தமிழ் 'டபாங்’ ரீ-மேக்கில் நடிக்கச் சம்மதித்த சிம்பு, படத்தின் ஹீரோயின், இயக்குநர் இருவரையும் தான்தான் முடிவு செய்வேன் என கண்டிஷன் போட்டாராம். பாலிவுட் பியூட்டி சோனம் கபூரை டார்கெட் வைத்து தீயாக வேலை செய்கிறாராம் சிம்பு. பின்னுங்க பாஸ்!

கோவா பீச் ஹவுஸில் தன் காதலருடன் உலா வந்ததைப் படம் எடுத்த புகைப்படக்காரர் மீது எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறார் வித்யா பாலன். யு டி.வி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூர்தான் வித்யா பாலனின் சிநேகிதர். எப்பிடித்தான் பிக்கப் பண்றாய்ங்களோ!

அனன்யா,

சரண்யா மோகன், அமலா பால் உள்ளிட்ட கேரள வரவுகளுக்கு இது பரீட்சை நேரம். படப்பிடிப்பு ஸீன்களுக்கு நடுவே, பாடப் புத்தகமும் கையுமாக செம ஸீன் போடுகிறார்களாம். பிட் அடிப்பீங்களாப்பா!

இதுவரை 38 முறை விண்வெளி ஆராய்ச்சிக்காகச் சென்று திரும்பிய டிஸ்கவரி விண்கலம், கடந்த வாரம் ஆறு விண்வெளி வீரர்களுடன் 11 நாள் பயணமாக விண்வெளியில் சீறியது. இதுவரை 352 நாட்கள் விண்வெளியில் சுற்றி வந்து, பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவிய டிஸ்கவரியின் கடைசிப் பயணமாம் இது. நெகிழ்கிறது நாசா. சுத்திப் போடு நாசா!

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் உட்பட, மொத்தம் 50 இசையமைப்பாளர்கள் இதில் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறார்களாம். தலைமுறைகளின் இசை தாண்டவம்!

சர்வதேச நடைமுறைக்கேற்ப இந்தியாவில் 1860 முதல் வரி திட்டம் அமலாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு முதல் முறையாக 150 ரூபாய் நாணயத்தை வெளியிட இருக்கிறது. எனக்கு?

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்குக் கல்யாணம். தொழிலதிபர் மகளான ஸ்நேகா ரெட்டியுடன் ஹைதராபாத்தில் டும்டும்டும். அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான், ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால் என இந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்த வருகிறார்களாம். ஸ்வீட் எடு... கொண்டாடு!

ஏப்ரல் 21-ம் தேதி வரை நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர். ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக, ஏராளமான எம்.பி-க்கள் நாடாளுமன்றத் தில் தலை காட்ட மாட்டார்களாம். கடந்த வார பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் ஆப்சென்ட். பட்ஜெட் முடியும் வரை பிரணாப் முகர்ஜி கொல்கத்தா பக்கம் வர முடியாது என்பதால், குஷியில் இருக்கிறார் மம்தா. பட்ஜெட்ல மக்களுக்கு மம்மு தாங்க மக்களே!

கிரிக்கெட் உலகக் கோப்பை ஜுரத்தின் மத்தியில் சத்தமே இல்லாமல் ஜார்கண்டில் நடந்து முடிந்திருக்கிறது 34-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள். இதில் சர்வீஸஸ் அணி 70 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. இந்தியாவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் 48 தங்கங்களை வென்று இரண்டாம் இடம். 14 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்ற தமிழ்நாடு எட்டிப் பிடித்தது 12-வது இடம். பத்தாது சாமியோவ்!

பிரச்னையில் இப்போ பிபாஷா! இரண்டு சிறுமிகள் தன் ஷூவுக்கு லேஸ் கட்டுவது போன்ற ஒரு படத்தை டிவிட்டரில் பிபாஷா போஸ்ட் செய்ய, 'குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறார்’ எனப் போராட்டக் கொடி உயர்த்திவிட்டார்கள். 'சும்மா... ஒரு காமெடிக்காக அப்படி ஒரு போட்டோ போட்டேம்ப்பா!’ என பிபாஷா 'ஜஸ்ட் லைக் தட்’ சொல்ல, என்.ஜி.ஓ அமைப்புகள் நீதிமன்றப் படியேறுகின்றன. ஸாரி கேட்டுடு செல்லம்!

சிங்கம், சிறுத்தை, நடுநிசி நாய்கள், அழகர் சாமியின் குதிரை, ஆடு புலி, சிங்கம் புலி, புலிவேசம், முரட்டுக்காளை என விலங்குகளின் பெயரில் தலைப்பு வைப்பதுதான் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். ப்ளு கிராஸ் மக்கா... அலர்ட்!

பாப் உலகின் சென்சேஷன் பாப்பா, லேடி காகாவைத் தனது 'ரா-ஒன்’ படத்தில் பாடவைக்கிறார் ஷாரூக் கான். மூன்று நிமிடப் பாடலுக்கு,

ஐந்து கோடி சம்பளமாம். காஸ்ட்லி காகா!