Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
 ##~##

•  'ரெடி’ படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்துவருகிறது. அங்குள்ள ஹோட்டல் மெனுக்களில் பூச்சிகள்தான் ஸ்பெஷல். ஷூட்டிங் சமயம் பறந்து திரிந்த பூச்சிகளைப் பிடித்து அசின் முன் நீட்டி, 'இதை உன்னால் சாப்பிட முடியுமா?’ என்று சவால்விட்டிருக்கிறார் சல்மான். சளைக்காத அசின் சவாலை நிறைவேற்றிவிட்டாராம். அடியாத்தீ!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் உலகை உலுக்கிய ஜூலியன் அசாஞ்ஜேவின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட் சினிமா ஆகிறது. ஜுராஸிக் பார்க், லாஸ்ட் வேர்ல்டு உள்ளிட்ட பிரபல படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் படத்தின் இயக்குநர். இந்த சினிமா அமெரிக்காவுக்கு இனிமா!

•    லிபியா அதிபர் கடாஃபியிடம் இருந்து பெருந் தொகை பெற்றுக் கொண்டார் என ஹாலிவுட் நடிகை பியான்ஸ் நோவல்ஸ் மீது குற்றச்சாட்டு. கடந்த வருடம், லிபியா அதிபர் கடாஃபியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பியான்ஸுக்கு, கடாஃபி

இன்பாக்ஸ்

5 கோடி கொடுத்தாராம். 'பணம் வாங்கியது உண்மை. ஆனால், அந்தப் பணத்தை அப்போதே தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டேன்!’ என்கிறார் பியான்ஸ். உடான்ஸ் விடாதே பியான்ஸ்!

இன்பாக்ஸ்

•   கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பாவனா நடித்த 'ஜாக்கி’ படம் செஞ்சுரி அடித்த பிறகும் 'நாட் அவுட்’டாக பட்டையைக் கிளப்புவதால், தனது அடுத்த படத்துக்கும் பாவனாவையே புக் செய்திருக்கிறார் புனித். இதனால் கன்னடத்தின் முன்னணி ஹீரோக்கள் இடையே பாவனா கால்ஷீட்டுக்கு ஏக அடிதடி. சண்டை போடாதீங்கப்பா!

இன்பாக்ஸ்

• புத்தகமும் கையுமாக அலைந்துகொண்டு இருக்கிறார் விஜய். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கதையைத் தழுவி உருவாகும் படத்தில் நடிப்பதற்காக இந்த ஹோம் வொர்க். 'எந்திரன்’ பட்ஜெட்டுக்குப் போட்டியான மகா பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருப்பது சன் பிக்சர்ஸின் திட்டம். இந்தியில் யாரு ஹீரோ மணி சார்?

இன்பாக்ஸ்

•  டிவிட்டரில் மிகக் குறைந்த சமயத்தில் 10 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்ததில் (ஃபாலோயர்ஸ்) சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்க டி.வி நடிகர் ஷீன் சார்லி. டிவிட்டரில் அக்கவுன்ட் ஆரம்பித்த 25 மணி நேரத்திலேயே ஷீன் சார்லிக்கு 10 லட்சம் பேர் வால் பிடித்திருக்கிறார்கள். உலகிலேயே டி.வி நிகழ்ச்சியில் ஒரு அத்தியாயத்துக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர், ஷீன் சார்லிதான்.

இன்பாக்ஸ்

4.6 கோடியாம் ஒரு அத்தியாயத்துக்கு. அநியாய அத்தியாயம்!

• தமிழக முதல்வர் போல கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் சினிமா காதலர்தான். தமிழ் செம்மொழி மாநாடு போலவே கர்நாடகாவில் நடக்கவுள்ள உலக கன்னட மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷில்பா ஷெட்டியை அழைக்கச் சொல்லியிருக்கிறாராம் எடியூரப்பா. எடின்னாலே வெடிதான்!

•  செம ஹாட் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் ஜெனிஃபர் அனிஸ்ட்டன். ஸ்டில்களில் கவர்ச்சி டானிக் டோஸ் ஏகத்துக்கும் அதிகமாம். 'புதிய பட வாய்ப்புகளுக்காக இந்த போட்டோ செஷன் இல்லை. என் ரசிகர்கள் வட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அவர்களைக் குறிவைத்துதான் இந்த ஷூட்!’ என்கிறார் 42 வயது அனிஸ்ட்டன். செம ஸ்வீட் 'ஹனி’ஸ்ட்டன்!

இன்பாக்ஸ்

• தற்போது அதிக விளம்பரங்களில் நடிக்கும் நடிகை ஜெனிலியாதான். ''படங்களில் நடிப்பதைவிட விளம்பரங்கள் மூலம் நாடு முழுக்க ரீச்!'' என்கிறது ஜெனி. அதுக்குள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம் கண்ணு?

இன்பாக்ஸ்

•  டாட்டூ பிரியரான டேவிட் பெக்காமின் மார்பில் இப்போது புது டாட்டூ. மூன்று தேவதைகளால் இயேசு மேலே தூக்கப்படும் படத்தை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார். 'அது என்னையும் என் மூன்று மகன்களையும் பிரதிபலிக்கிறது!’ என்று பெக்காம் பேசியது இப்போது புது சர்ச்சை. சர்ச்சுக்குப் போயி மண்டியிடுங்க பெக்!

இன்பாக்ஸ்

• பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல; நடிகர்களின் மனைவிகளும் புதுப் புது பிசினஸ் துவங்கியிருக்கிறார்கள். ஹ்ரித்திக் ரோஷனின் மனைவி சூஸானே ரோஷன் 'கார்கோல்’ என்கிற பெயரில் மும்பையில் புதிதாக இன்டீரியர் டெகரேஷன் கடையைத் திறந்திருக்கிறார். அதில் ஷாரூக் கானின் மனைவி கௌரி கான் சைலன்ட் பார்ட்னராம். கடை விளம்பரத்துக்கு ரெண்டு ஹீரோ கால்ஷீட்டும் கிடைச்சிரும்!

•  நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் பிரணாப் முகர்ஜி. பட்ஜெட்டில் அவர் அறிவித்த நிதி ஒதுக்கீடுகள் பலவும் 3-ல் துவங்குவதற்குக் காரணம், தனது அதிர்ஷ்ட எண் 3 என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் பிரணாப். ''மூன்றாம் நம்பர் ராசியாக இருப்பதால்தான் கட்சியிலும் அவரால் மூன்றாம் இடத்துக்கு மேல் வர முடியவில்லை!'' என்பது பா.ஜ.க-வினரின் கிண்டல். மூணு சீட்டு விளையாடுவீங்களா சார்?

இன்பாக்ஸ்

•  என்.டி.டி.வி வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடம் தட்டிஇருக்கிறார் ராகுல் காந்தி. தொடர்ந்து சல்மான் கான், ஷாகித் கபூர், ஜான் ஆப்ரஹாம், ரன்பீர் கபூர் என நீள்கிறது பட்டியல். சவுத்லயும் மஸ்து பசங்க இருக்காங்கப்பா!