Published:Updated:

விகடன் மேடை - சூர்யா

விகடன் மேடை - சூர்யா

##~##
கே.சித்தார்த்தன், நெய்வேலி.

''உங்கள் நண்பர் விஜய், அரசியலுக்கு வருவதுபற்றி?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஆல் தி பெஸ்ட் விஜய்!''

எம்.காவேரி, கும்பகோணம்.

''சிவகுமார் - சூர்யா - கார்த்தி...இப்படிக் குடும்பம் குடும்பமாக நடிக்க வந்தால், புதிய வர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்?''

விகடன் மேடை - சூர்யா

''சினிமா ஒரு பெரிய கடல்! புயல், வெயில், மழை, சுறா, திமிங்கிலம், ஆழம், ஆபத்து... இதை எல்லாம் பார்க்காமல், யார் உழைக்கிறாங்களோ... அவங்க ஜெயிக்கிறாங்க!  

அப்பா நடிச்சு ஆறு வருஷமாச்சு. அவரை ஏன் ஆட்டத்தில் சேர்க்கிறீங்க? ஒரே ஒரு விஷயம் ஒப்புக்கிறேன். எங்க அப்பா ஒரு நடிகர் என்பதால், எங்களுக்கு என்ட்ரி ஈஸி. படைப்பாளிகள் கண்ல பட்டுக்கிட்டே இருப் போம். அது வாய்ப்பு வாங்கித் தரலாம். அப்பவும், தெரிஞ்சவங்களுக்கு எல்லாம்  வாய்ப்பு கொடுக்க முடியாது. திறமைசாலிகளைத்தான் எல்லோரும் தேடுவாங்க.

சிவகுமார் பையன் என்பதால், என் படங்கள் ஓடுறது இல்லை. என் தம்பி என்பதால், கார்த்தி படம் பார்க்க மக்கள் வரப்போறது இல்லை. தகுதி இருந்தால்தான், யாருக்கும் ஆதரவு தர்றாங்க.

இவ்ளோ பெரிய கடல்ல, எங்களோட ரெண்டு கட்டுமரங்கள் எப்படி மத்தவங்க வாய்ப்பைப் பறிக்கும்? இப்ப நீங்க இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க!''

வி.பவானி, திருச்சி.

''சூர்யா- ஜோ காதலின்போது நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை எங்ககிட்ட ஷேர் பண்ணிக்கலாமா?''

''காதல்னாலே அது சுவாரஸ்யம்தானே. என் காதல் மட்டுமில்லை... எல்லாருடைய காதலும்! காதல் என்னை சந்தோஷப்படுத்துச்சுன்னு சொல்றதைவிட, பரவசப்படுத்துச்சுன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். மத்தபடி, சம்பவங்கள் ரொம்ப பெர்சனல்!''

ஜெ.பவித்ரன், சென்னை-55.

''ரஜினி டைப் மாஸா... கமல் டைப் கிளாஸா? இதில் ரசிகர்களிடம் உங்க அடையாளம் எப்படி இருக்கணும்னு விரும்புறீங்க?''

''ரஜினி சார், அக்கறையோடு சொன்ன ஒரு விஷயத்தை எப்பவும் நான் மறக்க மாட்டேன். 'சூர்யா, நீங்க ஸ்டார் மட்டும் இல்லை. அதே மாதிரி வெறும் ஆக்டர் மட்டும் இல்லை. ஒரு ஸ்டார் ஆக்டரா வளர்ந்துட்டு வர்றீங்க. உங்ககிட்டே மக்கள் நிறைய எதிர்பார்ப்பாங்க. என்டர்டெயின்மென்ட், பெர்ஃபார்மான்ஸ் ரெண்டும் முக்கியம்’னு அக்கறையோடு சொன்னார்.

மாஸ் மட்டும் போதும், கிளாஸ் மட்டும் போதும்னு தனித் தனியா யோசிக்க முடியாது நண்பா!''  

விகடன் மேடை - சூர்யா

வா.சிகாமணி, அதிராம்பட்டினம்.

''உங்க ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?''

''மறதி! ரெண்டு லிஸ்ட்லயும் வரும். கஷ்டப்படுத்தின சம்பவங்களோ, நபர்களோ ரொம்ப நாள் ஞாபகத்தில் இருக்காது. நினைச்சுப் பார்த்தா, 'அப்பாடா’ன்னு இருக்கு. இன்னொரு பக்கம், மறதி தினம் தினம் சிக்கல் தருது. சமீபத்தில்கூட செல்போனைத் தொலைச்சுட்டேன். கொஞ்சம் காஸ்ட்லி போன். அந்தப் பைசா யாருக்காவது பயன்பட்டு இருக்குமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு.

இன்னொரு ப்ளஸ்... பொறுமை. ஒவ்வோர் அடியையும் வேகமா எடுத்துவைக்கணும்கிறதைவிட, சரியா எடுத்துவைக்கணும்னு கொஞ்சம் நேரம் எடுத்துக்குவேன். மத்தவங்க பார்வையில் இது 'பயம்’னு தோணலாம். பலன்களை வெச்சுப் பார்த்தா, எனக்கு பொறுமைன்னு சொல்லத் தோணுது.

மைனஸ்ல முக்கியமானது... கோபம்! சட்டுனு வந்துடும். என் கோபத்துக்கு ஆயுசு கம்மிதான். இருந்தாலும், சரிபண்ணிக்கணும்னு யோசிக்கிறேன்!''

ஆர்.சாய்மீரா, சென்னை-91.

''உண்மையைச் சொல்லுங்கள், அகரம் ஃபவுண்டேஷன் என்பது அரசியலுக்கு வருவதற் கான அடித்தளம்தானே?''

''கோயம்புத்தூர்ல 'ஏழாம் அறிவு’ ஷூட் டிங். டைரக்டர், கேமராமேன் எல்லாம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்குப் போனோம். டேபிள் துடைக்கிறவர் என்கிட்டே வந்து, 'சார், உங்க அகரம் ஃபவுண்டேஷன் மூலமா, என் பையன் படிக்கிறதுக்கு உதவி செஞ்சீங்க. இப்போ நல்லாப் படிக்கிறான். ரொம்ப நன்றி சார்’னு கண் கலங்கி சொன்னப்போ, உள்ளுக்குள் உணர்ந்த சந்தோஷத்துக்கு முன், அரசியல் எல்லாம் ரொம்ப சாதாரணம்!

விகடன்ல ஆண்டனி, லதானு பார்வையற்ற தம்பதிபற்றி ஸ்டோரி வந்துச்சு. 'ஆண்டனிக்கு பி.எட்., சீட் கிடைச்சுடுச்சு. 10 ஆயிரம் ரூபா பணம் வேணும்’னு அகரம் ஃபவுண்டேஷனுக்கு எழுதி இருந்தாங்க. இது நடந்து மூணு வருஷம் ஆச்சு.

கடந்த வாரம், ஆண்டனி போன் பண்ணார். 'அரசுப் பள்ளியில் ஆசிரியரா வேலை கிடைச்சி ருக்கு. முதல் போன் உங்களுக்குத்தான் சார்’னு அவர் சொன்னபோது கிடைச்ச பரவ சத்தை வார்த்தையில் சொல்லத் தெரியலை. நீங்க உணரணும்னா, தேவை இருக்கிறவங் களுக்கு உதவி செஞ்சு பாருங்க. இந்தக் கேள்வி சாதாரணமானதுன்னு அப்போ உங்களுக்கே புரியும்!''

எல்.கவிதாசன், திருப்பூர்.

''நீங்கள் தம் அடிப்பீர்கள் என்கிறான் என் நண்பன். நான் அடிக்க மாட்டார் என்கி றேன். உண்மை சொல்லுங்கள் சூர்யா?''

''சினிமாவில் அடிச்சுட்டு இருந்தேன். இப்போ அதுவும் இல்லை. 'பேரழகன்’ படம் பண்ணும்போது, அந்தப் படத்தில் தம் அடிக்கிற காட்சி இருந்தது. அப்போ தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சார், 'நடிகர்களை அப்படியே ஃபாலோ பண்ற ரசிகர்கள் இருக்காங்க. உங்க ளைப் பின்பற்றும் ரசிகர்களுக்காக சினிமாவில் 'சிகரெட்’ பிடிக்க வேண்டாமே’னு ஓர் ஆலோ சனை சொன்னார். மனசுக்கு நல்ல விஷயமாப் பட்டுச்சு. அப்பவே, 'இனிமே என் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்காது’ன்னு அவர்கிட்ட பிராமிஸ் பண்ணேன். அதை இப்போ வரைக்கும் ஃபாலோ பண்றேன். கதை சொல்லும் இயக்குநர்களிடம் ஒரு வேண்டுகோளாவே இதைச் சொல்லிடுறேன்!''

விகடன் மேடை - சூர்யா

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

''ஜோதிகா நடித்த வேடங்களில் உங்க மனசுக்கு நெருக்கமானது எது?''

'' 'காக்க காக்க’, 'மொழி’, 'சந்திரமுகி’... மூணு படங்களும் ரொம்பப் பிடிக்கும். இதில், 'மொழி’க்கு முதல் இடம். நிறையப் படங்களில் இன்ட்ரஸ்டிங் ரோல் பண்ணியிருக்காங்க. ஆனா, 'மொழி’ ரொம்பவே இன்ஸ்பைரிங் கேரக்டர்!''

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.

'' 'காக்க காக்க’, 'சிங்கம்’ இரண்டில் எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?''

 '' 'காக்க காக்க’ என் ஆதர்ச அடையாளம். 'நந்தா’ பண்ணிட்டு, அடுத்து என்னன்னு ஒரு பசியோடு காத்துட்டு இருந்தபோது, 'காக்க காக்க’ பண்ணினேன். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடிக்க முடியும்னு நிரூபிச்ச படம் அது.

'சிங்கம்’ எனக்குக் கம்பீர அங்கீகாரம். 60 கோடிக்கும் அதிகமான கலெக்ஷன்னு சொல் றாங்க. என்னை நம்பி அதிக முதலீடு செய்யலாம்னு தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தந்த படம். 'சிங்கம்’ வெறும் கமர்ஷியல் படம்னு சொல்லிட முடியாது.

ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தாங்க. ஏ,பி,சி கணக்கு எல்லாம் இல்லாம, எல்லாத் தரப்பு ரசிகர்களையும், சின்ன பசங்கள்ல இருந்து, பெரியவங்க வரை எல்லோரையும் கவர்ந்த படம் அது.

அடையாளம், அங்கீகாரம் ரெண்டுமே மனசுக்கு நெருக்கமானவைதான்!''

உதயபானு, ராமநாதபுரம்.

''அடுத்தடுத்து ஹிட் படங்களால் மாஸ் ஹீரோ ஆகிவிட்டீர்கள். நேஷனல் அவார்டு வாங்கும் ஆசை இல்லையா?''

 ''நான் நடிக்கிற படங்கள், அர்த்தமுள்ள பொழுதுபோக்கா இருக்கணும்னு நினைக்கிறேன். அதற்கான கதைகளை நான் தேடலாம். அதை உருவாக்க முடியாது. 'பிதாமகன்’ மாதிரி கதைகள் அமைஞ்சா உண்டு. அதை உருவாக்க முடியாது. கதை பிடிச்சு, நடிக்கிற படங்களில் முழுக் கவனத்தையும் உழைப்பையும் தர்றேன். முயற்சி திருவினை ஆக்கும்னு சொல்லி இருக்காங்க.

நடிகனா இப்போதான் ஓர் அடையாளம் கிடைச்சிருக்கு. ஒரு நடிகனுக்குத் தேசிய விருது என்பது முக்கியமான அங்கீகாரம். அதுவும் சீக்கிரம் கிடைக்கும்னு நம்பிக்கையோடு காத்திருக்கேன்!''

கு.பன்னீர்செல்வம், கோயம்புத்தூர்.

''உங்கள் ஞாபக அலமாரியில் இப்போ தும் உள்ள மனப்பாடப் பகுதி?''

'' 'வேடிக்கை மனிதரைப்போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்று பராசக்தியிடமே பாரதியார் கேட்ட வரிகள், எப்போ சொல்லிப் பார்த்தாலும் எனர்ஜி டானிக். அடுத்து, அதிக சந்தோஷமோ, கவலையோ இருந்தால், 'இதுவும் கடந்து போகும்’னு மனசுக்குள் சொல்லிக்குவேன். இந்த மூன்று வார்த்தைகள் மொத்த வாழ்க்கைக்கும் பொருந்தும்!''

- அடுத்த வாரம்...  

 ''ஜோதிகாவுக்கு முன் யாரையேனும் காதலித்து இருக்கிறீர்களா? சும்மா சொல்லுங்களேன்...''

 ''ஷங்கரின் 'த்ரீ இடியட்ஸ்’ படத்தில் நடிக்க நீங்க 15 கோடி ரூபாய் சம்பளமும், தெலுங்கு வியாபார ரைட்ஸும் கேட்டதால்தான், அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி. அந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கும் விஜய்க்கும் இடையே மியூஸிக்கல் சேர் போட்டி... என்னதான் நடந்தது சூர்யா?''

 '' 'நேருக்கு நேர்’, 'ஃப்ரெண்ட்ஸ்’... மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா?''

- சூர்யா பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - சூர்யா