Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
##~##
இன்பாக்ஸ்

கடந்த வாரம் நெட் ஹிட்... நிக் டி அலாய்சியோ! 17 வயதில் 200 கோடிக்கு நிக் அதிபதி ஆனதுதான் சென்சேஷன். தற்போது கணினி மூலமான இணையதளப் பயன்பாடு குறைந்து, அலைபேசிகள் மற்றும் ஐபேட் மூலம் இணையம் உலவுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துவருகிறது. கணினிக்கென அமைக்கப்பட்ட அப்ளிகேஷன், செய்தி மடல்களை மொபைல் திரைக் கேற்பச் சுருக்குவது கடினமான வேலையாக இருந்து வந்திருக்கிறது. அந்தப் பணியை மிக எளிமையாக்குகிறது நிக் கண்டுபிடித்த சம்லி (summly ) மென்பொருள். சரித்திரப் பாடம் படித்துக்கொண்டிருக்கும்போது நிக் விளையாட்டாகக் கண்டுபிடித்த அந்த மென்பொருளை சுமார் 200 கோடி கொடுத்து யாஹூ நிறுவனம் விலைக்கு வாங்கியது மட்டுமல்லாமல், அவருக்குத் தனது நிறுவனத்தில் வேலையும் கொடுத்திருக்கிறது. கல்லூரிக்குள் நுழைவதற்கு முன்னரே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் திக்பிரமை பிடித்துக் கிடக்கிறார் நிக். ஜூனியர் கேட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

இந்த வார 'கிரிக்கெட் மாப்பிள்ளைகள்’ சென்னைப் பையன் பாலாஜியும் யூசுப் பதானும். பிசியோதெரபிஸ்ட் அப்ரீன் கானை யூசுப் மணமுடிக்க, சென்னையைச் சேர்ந்த மாடல் ப்ரியாவைக் காதல் திருமணம் செய்திருக்கிறார் பாலாஜி. யூசுப் பதானின் திருமணத்தின் ஸ்பெஷல் அவர் தம்பி இர்ஃபான் பதான்தான். திருமண நிகழ்ச்சி முழுமைக்கும் அண்ணன் அருகிலேயே சம்மணம் போட்டு அமர்ந்து, பாச மழை பொழிந்துவிட்டார். பாசமலர் பிரதர்ஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தனுஷ் இந்தியில் நடிக்கும் 'ரான்ஜ்னா’ படத்தின் போஸ்டர் முதல்முறையாக ஹோலி பண்டிகை அன்று வெளியானது. 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறது!’ என்று தனுஷ் ட்வீட்ட, 'அது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இல்லை. சும்மா ரசிகர்களுக்கு ரான்ஜ்னா டீமின் ஹோலி வாழ்த்துகள்!’ என்று பதிலுக்கு ட்வீட் அடித்திருக்கிறார் படத்தில் தனுஷின் ஜோடி யான சோனம் கபூர். கெமிஸ்ட்ரியைக் கவனிங்க தனுஷ்!     

இன்பாக்ஸ்

ஒன்ஸ் அகெய்ன் பகிரங்கமாக மனம் 'திறந்து’ள்ளார் குஷ்வந்த் சிங். தனது 98-வது பிறந்த நாளில் தான் எழுதிய, 'குஷ்வந்த் நாமா: தி லெசன்ஸ் ஆஃப் லைஃப்’ புத்தகத்தை வெளியிட்டார் குஷ்வந்த். அந்த நிகழ்ச்சியில், ''வாழ்க்கையில் எனக்கு செக்ஸ் மட்டுமே பெரும் இன்பத்தைக் கொடுத்தது. வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை ரசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஒரு பெண் பித்தன். தினமும் விஸ்கி அருந்து வது எனக்குப் பிடிக்கும்!'' என்றெல்லாம் தடாலடியாகப் பேசியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை அவர் அர்ப்பணித்திருப்பது யாருக்குத் தெரியுமா? தனது நெருங்கிய தோழியும் மன்மோகன் சிங்கின் மனைவியுமான குர் சரண் கௌருக்கு. செம சேட்டை தாத்தா!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அன்று சேலை கட்டி வாசம் வீசினார் அந்த அமலா. இன்று சேலை கட்டி சர்வேயில் ஜெயிக்கிறார் இந்த அமலா. 'எந்த நடிகை சேலையில் மிக அழகாக இருப்பார்’ என்ற கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடித்திருக்கிறார் அமலா பால். இப்படி சேலை கட்டினா அழகாத்தானே இருப்பாங்க!

இன்பாக்ஸ்

வழக்கமாக படப்பிடிப்புத் தளங்களுக்கு மிகவும் தாமதமாக வரும் பழக்கம்கொண்டவர் சஞ்சய் தத். ஆனால், சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு, தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக, இப்போது முதல் ஆளாகப் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிடுகிறாராம் சஞ்சய். அரெஸ்ட் அவசரம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கொண்டே யோசித்திருப்பார்கள்போல! மருத்துவர்களை மனிதக் கடவுளாக நாம் போற்றிக்கொண்டிருக்க, 'நோயாளிகள் விருப்பப்பட்டால் மருத்துவர்கள் அவர்களுடன் ரொமான்ஸில் ஈடுபடலாம்’ என்று அதிர்ச்சி அனுமதி அளித்திருக்கிறது பிரிட்டன் மருத்துவ கவுன்சில். மருத்துவர்கள் நோயாளிகளோடு ரொமான்ஸில் ஈடுபடலாம். விருப்பம் இருந்தால் காதலிக்கலாம் என்று அறிவித்திருக்கும் மருத்துவ கவுன்சில், அதற்கெனச் சில விதிமுறைகளையும் விதித்திருக்கிறது. அதன்படி டாக்டர்கள் தான் சிகிச்சை அளித்த முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதல்வயப் படலாமாம்.  காதல் புரியும் நோக்குடன் நோயாளியின் வீட்டுக்கு அடிக்கடி செல்லக் கூடாதாம். ஆதரவும் எதிர்ப்புமாக சலசலத்துக் கிடக்கிறது மருத்துவவட்டாரம். இதெல்லாம் நல்லதுக்கில்லை!  

இன்பாக்ஸ்

வாடிகன் வரலாற்றில் முதன்முறையாக போப் ஃபிரான்சிஸ் சிறைக் கைதிகளின் கால்களைக் கழுவியிருக்கிறார். புனித வியாழன் அன்று ரோமில் இருக்கும் சிறைக்குச் சென்றவர், சிறைக் கைதிகள் 58 பேரைத் தேர்வுசெய்து அவர்களின் கால்களைக் கழுவி னார். இதன் மூலம் அவர்களின் பாவத்தைப் போக்கியதாகக் கூறியிருக்கிறார் போப் ஃபிரான் சிஸ். ''இது இயேசு எனக்கு கற்றுக் கொடுத்தது. என் இதயத்தில் இருந்து இந்தச் செயலை நான் செய்துள்ளேன். இந்தப் புண்ணிய அடை யாளத்தின் மூலம் நான் உங்கள் தொண்டில் இருக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார். ஆமென்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இனி, தமிழகம் முழுக்க அனைத்து அரசு அலுவலகங்களின் கணிப்பொறிகளிலும் ஒரே எழுத்துருவை மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன் தலைமையிலான குழுவினர் பாரதி, கம்பர், காவிரி, வள்ளுவர், கபிலர் ஆகிய பெயர்களில் புதிய எழுத்துருக்களை உருவாக்கி இருக்கின்றனர். இவற்றின் மூலம் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைத் தட்டச்சினால் அப்படியே தமிழில் மாறும். தடதடக்கட்டும்!  

இன்பாக்ஸ்

பிரபல தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் தென்னிந்தியாவில் தங்கள் நிறுவ னத்துக்கு எந்த நடிகையை பிராண்ட் அம்பா ஸடராக நியமிக்கலாம் என்று மேற்கொண்ட ஸ்டடியில், அதிகபட்ச வாக்குகள் வாங்கியிருப் பவர் காஜல் அகர்வால். 'காஜல் ஆடும்போது அவர் கூந்தல் ஆடும் அழகை ரசிப்பதற்கே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்!’ என்பது அந்த மார்க்கெட்டிங் சர்வேயின் முடிவாம். காஜல் கூந்தல்வால்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism