Published:Updated:

''துன்பம் துறந்தவன் நான்!''

ந.வினோத்குமார்படம்:உசேன்

''துன்பம் துறந்தவன் நான்!''

ந.வினோத்குமார்படம்:உசேன்

Published:Updated:
##~##

யாழ் சுதாகர்... சூரியன் பண்பலைத் தொகுப்பாளர்! காதல் வயப்பட்டவர்களுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் இரவின் தனிமைப் பொழுதுகளைக் காதலால் நிரப்பித் தரும் காற்றலை நண்பன். அனைவரின் சோகங்களுக்கும் மெல்லிசைத் தாலாட்டு ஆறுதல் அளிக்கும் யாழ் சுதாகரின் வாழ்க்கை அத்தியாயங்கள் அத்தனையிலும் சோகச் சுவடுகள்தான்!

''யாழ்ப்பாணம் எனது சொந்த ஊர். தந்தை யாழ்வாணர் அங்கு பிரபலமான எழுத்தாளர். யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராகப் பல வருடங்கள் இருந்தவர். அப்போதெல்லாம் யாழ் தமிழர் வீடுகளில் இருக்கும் கிராம போன்களில் எந்நேரமும் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவற்றை ஒரு தவம் போலக் கேட்டுக்கொண்டே இருப்பேன். இன்று நான் பண்பலை நிகழ்ச்சியில் பாடல்களைப் பற்றித் தரும் தகவல்களுக்கு அந்தக் கவனிப்பு தான் காரணம். வெடிகுண்டுகள், அலறல்கள், அழுகை ஒலிகள், பதுங்கு குழிகள், யுத்தம், ரத்தம் எனக் கழிந்த இளமைக் காலம். சராசரி இளைஞனுக்கான சந்தோஷங்கள் எதுவும் எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு வாய்க்கவில்லை. கொடுமைகள் கண்டு கொதித்தவர்கள் இயக்கத்தில் சேர்ந்துகொண்டார்கள். நான் சேரவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''துன்பம் துறந்தவன் நான்!''

1984-ல் மதுரை வந்தேன். அங்குள்ள தியேட்டர் கேன்டீன் ஒன்றில் வேலை பார்த்தேன். பிறகு, சென்னை வாசம். பலப்பல பத்திரிகைகளில் பணி புரிந்தேன். விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். என் யாழ்ப்பாணத் தமிழைக் கேட்டு, 'இவன் வாயில் தர்ப்பைப் புல்லை வைக்க’ என்று ஒருவன் என் காது படவே கூறினான். எந்தத் தமிழைவைத்து என்னைக் கேவலப்படுத்தினானோ, அதே தமிழைவைத்து நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். 'யாழ் சுதாகர்’ என்பவன் அப்போதுதான் பிறந்தான். 2003-ல் சூரியன் பண்பலை துவக்கப்பட்டது முதல் இப்போது வரை இரவு நேரங்களில் மெல்லிசை ராகங் களைத் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறேன்!'' என்றவர், சின்ன இடைவெளி விட்டு பேசத் துவங்குகிறார். ''என் மனைவி சாந்தி, மகன் அருண் பாலாஜி. அவர் களைப் பார்க்கிறீர்களா?'' என்று பக்கத்து அறைக்குள் அழைத்துச் செல்கிறார். மலங்க மலங்கப் பார்த்தபடி அம்மாவின் மடியில் படுத்திருக்கிறான் அருண் பாலாஜி. மகனைத் தன் மடிக்கு இடம் மாற்றி, அவனுடைய தலைமுடி கோதியபடி பேசுகிறார் யாழ் சுதாகர். ''அருணுக்கு 15 வயசு. ஆனா, அவனால ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது. பிறந்தப்பவே அவன் இதயத்தில் நாலு துவாரங்கள் இருந்தன. பிறந்த ஏழாவது மாசத்துலயே அவனுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணினாங்க. அதன் பக்க விளைவா சுயநினைவு இழந்துட்டான். மூளை வளர்ச்சியும் இல்லாமப்போச்சு. சராசரி மனிதனுக்குஉண்டான இயல்புகள் என்னங்றதுகூடத் தெரியாம, உணர முடியாம இருக்கான். உடல் வளர்ச்சி மட்டும் இருக்கு. இப்பெல்லாம் 'அப்பா’ன்னு வாயார அவன் என்னைக் கூப்பிடுறதைக் கேட்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு!''- கண்ணீர் துளிர்க்கிறது யாழ் சுதாகருக்கு.

மெல்லிய குரலில் பேச ஆரம்பிக்கிறார் சாந்தி. ''இவனுக்கு எதுவும் சாப்பிடத் தெரியாது. தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கத் தெரியாது. என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாது. இயற்கை உபாதை வந்தா சொல்லவும் தெரியாது. அவனை விட்டுட்டு கொஞ்சம் அங்கே இங்கே நகர்ந்தாலும் வயரைப் புடிச்சு இழுக்குறது, தரையில கிடக்குற சின்னச் சின்ன பிளாஸ்டிக், இரும்பு சாமான்களை வாய்ல போட்டுக்குறதுன்னு ஏதாவது பண்ணிருவான். அதனால எப்பவும் அவனை என் மடியிலயே வெச்சுப் பார்த்துக்குறேன். இதனால வீட்டுக்கு வர்றவங்களைக்கூட 'வாங்க’ன்னு உபசரிக்க முடியாம, எந்த ஒரு நல்லது - கெட்டதுக்கும் போக முடியாம, இந்த நாலு சுவத்துக்குள்ளதான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு!''- குரல் கம்மச் சொல்கிறார்.

''நான் ஒரு கவிதை சொல்லட்டுமா... கொஞ்சம் மனம் சாந்தமாகும்!''- மெலிதாகச் சிரித்துவிட்டு, யாழ் தமிழில் கவிதை வாசிக்கிறார் சுதாகர்.

''தன்னைத் துறந்தவன்
துன்பங்களைத் துறக்கின்றான்.
தன்னைத் திறந்தவன்
சொர்க்கம் திறக்கின்றான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism