. 'ஆ.பத்தான நிலையில் சாய் பாபா!’ அவருடைய லட்சோப லட்ச பக்தர்களை நிலைகுலையவைத்தது அந்தச் செய்தி. உலகம் எங்கும் உள்ள அவரது பக்தர்களின் பிரார்த்தனை இப்போது அவரது உடல் நலத்தை இயல்பு நிலைக்குத் திருப்பிக்கொண்டு இருக்கிறது. பாபாவின் தீவிர பக்தையான நடிகை லட்சுமி, அவருடனான நெகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்..
''20 வருஷங்களுக்கு முன்பு நீதிபதி ராமசுப்பிரமணியத்தின் தலைமையில் புட்ட பர்த்தி சென்றேன். பாபாவைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது, என்னை அறியாமல் அழுகை வந்தது. அந்த அழுகை விடுதலையாக இருந்தது.

என் அருகில் இருந்த சீனப் பக்தை ஒருவர் சீன மொழியில் பாபாவுக்குக்கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். 'நீங்கள் இதை என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். 'நான் அவருக்கு அனுப்பிவைப்பேன். சீன மொழியிலேயே அவர் பதிலும் அனுப்புவார்’ என்றார். பாபாவின் பெருமையை நான் நேரடியாக உணர்ந்த தருணம் அது. அதற்குப் பிறகு அடிக்கடி 'பிரஷாந்தி நிலைய’த்துக்குச் சென்று வருவேன்.

ஒரு முறை நான் அங்கிருந்த ஐந்து நாட்களும் பாபா எனக்கு திருநீறு கொடுத்தார். தினமும் பிரசாதம் தருகிறாரே என்று எனக்கே ஆச்சர்யம். வீட்டுக்கு வந்ததும் என் உடம்புக்கு முடியாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்றபோது, பித்த நீர்ப் பையை அகற்ற வேண்டும் என்றார்கள். இரவு பாபாவை நினைத்துக்கொண்டே தூங்கிப் போனேன். மறுநாள் ஆபரேஷனில் அனைவருக்கும் ஆச்சர்யம். பெரிய அளவில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை சின்ன அளவில் முடிந்துவிட்டது. பாபா எனக்குத் தொடர்ந்து பிரசாதம் கொடுத்ததன் சூட்சுமம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

பாபா எப்போதும் சொல்வார், 'நான் இந்த உடல் அல்ல. நான் எப்போதும் உங்களுடனே இருக்கிறேன்!’ என்று. பாபாவுக்கு உடல் நலமில்லை என்று சொல்வது அஞ்ஞானம். நாம் மெய்ஞானம் அடைய பாபாவைப் பிரார்த்திப்போம்!'' - நெகிழ்வுடன் முடிக்கிறார் லட்சுமி.