Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• சைவப்பட்சிணிகள் பட்டியலில் புது வரவு, பாலிவுட் நடிகை முக்தா கோட்சே. அசைவம் இன்றி ஒரு வாய் சாப்பாடுகூட இறங்காதவருக்கு, 'அஷ்தாங் யோகா’ மாற்றுப் பாதையைக் காட்டியதாம். யோகாவின் பயன்... தனது வளைவுகளில் வெளிப்படும் என்கிறார் முக்தா. ஜிந்தாக்கு ஜிந்தா ஜிந்தா!

இன்பாக்ஸ்

•  'நடை உடை பாவனை’ என்ற தனது அடுத்த படத்தை இயக்கத் துவங்கிவிட்டார் இயக்குநர் வஸந்த். மூன்று கதை களைச் சுற்றிச் சுழலும் படமாம் இது. ப்ரியாமணி ஹீரோயின். இசையமைப்பாளர்... கர்னாடக சங்கீதப் பாடகி சுதா ரகுநாதன்! 'இசை’க் கச்சேரி களை கட்டும்!

• பேட்ஸ்மேன்களைக் கலங்கடிக்கும் பாகிஸ்தானின் 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ ஷோயப் அக்தர் உலகக் கோப்பைத் தொடரோடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். ''எனது கடைசி விக்கெட் சச்சினாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை!'' என்கிறார் அக்தர். ஆசை தோசை அப்பள வடை!  

இன்பாக்ஸ்

• மெட்டாலிக் மேக்னட் குரலால் இளசுகளைச் சுண்டி இழுக்கும் பாப் பாடகி நேஹா பேசின் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் போல தனக்கென தனி ரசிகர் வட்டம் உருவாக வேண்டும் என்பது கனவு. பாலிவுட் என்ட்ரிக்காக போட்டோ ஷூட் செய்திருக்கிறார் நேஹா. ஸோ ஹாட் நேஹா!

இன்பாக்ஸ்

• வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்பு உணர்வுப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் சச்சின். விளம்பரம் தமிழ், மலையாளம், அஸாமி மற்றும் வங்காள மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தேர்தல் சமயத்தில் ஒளிபரப்பப்படுமாம். பிரபலங்கள் விரல்ல முதல்ல மை பதிக்கணும்!  

•  உலகக் கோப்பைக்காக இந்தியா வந்திருக்கும் கிரிக்கெட் அணிகளுள் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், மனைவிகள் என கலர்ஃபுல்லாக இருக்கும் ஒரே அணி... தென் ஆப்பிரிக்கா. காலிஸின் தோழியும் நடிகையுமான ஷேமோன், வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னின் தோழி ஜீன் கிட்ஸ்மேன், டுமினியின் தோழி ஸு எராமஸ் என அழகுப் பெண்கள் சூழ வலம் வருகிறது தென் ஆப்பிரிக்கா. புலிகளுடன் கிளிகள்!

இன்பாக்ஸ்

•  கோவிந்தா மகள் நர்மதா, இதோ பாலிவுட்டில் வலது கால் எடுத்து வைத்துவிட்டார். பாக்ஸிங் வீரர் விஜேந்தர் சிங்... ஹீரோ. ''பாக்ஸிங் வீரர் என்பதால், படம் விளையாட்டைப்பற்றியது என நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்கக் காதல் படம்!'' என்பது நர்மதாவின் கன்னிப் பேட்டி. கனவுக் கன்னியாக வாழ்த்துக்கள்!

இன்பாக்ஸ்

•  ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் பொறுப்பு வகிக்கும் கிரண் பேடி, சமீப மாக சைபர் உலகில் கோடி களை உருவும் நைஜீரியாவின் கிரிமினல் மூளைகளுக்குப் பொறி வைத்திருக்கிறார். சைபர் கொள்ளைகளுக்கு நைஜீரிய அரசாங்கமும் உதவுகிறது என கிரண் பேடி ஐ.நா-விடம் ரிப்போர்ட் கொடுக்க, பேடியின் இ-மெயிலையே ஹாக் செய்துவிட்டது நைஜீரிய சைபர் படை. அந்த நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சீறுகிறார் பேடி. கேடிப் பசங்களா!

•  கள்ள உறவு, விவாகரத்து போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் கொடுக்கும் ஐடியா இது, ''எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும், மாதத்தில் ஒருநாள் மனைவியுடன் முழு நாளையும் செலவிடுவேன். அந்த நாளில், எங்கள் குழந்தைகளுக்குக்கூட இடம் இல்லை. நீங்களும் இதைப் பின்பற்றுங்கள். குடும்பத்தில் பிரச்னை எழாது!'' ப்ளே பாயா இருக்காதீங்க ப்ளேயர்ஸ்!

இன்பாக்ஸ்

•  இந்த ஆண்டின் கோலிவுட் டாப் ஸ்டார் விஜய். 'வேலாயுதம்’, 'நண்பன்’, 'பொன்னியின் செல்வன்’, 'பகலவன்’, ஷங்கரின் அசிஸ்டென்ட் இயக்கவிருக்கும் படம் என விஜய்யின் கால்ஷீட் டைரி ஃபுல். வாழ்க்கை ஒரு வட்டம்டா!