சினிமா தயாரிப்பால் மொத்த பணமும் போச்சு: ஒரு நடிகையின் பரிதாபக்கதை!

சென்னை: நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து வெளியான 'பத்ரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா.

தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியானார். மேலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

திடீரென யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்து கொண்டார் பூமிகா. அதன்பிறகு பட வாய்ப்புகள் அமையாமல் நடிப்பதை நிறுத்திவிட்ட பூமிகா, பின்னர் தெலுங்கில் ஓரிரு படங்களைத் தயாரித்தார். தான் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் செலவழித்து படம் தயாரித்ததில் அவருக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்பும் இல்லாமல், பண நஷ்டமும் ஏற்பட்டதால் சில மாதங்களாகவே அவரை கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் காணமுடியவில்லை. தற்பொழுது அவரும், கணவர் பரத்தும் துபாயில் வசிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு யோகா பள்ளி நடத்துவதாகச் கூறப்படுகிறது.

சினிமாவில் நடித்துச் சம்பாதித்த பணம் எல்லாம் போனதோடு,  நிறையக் கடன்களும் இருப்பதால் யோகா பள்ளி நடத்துகிறாராம். மன அமைதியோடு பணமும் சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகைகள் என்றால் செல்வாக்கானவர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். மாறாக இவ்வாறு கஷ்டப்படுகிறவர்களும் சரிபாதிக்கு மேல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!