Published:Updated:

யோதகாவின் லா பொங்கல்!

சார்லஸ்படம் : வி.செந்தில்குமார்

##~##
'யோ
தகா’ இசைக் குழு... ஜாஸ், பாப், ஃப்யூஷன், கர்னாடிக், லத்தீன் அமெரிக்கன், எகிப்திய, அரேபிய இசைகளைக் கலந்த இவர்களது காக்டெயில் இசை... இப்போ செம ஹிட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருநாள் அடையாறில் பக்திக் கச்சேரி நடத்திவிட்டு, அடுத்த நாள் டிஸ்கோ பப்களில் அலறல் கச்சேரி நடத்தும் கில்லாடிகள் இவர்கள். சிவா, பிரதீப், சுபிக்ஷா ஆகிய மூவரும்தான் 'யோதகா’வின் மாஸ்டர் மைண்ட்!  

'யோதகா’ பற்றி பேசத் துவங்கினார் 'டர்புகா’ சிவா. ''முதல்ல டர்புகான்னா என்னன்னு சொல்லிடுறேன். அது ஒரு எகிப்திய இசைக் கருவி. தபேலா மாதிரியான வாத்தியம். இதில் இருந்து வரும் சத்தம் 'யூனிக்’ ஆக இருக்கும். அதனாலேயே மெட்ரோ சிட்டி இளைஞர்களிடையே இதுக்குப் பயங்கர கிரேஸ்! 2005-ம் வருஷம் 'யோதகா’ மியூஸிக் பேண்டை ஆரம்பிச்சேன். 'யோதகா’ என்றால், சம்ஸ்கிரு தத்தில் போர் வீரர்கள் என்று அர்த்தம்!'' என்ற சிவாவை, ''கம்பெனி ஓனர் ஹிஸ்ட்ரியை ஆரம்பிச்சா... ரெண்டு மணி நேரம் மொக்கை போடுவாரு!'' என்று இடைமறித்த பிரதீப், அவரே மேற்கொண்டு தொடர்ந்தார்.

யோதகாவின் லா பொங்கல்!

''ஒரு மியூஸிக் ஷோவில்தான் சிவா அறிமுகம். அந்த நட்பு 'யோதகா’வில் என்னையும் உறுப்பினர் ஆக்கியது. சம்ஸ்கிருத ஸ்லோகன்களை நமது பாரம்பரிய இசையில் வாசித்தோம். 'ரிஸ்க் எக்ஸ்பெரிமென்ட்’னு எங்களுக்கே தோணுச்சு. ஆனா, முதல் ஆடிஷன்லயே செம ரெஸ் பான்ஸ்!'' என்று பிரதீப் நிறுத்த, மூவரும் ஒருவருக்கொருவர் சிக்னல் கொடுத்துப் பாடுவதற்கு ஆயத்தம் ஆகிறார்கள்.

சம்ஸ்கிருத ஸ்லோகனை மெஸ்மரிசக் குரலில் சுபிக்ஷா பாடத் துவங்க, சிவா டர்புகாவைத் தட்ட, பிரதீப் கிடார் மீட்ட... கண்களை மூடினால் மியூஸிக் அகாடமிக்குள் நிற்கும் உணர்வு!

வித்தியாசமான இசை, ரசிக்கும் வகையில் சம்ஸ்கிருதம், கிடாரின் துள்ளல் இசைக் கலவையில்... 'சம்திங் டிஃபரென்ட்’ இசையாக ஈர்க்கிறது. சில பல நிமிடங்கள் தாலாட்டிவிட்டு, ''நல்லா இருந்துச்சா?'' என்று ஆர்வமாக விசாரிக்கிறார் சுபிக்ஷா. நமது ரியாக்ஷனுக்கு அகமகிழ்ந்து பேசத் தொடங்குகிறார். ''எப்பவும் ஃபேஷன் ஷோவில் மாடல்களின் 'ராம்ப் வாக்’கின்போது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வெஸ்டர்ன் இசைதான் ஒலிக்கும். ஆனா, போன வருஷம் சென்னையில் நடந்த இந்தியா ஃபேஷன் ஷோவில் டிசைனர் சத்யா பால், அவரது கலெக்ஷனுக்கு மாடல்கள் நடக்கும்போது, எங்களை லைவ் மியூஸிக் பண்ணவெச்சார். ராம்ப் வாக் முடிஞ்சதும் எல்லோரும் எங்க பெர்ஃபார்மன்ஸுக்கு எழுந்து நின்னு கை தட்டிப் பாராட்டினாங்க. அங்கே இருந்த சத்யம் சினிமாஸின் எம்.டி கிரண் ரெட்டிக்கு எங்க ஸ்டைல் பிடிச்சுப்போய், அவரோட 'பர்ப்பிள் நோட்’ கம்பெனிக்காக ஒரு ஆல்பம் பண்ணித் தரக் கேட்டார்.

அந்த தங்கத் தருணத்தைத் தவறவிடாமல், கெட்டியாப் பிடிச்சுக்கிட்டோம். எங்க முழு திறமையையும் புதைச்சு நாங்க பண்ணதுதான் 'யோதகா’ ஆல்பம்!'' என்று உற்சாகம் பகிரும் சுபிக்ஷா, எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியின் மீடியா மேனேஜ்மென்ட் மாணவி. 'கண்ட நாள் முதல்’ படத்தில் ஒலிக்கும் 'கண்ட நாள் முதலாய்’ பாடலின் குரல் சுபிக்ஷாவுக்குச் சொந்தம். இவர் ஓர் ஓவியரும்கூட. யோதகா அலுவலகத்தின் மாடர்ன் ஆர்ட் அனைத்தும் சுபிக்ஷா ஸ்பெஷல்!

யோதகாவின் லா பொங்கல்!

''எங்க யோதகா ஆல்பத்தை கௌதம் மேனன் ரிலீஸ் பண்ணினார். அதுக்கு ஒருநாள் முன்னாடி தான், அவரோட சொந்த ஆடியோ நிறுவனமான 'ஃபோட்டான் மியூஸிக்’கை ஆரம்பித்து இருந்தார். 'கொஞ்ச நாளுக்கு முன்னாடியே இவர்களைச் சந்திச்சிருந்தா, என் கம்பெனியின் முதல் ஆல்பம் யோதகாவா இருந்திருக் கும். மிஸ் பண்ணிட்டேன்’னு அவர் சொன்னது, எங்களுக்கு எனர்ஜி டானிக்!'' என்கிறார் 'டர்புகா’ சிவா.

''எங்க அடுத்த ஆல்பம் 'லா பொங்கல்’. முழுக்க நம்ம ஊரு ஸ்டைல் தமிழ்ப் பாடல்களுடன் பிரெஞ்சு இசையைச் சங்கமிக்கும் ஐடியா. ஏதோ எங்களால முடிஞ்ச இடங் களுக்கு தமிழ் இசையை அழைச்சுட்டுப் போறோம். அது எங்களைச் சர்வதேச உயரத்துக்குக் கொண்டுசெல்லும்!'' என்கிறார்கள் கோரஸாக!