கேட்ட இசை,
ஸ்ரீமதுமிதா, பின்னணிப் பாடகி.

'' 'Twilight’ சீரியஸ் படங்களின் சவுண்ட் டிராக். 'ப்ளூ பாப் பாண்டு’ ஸ்கோர் செய்த 'ஐஸ் ஆன் ஃபயர்’ பாப் பாடல் என் மனதை உருக்குவதாக அமைந்தது. ஹஸ்கி குரலில் கரைந்து உருகும் குரலில் அவ்வளவு இனிமை. அர்த்தம் உணர்ந்து அடுத்தடுத்து கேட்டுப் பாடி பயிற்சி எடுக்கத் தூண்டிய பாடல். என் ஸ்டேஜ் ஷோக்களில் இதுபோன்ற பாடல்களைப் பாட முடிவு செய்துஉள்ளேன்!''

பார்த்த படம்,
பாண்டிராஜ், இயக்குநர்.

''நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள 'அழகர்சாமியின் குதிரை’ படத்தைப் பின்னணி இசை, எஃபெக்ட்ஸ் எதுவுமின்றி பார்த்தேன். உலக சினிமா தரத்தில் ஒரு தமிழ்ப் படம். ஒரு குதிரைக் கும் குதிரைக்காரனுக்குமான உறவைத் தெளிவான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பெரிய ஹீரோ, காமெடியன் என்று வழக்கமான சமாளிப்புகள் இல்லாத தரமான சினிமா. படம் நெடுக இழையோடும் நகைச்சுவைக்கு பாஸ்கர் சக்தியின் வசனம் பெரிய பூஸ்ட்!''

சென்ற இடம்,
மீனாட்சி, நடிகை.

''மங்களூர் பக்கத்தில் இருக் கும் சிக்மகளூர். ஷூட்டிங்குக்காகத்தான் சென்றோம். ஆனால், அங்கு இருந்த மலைகளும் அந்த பச்சைப் பசேல் க்ளைமேட்டும்... லவ்லி! நாள் முழுக்க அங்கே ஷூட்டிங் நடத்த முடியாது. பனி விலகியிருக்கும் இரண்டு, மூன்று மணி நேரத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும். நான் சிக்மகளூர் போயிட்டு வந்து சில மாசங்க ஆயிட்டாலும், இன்னும் அந்த ட்ரிப் மனசுக்குள்ள சாரல் அடிச்சுட்டே இருக்கு!''

கலந்துகொண்ட நிகழ்ச்சி,
வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.,
உதவி ஆட்சியர், நள்கொண்டா, ஆந்திரா.

''சூரியாபேட்டை என்ற பகுதியில் இருக்கும் 'லயோலா பள்ளி’யின் ஆண்டு விழா. பயிற்சி முடித்து நான் இங்கு பணியில் சேர்ந்த ஆறு மாதங்களில் தெலுங்கு எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டுவிட்டேன். ஆனாலும், எழுதி எடுத்துச் சென்று இருந்த உரையை வாசிக்கத் தடுமாறிவிட்டேன். பிறகு, அதை ஓரமாக வைத்துவிட்டு மனசில் பட்டதை கலோக்கியல் தெலுங்கில் பேசி முடித்தேன். அரங்கம் அதிரக் கைதட்டல். மனசுக்கு நிறைவாக இருந்தது!''

படித்த புத்தகம்,
பிரான்ஸிஸ் கிருபா, கவிஞர்.

''ஜெயமோகன் எழுதிய புதினம் 'இரவு’ வாசித்தேன். இரவில் மட்டுமே வாழும் மனிதக் குழு ஒன்று கேரளாவில் இருப்பதான நம்பிக்கைதான் கதைக் களம். அவர்கள் பகலில் படுத்து உறங்கி, இரவில் செயல்படும் குழு. உலகின் ஒட்டுமொத்த அழகியலின் சாராம்சம்கொண்ட யட்சி என்ற பெண் அந்தக் குழுவில் இருக்கிறாள். தமிழ்நாட்டில் இருந்து வேலை தேடிச் செல்லும் நாயகன், அந்தப் பெண் மீது, காதல்கொண்டு அவனும் இரவு வாழ்க்கைக்குத் தயாராகிறான். அசாத்தியமான ஒரு வாழ்க்கையை நம் முன் விவரிக்கும் நாவல்!''

வாங்கிய பொருள்,
ரம்பா, நடிகை

''என் ஒன்றரை மாதப் பெண் குழந்தை லான்யாவுக்காக கனடாவில் இருந்து தொட்டில் ஒன்று வாங்கினேன். 16 ஆயிரம் கனடா டாலர்கள். நாங்களே ஆர்டர் கொடுத்து செய்த பிரத்யேக டிசைன். விளையாட்டுப் பொருட்கள், துணிமணிகள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வைத்துக்கொள்ளும் வசதிகொண்டது. தூங்கிக்கொண்டு இருக்கும் குழந்தை விழித்துக்கொண்டு அழுதாலோ, பாப்பா சுச்சா போய்விட்டாலோ இசை எழுப்பி நமக்குத் தெரியப்படுத்தும் அந்தத் தொட்டில். இப்போ இந்தத் தொட்டில் லான்யாவுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது!''

பாதித்த சம்பவம்,
கஸ்தூரி, நடிகை.

''கருவாகி தாயின் வயிற்றில் 40 வாரங்கள் தங்கிய பிறகு குழந்தை பிறப்பதுதான் சுகப் பிரசவம். ஆனால், மஹாராஷ்டிராவின் சின்ன கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு 27 வாரத்தில் 495 கிராம் எடையில் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் இவ்வளவு குறைந்த எடையில் குழந்தை பிறந்ததே இல்லை. அந்தப் பெண்ணுக்கு அதற்கு முன் 13 தடவை கருத்தரித்து, அத்தனையும் கலைந்து இருக்கிறது. 14-வதாகப் பிறந்த குழந்தை எந்த நேரத்திலும் இறந்துவிடலாம் என்ற நிலை. எல்லோரும் பயந்துகொண்டே இருக்க, நான்கு மாதங்கள் இன்குபேட்டரில் வைத்து 1.45 கிலோ எடையுடன் அந்தக் குழந்தையை உயிர் பிழைக்கவைத்துவிட்டனர். சந்தோஷமாக இருந்தது!''

சந்தித்த நபர்,
காமுத்துரை, எழுத்தாளர்.

''தேனி, அல்லிநகரத்தில் நான் பாத்திரக்கடை வெச்சிருக்கேன். அங்கு அடிக்கடி வரும் சின்னக்காளை ஒரு முன்னாள் கரகாட்டக் கலைஞர். கரகத்தில் பெண் வேஷம் போட்டு ஆடுபவர், தலைமுடி நரைத்துப்போனதும் கூத்துக் கட்டுவதை விட்டுவிட்டார். இப்போது சாவு வீட்டுக்கு ஒத்தக்கொட்டு கொட்டப்போனால் கிடைக்கும் 200, 300-ஐ அப்போதே எல்லோருக்கும் செலவழித்துவிடுவார். தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்யும் மனம்கொண்டவர். இன்றைய சுயநல உலகில் அவரின் எளிமையும், நேர்மையும் என்னைத் தினமும் பிரமிப்பில் ஆழ்த்தும்!''