Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• அப்பா ஆகப்போகிறார் விஸ்வநாதன் ஆனந்த். மொனாக்கோ ஆம்பர் செஸ் போட்டியை வேகவேகமாக முடித்துவிட்டு, பிரசவ நேரத்தில் தன் மனைவியின் அருகில் இருக்க சென்னை வந்திருக்கிறார் ஆனந்த். 'சதுரங்க ராஜா’ வீட்டுக் கன்னுக்குட்டி!

•  'எந்திரன்’ படம்தான் ஆரம்பம். ஷங்கரின் 'நண்பன்’ படத்தில் எழுதியிருக்கும் பாடல்களுடன் சினிமாவில் கால் சதம் அடித்துவிட்டார் கவிஞர் மதன் கார்க்கி. செஞ்சுரி தொட வாழ்த்துக் கள்!

இன்பாக்ஸ்

• சமீபமாக, வித்யா பாலன் எது செய்தாலும் அது சர்ச்சையில்தான் முடிகிறது. கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில், மேடையேறிய ஷாரூக் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேன் இருவரும் வித்யா பாலனுடன் நடனமாடினர். நடனம் சூடுபிடிக்க, தன்னிலை மறந்த ஷாரூக்கும் ஜேக்மேனும் ஒருசேர வித்யாவைக் கட்டிக்கொண்டு ஆட, 'பொது விழாவில் இப்படி ஆபாசமாக நடனம் ஆடலாமா?’ என்று வித்யா பாலனுக்கு எதிராகக் கண்டனங்கள். கட்டிப்புடி வைத்திய ஆபரேஷன் ஃபெயிலியர்!

இன்பாக்ஸ்

•  முதல்முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஜி.வி.பிரகாஷ், அக்ஷய் குமார்- சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் 'ஜோக்கர்’ படத்துக்கு இசை அமைத்து வருகிறார். பாலிவுட்டின் 3டி படமான இதில் ஒரு பாட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்பட மொத்தம் 10 மொழிகள் இடம்பெறு கின்றன. 10 இடி!

•  அருந்ததியினருக்காகவும் மற்ற தலித்துகளுக்காகவும், 'வெள்ளைக் குதிரை’ என்கிற புதிய பத்திரிகை தொடங்கப்பட்டுள்ளது. அருந்ததியின ரின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கையை எழுத்து மூலமாகவும் இயக்கங்கள் மூலமாகவும் முன்னெடுத்த கவிஞர் ம.மதிவண்ணனின் முன் முயற்சி யில்தான் தொடங்கப்பட்டு உள்ளது இந்த வெள்ளைக் குதிரை. பாய்ச்சல் ஆரம்பம்!

இன்பாக்ஸ்

•  ''சினிமாவில் நடிக்க வரும் போது வழிகாட்டிகள் யாரும் இல்லாத தால் தவறுகள் செய்தேன். இப்போது பக்குவப்பட்டுவிட்டேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் சிறந்த கதை அம்சம்கொண்ட படத்தில்தான் நடிப்பேன். பேங்க் பேலன்ஸ் நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தராது!''  என்கிறார் இலியானா. நாலு பாட்டு இருக்குற கதையா செலெக்ட் பண்ணுங்க!

இன்பாக்ஸ்

•  ஸ்கூபா டைவிங், பங்கி ஜம்ப்பிங், ஸ்கை டைவிங் என சாகச விளையாட்டுப் பிரியையான த்ரிஷாவின் லேட்டஸ்ட் ஆசை, பாரா க்ளைடிங். தன்னந்தனியாக வானத்தில் பறக்க வேண்டும் என்று தீவிரப் பயிற்சியில் இருக்கிறார் த்ரிஷ். றெக்கை கட்டிப் பறக்குற வயசு மனசு!

இன்பாக்ஸ்

• ஹன்சிகாவுடன் காதல், பிரிந்துவிட்டார்கள், இருவருக்கும் சண்டை என்ற எல்லா செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர் நயன்தாராவும் பிரபுதேவா வும். அமெரிக்காவில் நடன இயக்குநர் ரகுராமின் மகள் சுஜா நடத்தி வரும் நடனப் பள்ளி விழாவில் ஜோடியாகக் கலந்துகொண்டபோது, இருவரிடையேயும் அவ்வளவு அந்நியோன்யம். ரசிகர்களுக்காக மேடை யில் ஆடவும் செய்தாராம் பிரபுதேவா. டூயட் ஆடலையா பிரபு!

•  உலகத் தர வரிசைப் பட்டியலில் மீண்டும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் சாய்னா நெஹ்வால். காயம் மற்றும் தொடர் தோல்விகள் காரணமாக ரேஸில் பிந்தியவர், ஸ்விஸ் ஓப்பன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த இடம். ரேங்க்கிங்கைவிட, அசுர வேகத்தில் விளம்பரங்களும் குவிகின்றன. இனிமே எல்லாம் அப்படித்தான்!

இன்பாக்ஸ்

• பேட் பாய் இமேஜை மாற்ற, தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சல்மான் கான். மும்பையில் கடந்த வாரம் ரத்த தானம் நிகழ்ச்சியை நடத்தி, தானும் ரத்த தானம் செய்ததோடு, அமீர் கான் உள்பட 50 பிரபலங்களையும் ரத்த தானம் கொடுக்கவைத்து இருக்கிறார் சல்மான். சல்யூட் சல்லு!