர், ஒரு தமிழ்ப் பெண். காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சுனிதா ஸ்ரீனிவாஸ், பாரிஸ் ஃபேஷன் உலகின் சமீபத்திய சென்சேஷன். 28 வயது சுனிதாவைத் தன் அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராக நியமித்துள்ளார் ஒபாமா. ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு ஆடை வடிவமைக்கப்போய், கிடைத்த வாய்ப்பு இது. ஒபாமா மாமாவுக்கு வேட்டி-சட்டை கட்டிவிடுங்க சுனிதா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 சிலருக்குக் குறிப்பிட்ட பொருட்களைச் சேகரிப்பது பொழுதுபோக்காக இருக்கும். ஐஸ்வர்யா ராய்க்கும் அப்படி ஒரு பழக்கம்... தன் படம் வெளியாகி ஓடும் மும்பை தியேட்டர்களின் டிக்கெட்டுகளைச் சேகரிப்பது. 'இருவர்’ முதல் 'ரோபோ’ வரை சேகரித்த டிக்கெட்டுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார். ''அந்த டிக்கெட் சேல்ஸுக்காகத்தானே இவ்வளவும் பண்றோம்!'' என்கிறார் அழகாக. ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்ல!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ''மாட்டேன்... மாட்டவே மாட்டேன்!'' என்று விடாப்பிடியாக மறுத்துவந்த நயன், இறுதியில் ஓ.கே. சொல்லிவிட்டார். எதற்கு? 'டர்ட்டி பிக்சரின்’ தமிழ்ப் பதிப்பில் நடிக்கும் வாய்ப்புக்கு. 'எவ்வளவு பணம் கொடுத்தாலும் நோ!’ என்று சொன்ன நயன்தாரா மனதை மாற்றியது அஜித்தின் அட்வைஸாம்! 'அந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டர் செம பவர்ஃபுல். அந்தப் படம்தான் தமிழ்ல உன் ரீ-என்ட்ரி படமா இருக்கணும். அதுக்கப்புறம் நீ எந்தப் படத்துலயும் நடி. முதல் படமா அதில் நடி’ என்று அஜித் சொல்ல, 'சரியான பாயின்ட்தான்!’ என்று தீர்மானித்திருக்கிறார் நயன்தாரா. சம்பளம் எத்தனை கோடி லேடி?  

இன்பாக்ஸ்

 வழக்குகள், வம்பு தும்புகள் எனச் சமீபமாக அதிகமான மன உளைச்சலில் இருக்கும் அழகிரியை உற்சாகப்படுத்தி இருக்கிறது அந்தச் சந்திப்பு. டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் விமானத்தில் அழகிரி பயணித்த விமானத்திலேயே வந்திருக்கிறார் ரஜினி. அருகருகே இருக்கை கேட்டு வாங்கி அமர்ந்துகொண்டு, வாரிசுகளின் எதிர்காலம், மன அமைதிக்கான ஆன்மீகத் தலங்கள், குருப் பெயர்ச்சி, யோகா என பலப்பல விஷயங்களைப் பேசினார்களாம். ரஜினி எதுவும் பஞ்ச் அடிச்சாரா அஞ்சா நெஞ்சர்?

இன்பாக்ஸ்

 தன் 'ஆம் ஆத்மி’ கட்சியைத் தேர்தல் ஆணையம் பதிவுசெய்துகொண்ட உற்சாகத்தோடு, அடுத்த ரவுண்ட் அதிரடிக்குத் தயாராகிவிட்டார் அர்விந்த் கெஜ்ரிவால். இந்த முறை அவரது ஹிட் லிஸ்ட்டில் இருப்பது நாம் யாருமே எதிர்பார்க்காத ஒரு பிரபலம். அவர் இந்தி நடிகர் அமீர் கான். அமீருக்கு இருக்கும் பாசிட்டிவ் இமேஜைக் காலி செய்யும் அளவுக்குப் பலமான முறைகேட்டுப் புகார் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் கெஜ்ரிவால். அமீர் கான் சுமார் 185 கோடிகள் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களோடு அந்த முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவிருக்கிறாராம். அடியாத்தீ!

இன்பாக்ஸ்

 தன் மகன் பிரபாகரனை ஹீரோவாக்க இயக்குநர் ஹரியிடம் கதை கேட்டிருக்கிறார் விஜயகாந்த். தற்போதைய தமிழக மாணவர் போராட்டத்தை அடிப்படையாகவைத்து ஹரி சொன்ன கதை கேப்டனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. '' 'ஸ்டூடன்ட் கேப்டன்’னு டைட்டில் வைக்கலாம்!'' என்று பிரேமலதாவும் உற்சாகமாகிவிட்டாராம். 'சிங்கம்-2’ முடித்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பம். படத்தில் பிரபாகரனின் ஜோடி... துளசி. சிங்கம் களமிறங்கிருச்சுடோய்!

இன்பாக்ஸ்

 கடைசியில் மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்தேவிட்டது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலைக்குப் பிறகு அமெரிக்கா, மோடிக்கு விசா மறுத்துவிட்டது. அதன் பிறகு எத்தனையோ முறை முயன்றும் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தியாவில் லாபி செய்ய நினைக்கும் அமெரிக்கா, ஒருவேளை பா.ஜ.க. வெற்றிபெற்றால் மோடி பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்பதால், இப்போதே தடையை விலக்கி சமாதானத் தூது ஆரம்பித்திருக்கிறது. அலேக் அமெரிக்க அரசியல்!

இன்பாக்ஸ்

 தான் ஆட்சியில் இருக்கும்போது எல்லாம் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் நடத்தும் ஜெயலலிதா, இந்த ஆண்டு முதல் தனது கட்சியின் எம்.எல்.ஏ-க்களுக்கு சிறப்புப் புத்துணர்வு முகாம் நடத்தப்போகிறார். வரும் ஏப்ரல் மாதம் முதல் மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் பெங்களூரில் பயிற்சி ப்ளஸ் புத்துணர்வு முகாம் நடக்குமாம். ஸ்மார்ட்போன் இயக்குவது முதல் ஃபேஸ்புக்கில் இயங்குவது வரை தொழில்நுட்பப் பயிற்சிகளும், மீடியா மக்களைச் சமாளிக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுமாம். அம்மான்னா சும்மா இல்லடா!  

இன்பாக்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism