'பாபநாசம்' நடிகை ஆசா ஷரத்தின் போலி ஆபாச படங்கள்: போலீசில் புகார்! | Actress Asha Sarath's fake nude video In Whatsapp: Police files complaint

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (25/07/2015)

கடைசி தொடர்பு:16:41 (08/01/2019)

'பாபநாசம்' நடிகை ஆசா ஷரத்தின் போலி ஆபாச படங்கள்: போலீசில் புகார்!

திருவனந்தபுரம்: அண்மையில் வெளியான `பாபநாசம்` திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த நடிகை ஆஷா ஷரத்தின் போலி ஆபாச படங்கள், வாட்ஸ் அப்பில் பரவியதை அடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
நடிகைகளின் ஆபாச படங்கள் 'வாட்ஸ்-அப்' களிலும், இன்டர்நெட்டிலும் பரவுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில்   ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில்  நடிகை ஆஷா ஷரத்தின் ஆபாச படங்களும் தற்போது அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. ஆஷா ஷரத், கமலஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.  மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்திலும்  இவர் இதே வேடத்தில்  நடித்து இருந்தார்.

நேற்று(வெள்ளிக் கிழமை) நடிகை ஆஷா ஷரத், கொச்சி போலீஸ் கமிஷனர் ஜேம்சை சந்தித்து ஒரு புகார் மனுவை  கொடுத்தார்.

அந்த மனுவில், "கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் ஒரு நிர்வாண வீடியோ காட்சி வலம் வருகிறது. அது என்னுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஆஷா ஷரத் நிருபர்களிடம் கூறும்போது,  "எனக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இது போன்ற குற்றங்களில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


டிரெண்டிங் @ விகடன்