நடிகை குஷ்புவுக்கு ஆதீனம் ஆதரவு!

டிகை குஷ்பு ருத்திராட்ச தாலி அணிவதில் தவறில்லை என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கருத்து வெளியிட்டுள்ளார

குஷ்பு சும்மா இருந்தாலும் அவரை ஒரு சர்ச்சை சுற்றி கொண்டுதான் இருக்கும். சினிமா பட பூஜையின் போது சாமி சிலை அருகே கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தது, கற்பு குறித்து கருத்து தெரிவித்தது... என.  அந்த வரிசையில் குஷ்பூ ருத்திராட்ச தாலி அணிந்திருப்பதாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்தது.

இந்து மதத்தை கடுமையாக பின்பற்றுபவர்கள் மட்டுமே ருத்திராட்ச மாலை அணிய வேண்டும். இஸ்லாமிய பெண்ணான குஷ்பூ ருத்திராட்ச மாலை அணிய தடை விதிக்க வேண்டுமென கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 இந் நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், நடிகை குஷ்புவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘நடிகை குஷ்பூ ருத்திராட்ச தாலி அணிந்திருப்பதில் தவறில்லை. குஷ்பு இந்து மதத்திற்கு மாறியது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் ருத்திராட்ச மாலை அணிவதை வரவேற்கிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!