. ப.ரபரப்பான, விறுவிறுப்பான திருப்பங்களுடன் தொடங்கி இருக்கிறது உலகக் கோப்பை 2011. இந்த முறை உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான் என்கிற ஆரூடங்களுடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி. முதல் போட்டியில் வங்காள தேசத்தைத் துவைத்து எடுத்தபோதிலும், அடுத்த போட்டியில் சொதப்பித் தள்ளியது இந்தியா. கோப்பையை வெல்லப்போகும் அணி என்று சொல்லப்படும் இன்னோர் அணியான இலங்கைக்கும் இந்திய அணியின் நிலைதான். பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது பேட்டிங் மற்றும் பௌலிங்கில் ஸ்டிராங்கான இலங்கை அணி!.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல அடித்தளம் போட்டுக் கொடுத்தார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் 47-வது சதத்தைக் கடந்து, இந்திய அணியின் ஸ்கோரை நல்ல ரன் ரேட்டுக்கு உயர்த்தினார் சச்சின். ஆனால், சச்சின் அவுட் ஆனதும், இந்த ரன்கள் போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள் இந்திய வீரர்கள். ரன் வந்தால் வரட்டும், அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று விளையாடியதால் 350 ரன்களைக் கடந்திருக்க வேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 338 ரன்களுக்குள் முடங்கியது. 338 ரன்கள் வெற்றிக்குப் போதும்தான் என்றாலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை சர்வ சாதாரணமாக எடைபோட்டுவிட்டது இந்தியா. வெறியும் வேகமும் இல்லாமல் பந்து வீசிய முனாஃப் பட்டேல், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, யுவராஜ் சிங் என யாராலும் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸின் பவுண்டரிகளுக்குத் தடை போட முடியவில்லை. இறுதியில் போட்டி, வெற்றி - தோல்வி இல்லாமல் டையில் முடிந்து இருந்தாலும், சுலபமாக வெற்றி பெற வேண்டிய ஓர் ஆட்டத்தைக் கோட்டை விட்டுவிட்டது இந்தியா. ''மோச மான ஃபீல்டிங்கும், பந்து வீச்சும்தான் தோல் விக்குக் காரணம். இந்திய அணியில் வேகம் குறைவான ஃபீல்டர்கள் இருக்கிறார்கள். பௌலிங்கைப் பொறுத்த வரை அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் பௌலிங் சிறப்பாக இருக்கும்'' என்றார் கேப்டன் டோனி!

இந்த உலகக் கோப்பையின் பால் ஆக்டோ பஸ்... ஷேன் வார்னேதான். ''இன்று நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து போட்டிக்காகக் காத்திருக்கிறேன். என்னுடைய கணிப்பு.... டை'' என பெங்களூரு போட்டி துவங்குவதற்கு முன்பு காலையிலேயே டிவிட்டரில் எழுதி இருந்தார் ஷேன் வார்னே. ஆக்டோபஸ் வார்னே சொன்னது பலித்துவிட்டது!

38,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் இட வசதி கொண்ட பெங்களூரு போட்டிக்கு வெறும் 7,000 டிக்கெட்டுகளே விற்கப்பட, குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களையும் லத்தியால் விரட்டி அடித்தது பெங்களூரு போலீஸ். முக்கால் வாசிக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர். 500 ரூபாய் டிக்கெட் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது!

'ஷேவாக்கின் ஜெர்சி எண் 44. ஆனால், இதன் கூட்டுத்தொகை எட்டு வருவதால், இந்த எண்கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டாம்’ என்று அவரது ஜோசியரின் ஆலோசனைப்படி ஜெர்சியில் இருந்து நம்பரை நீக்கிவிட்டார் ஷேவாக். வங்காள தேச அணிக்கு எதிரான போட்டியின்போதே இது குறித்து இந்திய அணியிடம் விளக்கம் கேட்டது ஐ.சி.சி. ஆனால், இங்கிலாந்துடனான போட்டியிலும் நம்பர் இல்லாத ஜெர்சியை அணிந்தே விளையாடினார் ஷேவாக். ''டெஸ்ட் போட்டிகள் விளையாடும்போது நம்பர் இல்லை. ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் ஏன் நம்பர் அணிந்து விளையாட வேண்டும்'' என்கிறார் ஷேவாக்!

இயான் பெல்லுக்கு அம்பயர் அளித்த 'நாட் அவுட்’ தீர்ப்பினை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்தும் அவுட் கொடுக்கப்படவில்லை. எரிச்சலில் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம், ''தொழில்நுட்பத்தையும், மனித மூளையையும் கலந்தால் இதுபோன்ற முடிவுகள்தான் கிடைக்கும்!'' என்று கடுகடுத்தார் டோனி.

சித்தார்த் மல்லையாவுடன் ஸ்டேடியத்துக்கு வந்திருந்தார் தீபிகா படுகோன். சச்சின் சதம் அடித்ததும் எழுந்து நின்று கைதட்டிய தீபிகா, யுவராஜ் சிங் அரை சதம் அடித்தபோது ரியாக்ஷனே காட்டவில்லை. ஆனால், யுவராஜோ அரை சதம் அடித்ததும் தீபிகா இருந்த திசை நோக்கிதான் பேட்டை உயர்த்தினார்!

பெங்களூரில் இந்திய அணியினர் தங்கியிருந்த ராயல் கார்டெனியா ஹோட்டலில்தான் டோனியுடன் அவர் மனைவி சாக்ஷி தங்கியிருந்தார். ஆனால் அவர் பயிற்சியின்போதோ, போட்டியின்போதோ ஸ்டேடியம் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை!

மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், போட்டியை சென்னைக்கு மாற்றலாம் என்று யோசித்தார்களாம். ஆனால், ஏற்கெனவே கொல்கத்தா போட்டியை பெங்களூருக்கு மாற்றியதால் உண்டான சர்ச்சையால், அந்த எண்ணம் கை விடப்பட்டது. சோர்ந்து போகாதீர்கள் சென்னை மக்களே... இந்த ஆண்டு ஐ.பி.எல் ஃபைனல் சென்னையில்தான் நடைபெறும் என்பது நம்பத் தகுந்த வட்டாரத்தின்தகவல்!