Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
##~##
இன்பாக்ஸ்

திருமணப் பூரிப்பையும் தாண்டிய உற்சாகத்தில் திளைக்கிறார் வித்யா பாலன். காரணம்... அமிதாப், நஸீரு தின் ஷா ஆகிய இருவருடனும் சேர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதுதான். வித்யா ஏற்கெனவே அமிதாப்புக்கு அம்மாவாக 'பா’ படத்திலும், நஸீருதின் ஷாவுடன் 'டர்ட்டி பிக்சர்’ படத்திலும் நடித்தவர்தான். ஆனால், இப்போது மூவரும் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதால் டபிள் ஸ்ட்ராங் உற்சாகத்தில் திளைக்கிறார் வித்யா. வீட்ல எதுவும் விசேஷம்?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

 ஒரு நிறுவனம் தங்கள் விளம்பரப் பிரிவு அதிகாரியை வேறு நிறுவன வேலைக்குச் செல்லாமல் தடுக்க, 100 மில்லியன் டாலர் போனஸ் அளித்ததுதான் அமெரிக்கா வின் ஹாட் நியூஸ். அந்த நிறுவனம் கூகுள். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த நீல் மோகன் ட்விட்டர் நிறுவனத் துக்குப் பணி மாற முடிவெடுத் திருக்கிறார். இதை அறிந்த கூகுள், அவருக்கு 100மில்லி யன் டாலரை போனஸாக அளித்துத் தக்கவைத்துக் கொண்டது. நீல் மோகன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். இனிமேதான் உஷாரா இருக்கணும் நீல்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தன்னைப் பற்றிய கிசுகிசுக்களைத் தேடிப் பிடித்துப் படிப்பது ஹன்சிகா வழக்கம். ''சின்ன வயசுல இருந்தே எனக்குக் கிசுகிசு படிக்கப் பிடிக்கும். அதே ஆர்வம்தான் என்னைப் பத்தின கிசுகிசுக்களையும் படிக்கத் தூண்டுது!'' என்கிறார் ஹன்சிகா. பாப்பா பத்தி நாலு கிசுகிசு பார்சேல்ல்ல்..!

இன்பாக்ஸ்

''மட்டன், சிக்கன் என்று கண்ணில் படும் அசைவ உணவு வகைகளை எல்லாம் வெளுத்துக் கட்டியவன் நான். ஆனால், இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன். எப்போது நான் சைவமாக மாறினேனோ அப்போதே என் வாழ்க்கையிலும், உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தேன்!'' என்று ஸ்டேட்மென்ட் அடித்திருக்கிறார் இந்தியா வின் 'மோஸ்ட் வான்டட்’ ஆணழகன் வித்யூத் ஜம்வால். யார் இந்த வித்யூத்? 'துப்பாக்கி’ படத்தில் விஜயை மிரட்டியது இந்த சைவ பட்சி வில்லன்தான். நோட் பண்ணுங்க ஜிம் பாய்ஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

Polyglotism என்றால் என்ன? ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வல்லமைகொண்ட மனிதனை இப்படி அழைப்பார்கள். சரி... ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை மொழிகள் பேச முடியும்? ஆறு அல்லது ஏழு? ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது இளைஞர் இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 23 உலக மொழிகள்

இன்பாக்ஸ்

பேசி அசத்துகிறார். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட இவர், முதலில் ஹீப்ரு மொழியைக் கற்றிருக்கிறார். அந்த மொழி பேசுபவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, அதில் சரளமாகப் பேசத் துவங்கிஇருக்கிறார். பிறகு, அதீத ஆர்வத்தில் ஒவ்வொரு மொழி யாக 23 மொழிகளைப் பேச, வாசிக்கக் கற்றுக்கொண்டு விட்டார். ஒரு மொழியைப் பேசக் கற்றுக்கொள்ள இரண்டு வாரங்கள்தான் ஆகின்றனவாம் திமோதிக்கு. இது எப்படிச் சாத்தியம்? ''ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டாலே, அதைப் பேசுவதற்கு எளிதாக இருக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 8 முதல் 10 மொழி யைச் சேர்ந்த செய்தித்தாள்களைப் படிப்பதும் உதவுகிறது!'' என்கிறார். மொய் பைன் (ஸ்பானிஷ் மொழியில் 'வெரி குட்’)!

இன்பாக்ஸ்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தாக்கம் தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வு, ஆச்சர்யமான ஒரு தகவலை அளித்துள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளின் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்குச் சமூக வலைதளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும் குஜராத்தில் 17 தொகுதிகளிலும் தமிழகத்தில் 10 தொகுதிகளிலும் சமூக இணையதளக் கருத்துகளின் தாக்கம் பரவலாக இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. தமிழ்நாட்டில் அந்த 10 காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளாக இருக்குமோ?!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 இந்திய இசை ரசிகர்களுக்கு அது நிச்சயம் அதிர்ச்சியான செய்தி! 13 வயதில் பாடத் துவங்கி 70 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர் இனி பாடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். ''இசையுலகில் நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், என்னால் அந்த மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால், இனி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போகிறேன்'' என்று பாலீஷாகக் குட்பை சொல்லியிருக்கிறார் லதா மங்கேஷ்கர். மிஸ் யூ மேடம்!

இன்பாக்ஸ்

 ஐ.பி.எல். போட்டிகளை ரசிக்கும் சமயம், முதன்முறையாகத் தனது மகன் வியான் ராஜை வெளி உலகப் பார்வைக்குக் காட்டியிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. பதினோரு மாதக் குழந்தையான வியான் பெயரில் இப்போதே ட்விட்டர் கணக்குத் துவங்கிவிட்டாராம் அவருடைய தந்தை ராஜ். லைக்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism