Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  'தமிழன்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழில் பிரியங்கா சோப்ரா. மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்’ படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு பிரியங்காதான் ஜோடி. விஜய்க்கு அனுஷ்கா. பொன்னியின் 'செல்வி’கள்!  

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• சென்னை அண்ணா நகரில், தன் முன்னாள் மனைவி ரம்லத் குடியிருக்கும் வீடு அருகே ஃப்ளாட் வாங்கி இருக்கிறார் பிரபுதேவா. தனது மகன்கள் நினைத்த நேரத்தில் தனது வீட்டில் வந்து தங்குவதற்காகவே, அந்த வீட்டை வாங்கினாராம் பிரபு. டாடிடா!

•  மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் நாற்காலியில் தொடர்ந்து 29 வருடங்களாக அமர்ந்து, உலக சாதனை படைத்திருக்கிறார் ஹசிம் அப்துல் ஹலிம். 75 வயதாகும் ஹசிம், 'சபாநாயகர் நாற்காலி எனக்கு அலுத்துவிட்டது!’ என்று இம்முறை தேர்தலில் போட்டியிடாமலேயே தவிர்த்துவிட்டார். உங்களுக்குப் புரியுது!

இன்பாக்ஸ்

•  ''என்னை 'சிம்பிள் மேன்’ என்கிறார்கள். அதன் காரணம், என் அம்மா. கிரிக்கெட்டில் நான் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும், என் அம்மா தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலைக்குச் சென்றார். எளிமை, பணிவு, பொறுமை, உழைப்பு என முழுமையான மனிதர் என் அம்மா!'' என்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஓ.கே. சச்சினின் அம்மா பெயர் என்ன தெரியுமா... ரஜினி டெண்டுல்கர். சூப்பரப்பு!

இன்பாக்ஸ்

• கர்நாடக எழுத்தாளரும் இயக்குநருமான கிரீஷ் கர்நாட் 'காவிரி’ என்ற பெயரில் படம் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம், காவிரி நதி விஷயத்தில் கர்நாடக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன் என்று கிரீஷ் சொல்ல, படத்துக்கு இப்போதே எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. விடாதீங்க பாஸ்!

இன்பாக்ஸ்

• மொரீஷியஸ், இலங்கை, தாய்லாந்து என தடதடத்துக்கொண்டு இருந்த 'ரெடி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஓவர். ''மாதுரி தீட்சித்தைப் போன்று மிகவும் திறமையான நடிகை அசின்!'' என ஷூட்டிங் பேக்கப் ஆனதும் சல்மான் கான் புகழ... உற்சாக மிதப்பில் இருக்கிறார் அசின். இப்படித்தான் எல்லாம் ஆரம்பிக்கும்!

இன்பாக்ஸ்

• ஆல்கஹால் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான பிரசாரத்தில் முனைப்பாக இருக்கிறார், பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ். உலகத்துக்குச் சொல்லும் முன் முதலில் என்னைச் சரிசெய்துகொள்கிறேன் என்று போதைக்கு எதிரான புதிய புரட்சியைத் தனது டீமிலேயே துவக்கிவிட்டார். இசைக் குழுவில் தன்னுடன் பங்கேற்பவர்களை, போதை வஸ்துகள் உபயோகிக்க மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவைக்கிறார். நல்ல விஷயம்!

இன்பாக்ஸ்

• டோலிவுட்டில் இது கல்யாண சீஸன்.சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவுக்கும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா கமினேனிக்கும் விரைவில் கெட்டிமேளம். 22 வயது உபாசனா, 'பி-பாசிட்டிவ்’ என்கிற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறார். ஹெல்த்தியா இருங்க!

இன்பாக்ஸ்

• ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹாலிவுட்டில் நடிகராகிவிட்ட நிலையில், அவரது மகள் வில்லோ ஸ்மித் பாப் பாடகி அவதாரம் எடுத்திருக்கிறார். 9 வயது சிறுமியான வில்லோ ஸ்மித், 'ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி கேர்ள்’ என்கிற பெயரில் மியூஸிக் ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். ஸ்மித்துக்கு ஏக சந்தோஷம்  பேர் சொல்லும் பிள்ளைகள்!

இன்பாக்ஸ்

• ஏஞ்சலினா ஜோலியின் கையில் புதிதாக ஏழாவது டாட்டூ! உடனே, 'ஜோலி ஏழாவது குழந்தையைத் தத்தெடுக்கப் போகிறார்!’ என்று பரபரக்கத் தொடங்கிவிட்டன மீடியாக்கள். காரணம், முந்தைய ஆறு டாட்டூக்களும் ஜோலியின் ஆறு குழந்தைகள் பிறந்த ஊர்களின் நினைவாகக் குத்தப்பட்டவை. அந்த ஊர் பேரு என்னவாம்?

இன்பாக்ஸ்

• ரத்தன் டாடா அடுத்த ஆண்டுடன் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். தனது இத்தனை ஆண்டு தொழில் அனுபவத்தில், 'ஸ்பெக்ட்ரம்’ விவகாரம்தான் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் என நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு இருக்கிறார் டாடா. பிரச்னைக்கு எப்போ டாட்டா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism