வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (08/08/2014)

கடைசி தொடர்பு:15:29 (09/08/2014)

INTO THE STORM - மரணப்புயல் (விமர்சனம்)

அரை மைல் அளவிற்கு சூறாவளி வந்தாலே கண்ணில் பட்ட அனைத்தையும் சுருட்டிக் கொண்டு சென்று விடும். 16 மைல்கள் அளவில் ஒரு பெரும் சூறாவளி வந்தால் என்ன நேரும்? இதுதான் ஹாலிவுட் படமான INTO THE STORM .மரணப்புயலாக தமிழில் வெளியாகியுள்ளது...

மகன்களிடம் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களிடம் பேசாத பள்ளி மேலாளராக ரிச்சர்ட் ஆர்மிடேஜ் . பெரும் சூறாவளியை படமெடுக்க துடிக்கும் வானிலை ஆய்வாளர்கள், யூடியூபில் வீடியோ ஏற்றி விட்டு வைரலாக்க துடிக்கும் காமெடி இளைஞர்கள், மற்றும் ஒரு பள்ளி என இவர்கள் அனைவரும் அவ்வப்போது சிறு சிறு சூறாவளிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.சிறு சிறு சூறாவளிகளை கடந்து ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் ஒரு சேர 16 மைல்கள் அளவிற்கு சுற்றி வரும் சூறாவளியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முடிவு என்ன என்பதே இந்த மரணப்புயல் படத்தின் மீதி கதை.


பொறுப்பான அப்பாவாக மகனை காப்பாற்ற பாடுபடும் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், அதே சமயம் உயிரையும் பொருட்படுத்தாது பள்ளி மாணவர்களையும் காப்பாற்றி அப்லாஸ் பெறுகிறார்.

5 வயது குழந்தையை பிரிந்தாலும் கடமையில் தான் முதல் கண் என சாரா வெய்னே கல்லீஸ் உருக வைக்கிறார். தைரியமாக சூறாவளியையே எதிர்த்து நிற்கும் சாரா தன் சக தோழர் இறந்ததை நினைத்து வருந்தும் காட்சியில் நெகிழ்ச்சி..

வைரல் வீடியோவை யூடியூபில் ஏற்றி ஒரு கை பார்க்க நினைக்கும் காமெடி பாய்ஸ் பட முடிவிலும் மரத்தில் கேமராவுடன் தொங்கிக் கொண்டு சிரித்து நம்மையும் சிரிப்பில் மூழ்கடிக்கின்றனர். ஆனால் தனது வாழ்நாளில் மிகப்பெரும் சூறாவளியை படமாக்குவதே தனது குறிக்கோளாக கொண்டு உயிரையும் பொருட்படுத்தாது அந்த சூறாவளிக்கே தன்னை அற்பணிக்கும் மேட் வால்ஸ் அனைவரையும் மறக்க வைத்து விடுகிறார்.

இத்தணை அம்சமான கதாபாத்திரங்கள் இருப்பினும் இவர்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் படத்தின் இந்த கதாபாத்திரங்களை தவிர ஊரில் வேறு ஆட்களே இல்லையா என்ற கேள்வியே எழுகிறது.

தப்பிக்க எண்ணும் ஒரு சில கதாபாத்திரங்கள், ஆளே இல்லாத ஊர் , வெறும் 100 மாணவர்கள் இருக்கும் பள்ளி இப்படி இயக்குனர் ஸ்டீவன் க்வேல் சற்று தடுமாறியிருக்கிறார்.
 
சிஜி அனிமேஷன் காட்சிகள் மனதுக்கு திருப்தி.


பெரிய சூறாவளி வரும் கிளைமேக்ஸ் காட்சிகளில் கேமராமேன் ப்ரையன் பியர்ஸன் காட்சியமைப்பு அருமை.

ப்ரையனின் பின்னனி சூறாவளிக்கு ஏற்ற அதிரடியில் தட தடக்கிறது.

உயிரின் அருமை நூலிழையில் உயிர் தப்பியவர்களுக்கே தெரியும் என்ற ஆழகான தகவலை ஒரு பெரும் இயற்கை சீற்றத்துடன் கூறி உணர்வுகளுக்கும் இடமாக வெளியாகி உள்ளது இந்த மரணபுயல்.

ஷாலினி நியூட்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்