Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
##~##
இன்பாக்ஸ்

நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவைத் தொடர்ந்து, இளைய மகன் அக்கினேனி அகிலும் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைக்கிறார். 'சுட்டிக் குழந்தை’ படத்தில் சேட்டைச் சுட்டியாக நடித்த குழந்தைதான் இந்த அகில். அப்பா டூயட் ஆடிய ஹீரோயின்கூட நடிக்காத அகில்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

நீண்ட நாள் புரளி நிஜமாகிவிட்டது. 'குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, அரசியலில் குதித்தேவிட்டார். கர்நாடகா மாநிலம் மாண்டியா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திவ்யா போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது கர்நாடக காங்கிரஸ். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வின் நெருங்கிய உறவினரான ரம்யாவுக்கு... இப்போதைய முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா என, மேலிட பிரபலங்கள் பலரின் சிபாரிசு இருக்கிறது. பார்லிமென்ட் 'களை’ கட்டட்டும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தனுஷ் பெற்ற வெற்றி, தென்னிந்திய ஹீரோக்களிடம் பாலிவுட் ஜுரத்தைப்பற்றவைத்து இருக்கிறது. அதே ஜோரில் வட இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் அடுத்த ஹீரோ... ராம்சரண் தேஜா. அமிதாப்பின் ஆரம்பகால ஆக்ஷன் ஹிட்களில் 'ஜன்ஜிர்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு. அமிதாப் - ஜெயா பச்சன் இணைந்து நடித்த இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ராம்சரண் தேஜா. இதில் அவருக்கு ஜோடி பிரியங்கா சோப்ரா. இனி எல்லா வுட்டும் ஒரே வுட்டுதான்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 கொதி கொதி கொந்தளிப்பில் இருக்கிறார் கேத்ரீனா கைஃப். ரன்பீர் கபூருடன் ஸ்பெயின் கடற்கரையில் பிகினி அணிந்து, கரீனா கொண்டாடிய விடுமுறைப் படங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டதுதான் அழகியின் கொதிப்புக்குக் காரணம். இதனால் மீடியா மீது கோபப்பட்டாலும் ஒருவகையில் அதை சாதகமாகக் கருதுகிறாராம் கேத்ரீனா. எப்படி? கேத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கானும், ரன்பீரின் முன்னாள் காதலி தீபிகாவும் இந்தப் படங்களைப் பார்த்தால், எரிச்சல் அடைவார்களாம். ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்கப்பா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட சுஜா, அமெரிக்கா வாழ் இந்தியர். அமெரிக்காவின் லாங் பீச் நகர மேயர் தேர்தலில் போட்டியிடும் அவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். கடந்த 2001-ல் லாங் பீச் மாவட்டக் கல்வி வாரியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இப்போது ஒரு தொகுதியின் கவுன்சிலராக இருக்கும் சுஜா, மக்களின் செல்வாக்குக் காரணமாக லாங் பீச் நகர மேயராக போட்டியிட முன்வந்து பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். வெற்றிக் கொடி கட்டுங்க!

இன்பாக்ஸ்

 பொதுவாக ஒரு மனிதன் அல்லது இடத் துக்கு எவ்வளவு நாட்களில் பெயர்வைப்பார்கள்? நியூசிலாந்தில் உள்ள இரண்டு தீவுகளுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர், பெயர் வைக்க இருக்கிறார்கள். நியூசிலாந்துக்குச் சொந்தமாகப் பல தீவுகள் உள்ளன. அவற்றில் இரண்டு தீவுகளை வடக்குத் தீவு, தெற்குத் தீவு என்றே இதுவரை அழைத்துவந்தனர். மக்களின் விருப் பத்துக்கு ஏற்ப, இத்தனை வருடங்கள் கழித்து வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளுக்குப் புதிய

இன்பாக்ஸ்

பெயர்களைச் சூட்ட முடிவு செய்திருக்கிறது நியூ சிலாந்து அரசு. மக்களிடம் நடந்த ஓட்டெடுப்பின்படி வடக்குத் தீவுக்கு 'மாவோரியின் கடவுள்’ என்றும் தெற்குத் தீவுக்கு 'பச்சைக் கற்களின் நதி’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். குளோபல் வார்மிங்ல முங்குறதுக்குள்ள பேர் வைச்சாங்களே!

இன்பாக்ஸ்

 பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிர் இழந்த சரப்ஜித் சிங்கின் மகள் ஸ்வபன்தீப் கவுருக்கு தாசில்தார் பதவி வழங்கியிருக்கிறது பாஞ்சாப் மாநில அரசு. இதற்கு முன்னர், சரப்ஜித் சிங்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்வகையில் மூன்று நாட்கள் துக்கம் கடைப் பிடித்ததோடு, அவருடைய குடும்பத்தின ருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்கியது அந்த மாநில அரசு. சரப்ஜித் சிங்கின் ஆன்மா சாந்தி அடைவதாக!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 அப்பாடா! ஒரு வழியாக ஸ்னோடனுக்கு புகலிடம் கிடைத்துவிட்டது. அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடனுக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகு தற்காலிக தஞ்சம் அளிக்க முன்வந்திருக்கிறது ரஷ்யா. அமெரிக்க ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டு, அந்த நாட்டிலிருந்து தப்பிவிட்ட ஸ்னோடன், மாஸ்கோ விமான நிலையத்தின் சர்வதேச பயணிகள் பகுதியில் தங்கியிருந்தார். அதனால், அவரைக் கைதுசெய்ய முடியாது என்று 'சாக்கு’ சொல்லிவந்தார் ரஷ்ய அதிபர் புடின். இடையில் என்ன நடந்ததோ,  ரஷ்யாவில் ரகசிய இடத்தில் ஒரு வருஷம் தங்கியிருக்க ஸ்னோடனுக்கு அனுமதி அளித்துள்ளது ரஷ்யா. அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது அமெரிக்கா. ரஷ்ய ரகசியங்கள் பத்திரம் ஆபீஸர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism